Showing posts with label குழந்தைகளுக்கான கதைகள். Show all posts
Showing posts with label குழந்தைகளுக்கான கதைகள். Show all posts

எலி தப்பித்து விட்டது.

ஒரு வீட்டில் டீட்டீ என்ற எலி தனது இரவு நேர இரைதேடப் புறப்பட்டுக்கொண்டிருந்தது. வளையை விட்டு  தலையை உயர்த்திப்பார்த்தது.
 வீட்டின் எஜமானனும் எஜமானியும் ஒரு பார்சலைப் பிரித்துக்கொண்டிருந்தார்கள்.


ஏதோ நாம் சாப்பிடக்கூடிய பொருள்தான் உள்ளே இருக்கும் என்று ஆவலோடு பார்த்தது டீட்டீ.அவர்கள் வெளியே எடுத்தது ஒரு எலிப்பொறி.

 அதைப்பார்த்ததும் டீட்டீக்கு மூச்சே நின்று விடும் போல இருந்தது.
 உடனே ஒரே ஓட்டமாக வீட்டில் இருந்த கோழியிடம் போய் சொன்னது "பண்ணையார் ஒரு எலிப்பொறி வாங்கி வந்துள்ளார். எனக்கு பயமாக இருக்கிறது."
கோழி விட்டேற்றியாகச் சொன்னது" உன்னைப் பொறுத்தவரை கவலைப்பட வேண்டிய விஷயம்தான்.நல்ல வேளையாய் இந்த எலிப்பொறியால் எனக்கு ஒரு பிரச்சினையும் இல்லை."


உடனே அது பக்கத்தில் இருந்த வான்கோழியிடம் அதே விஷயத்தைப் போய்ச் சொல்லியது. வான்கோழியும் அதேபதிலைச் சொல்லியதோடு "நான் எலிப்பொறியயெல்லாம் பார்த்து பயப்பட மாட்டேன்." என்றது.


மனம் நொந்த டீட்டீ அடுத்து பக்கத்தில் இருந்த ஆட்டிடம் போய் அதே விஷயத்தைச் சொல்லியது. ஆடும் அதேபதிலைச் சொல்லியது. அத்தோடு நின்றிருந்தாலும் பரவாயில்லை "எலிப்பொறியை பார்த்து என்னையும் பயப்படச் சொல்கிறாயா?" என்று நக்கலும் அடித்தது.


அன்று இரவு எலிப்பொறியில் ஒரு பொரித்த மீன் துண்டை வைத்து விட்டு பண்ணையாரும் அவர் மனைவியும் தூங்கப் போயினர்.

ஒரு அரை மணி நேரத்தில் டமால் என்றொரு சத்தம்.எலி மாட்டிக்கொண்டுவிட்ட். து என்று பண்ணையார் மனைவி ஓடிவந்து எலிப்பொறியைத் கையில் தூக்கினாள். எலிக்கு பதிலாக பாதி மாட்டியிருந்த பாம்புஒன்று எஜமானியம்மாளைக் கடித்து விட்டது.


எஜமானியம்மாளை உடனே ஆஸ்பத்திரிக்கு எடுத்துக்கொண்டு ஓடினார்கள். விஷத்தை முறிக்க இன்ஜெக்சன் போட்டபின்னும் பண்ணையார் மனைவிக்கு ஜுரம் இறங்கவேயில்லை.

 அருகில் இருந்த ஒரு மூதாட்டி " பாம்புக் கடிக்குப் பின்னால் வரும் காய்ச்சலுக்கு "சிக்கன் சூப் வைத்துக்கொடுத்தால் நல்லது" என்று யோசனை சொன்னாள்.
கோழிக்கு வந்தது வினை. கோழி அடித்து சூப் வைக்கப்பட்டது. கோழி உயிரை விட்டது.


அப்போதும் பண்ணையார் மனைவியின் ஜுரம் தணியவில்லை. உறவினர்கள் சிலர் வந்தார்கள்.அவர்களுக்குச் சமைத்துப்போட வான்கோழியை அடித்தார்கள். வான்கோழியும் உயிரை விட்டது.

சில நாட்களில் பான்னையாரம்மாவின் உடல் நலம் தேறியது.
பண்ணையார் மனைவி பிழைத்ததைக் கொண்டாட ஊருக்கே விருந்து வைத்தார்.

 இந்த முறை ஆட்டின் முறை. விருந்தாக ஆடும் உயிரை விட்டது.

நடந்த அத்தனை நிகழ்வுகளையும் டீட்டீ வருத்ததோடு கவனித்துக் கொண்டிருந்தது.


பண்ணையார் மனைவியின் பாம்புக்கடிக்குக் காரணமான எலிப் பொறியைத் தூக்கிப் பரணில் போட்டு விட்டார்.

எலி தப்பித்து விட்டது.
______________________________
நீதி ::-- அருகில் இருப்பவர்கள் தனக்கொரு பிரச்சினை என்று வந்தால் "என்ன" என்றாவது கேளுங்கள் ஏனென்றால் யாருக்கு என்ன பிரச்சினை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியாது.

 அடுத்தது அந்தப் பிரச்சினை நமக்கும் வரலாம். அடுத்த முறை நம்முடையதாகவும் இருக்கலாம்.

நல்ல நண்பன்

ஒரு ஊரில் ஒரு இளைஞன் இருங்தான். அவன் எப்போதும் கோபப்படும் சுபாவத்தை கொண்டவன். ஒரு முறை அவனது நண்பன் அவனிடம் ஆணிகள் நிரம்பிய பையை கொடுத்தான். நீ எப்போதெல்லாம் கோபப்படுகிறாயோ அப்போதெல்லாம் ஒரு ஆணியை இந்த சுவற்றில் அடிக்கவும் என்றான்,

இளைஞ்சனும் அப்படியே செய்து வந்தான். முதல் நாள் அவன் 35 ஆணிகளை அடித்தான், மறு நாள் 30 என்று இப்படியாக குறைந்து கொண்டு வந்தது. சில நாட்கள் கழித்து அவன் கோபப்படுவதை நிறுத்தி விட்டான். அதணால் அவன் ஆணிகளை அடிக்கவில்லை. அதை அவனது நண்பன் பார்த்து பெருமை பட்டான். அவனை முழுவதுமாக திருத்த ஆசைப்பட்ட அவன் அவனிடம் அடித்த ஆணிகளை பிடுங்க சொன்னான்.

இளைஞ்ஞனும் அப்படியே செய்தான். அதை பார்த்த அவன் நண்பன் அவனிடம் சொன்னான்.

என் நண்பனே. நீ நான் சொன்னபடியே எல்லா வேலைகளையும் செய்தாய். இப்போது நீ அடித்த ஆணிகள் பிடுங்கப்பட்டு விட்டன. ஆணால் ஆணி அடித்த இடங்களில் உள்ள ஓட்டைகளை பார்.இந்த சுவர் முன்னால் இருந்த மாதிரி இல்லை. எல்லா இடங்களிலும் ஓட்டைகள் உள்ளன. அது போலத்தான் நீ கோபத்தில் சொல்லும் வார்த்தைகளும், செயல்களும் ஒரு வடுவை உன்டாக்கி விடும். நீ என்னதான் உன் செயல்களுக்கு மன்னிப்பு கேட்டாலும் அந்த வடு மாறாது, மறையாது. நீ வார்த்தைகளால் உன்டாக்கும் வடுவிற்கும், செயல்காளால் உன்டாக்கும் வடுவிற்கும் எந்த ஒரு வித்தியாசமும் இல்லை.

என் நண்பனே, உண்மையை சொல்லப் போனால் நண்பர்கள் ஒரு அரிய பொக்கிஷங்கள். அவர்கள் உன்னை சிரிக்க வைப்பார்கள். உன் வாழ்க்கையில் நீ உயர தட்டிக் கொடுப்பார்கள். நீ சொல்வதை காது கொடுத்து கேட்ப்பார்கள். நீ நல்ல நிலமைக்கு வரும் போது உன்னை புகழ்வார்கள். அதையும் இதைய பூர்வமாக செய்வார்கள். அதை தான் நான் இப்போது செய்தேன்,

நீதி: தீயினால் சுட்ட புண் உள்ளாறும் ஆறாதே
நாவினால் சுட்ட வடு

நன்றி: தமிழர்களின் எண்ணகளம்

முன்யோசனை

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும்
நரி ஒன்று தாகத்தால் தவித்தது.

எங்கும் தண்ணீர் கிடைக்கவில்லை.

என்ன செய்வது…?

தண்ணீரைத் தேடி அலைந்தது.

தூரத்தில் கிணறு ஒன்று இருப்பதைப் பார்த்தது. கிணற்றின் அருகே சென்றது, கிணற்றில், கயிற்றின் ஒரு முனையில் வாளி ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது. அதைக் கண்ட நரி, வாளியில் தாவி ஏறி அமர்ந்தது. உட்னே வாளி ‘விரி’ரெனக் கிணற்றின் உள்ளே சென்றது. நரி வயிறு நிறையத் தண்ணீரைக் குடித்தது. தாகம் தணிந்தபின் மேலே பார்த்தது. ‘எப்படி வெளியேறுவது’ என்று யோசிக்கத் தொடங்கியது.

‘மேலேயிருந்து யாராவது கயிற்றை இழுத்தால்தானே என்னால் மேலே போக முடியும். என்ன செய்வது?’

நேரம் ஆக ஆக நரிக்கு அச்சம் தோன்றியது.

அந்த நேரம் பார்த்துக் கிணற்றின் அருகே ஓநாய் ஒன்று வந்தது. கிண்ற்றின் உள்ளே எட்டிப் பார்த்தது.

அங்கு நரி இருப்பதைக் கண்டது.

“அடடா! நரி ஐயா! உள்ளே என்ன செய்கிறீர்கள்?” எனக் கேட்டது.

“நான் இப்போது சொர்க்கத்தில் இருக்கிறேன். என்ன அருமையான இடம் தெரியுமா? இங்கு மீன், கோழி, ஆடு எல்லாம் தருகிறார்கள்” என்றது நரி

ஓநாய் சற்றும் யோசிக்காமல் கயிற்றின் மறுமுனையில் கட்டப்பட்டிருந்த வாளிக்குள் குதித்தது. அந்த வாளி ‘சரசர’வென்று கிணற்றின் உள்ளே போயிற்று. அப்போது நரி அமர்ந்திருந்த வாளி மேலே வந்தது.

நரி மேலே வரும் போது பாதி வழியில் ஓநாயைப் பார்த்தது.

“நான் இப்போது சொர்க்கத்திற்கும் மேலான இடத்திற்குப் போகிறேன்”. என்று கூறிக் கொண்டே மேலே சென்றது. மேலே வந்ததும் கிணற்றுச் சுவரின் மேலே தாவிக் குதித்துத் தப்பியோடியது.

பாவம் ஓநாய்…………….!

ஒரு செயலைச் செய்வதற்கு முன் பல முறை யோசிக்க வேண்டும் …………………..

ஆட்டுக்குட்டியின் தந்திரம்!

மந்தையிலிருந்து  பிரிந்து போன ஒரு ஆட்டுக் குட்டியை
ஓநாய் துரத்தியது.

தப்பிக்க முடியாது என்று தீர்மானமாகத்
தெரிந்ததும், ஆட்டுக்குட்டி, ஓநாயைப் பார்த்து, “”நான்
இனித் தப்ப முடியாது என்பது எனக்குத் தெரியும்.
நான் இன்னும் சிறிது நேரம்தான் வாழப் போகிறேன்.
இறப்பதற்கு முன் என்னை மகிழ்ச்சியாகச் சிறிது நேரம் இருக்க
அனுமதிப்பாயா? சிறிது நேரம் பாட்டுப் பாடேன் நான்
ஆடுகிறேன்,” என்று கேட்டது.



ஓநாயும் அதற்குச் சம்மதித்து, தனது குழலை எடுத்து சத்தமாக
வாசித்தது; ஆட்டுக் குட்டியும் நடனமாட ஆரம்பித்தது.
ஆனால், சில நிமிடங்களுக்குள்ளேயே குழல் இசை கேட்டு,
ஆட்டு மந்தையை மேய்ப்பவர்கள் ஓடி வந்து ஓநாயை விரட்டி
அடித்தனர். ஓடிக் கொண்டே ஓநாயும், “எனக்கு இது தேவைதான்.
வேட்டையாடுவதுதானே என்னுடைய தொழில். அதை விடுத்து
குழல் ஊதியது தவறுதான்!’ என்று சொல்லி வருந்தியது.

—-
நீதி! அவரவர் செய்ய வேண்டிய தொழிலை விட்டுவிட்டு
அடுத்தவர் தொழிலை செய்வது ஆபத்து.நன்றி;சிறுவர் மலர்

தனக்கு தானே ஆப்பு என்பது இதுதானோ ?



ஒரு தச்சன் மரத்தை அறுத்துக் கொண்டிருந்தான்.சாப்பாட்டு நேரம் வந்ததும் அறுத்த பிளவில் சக்கையைத் திணித்து விட்டுச் சாப்பிடப் போனான்.மரத்தின் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தது ஒரு குரங்கு: தச்சன் போனதும் கிழே இறங்கி வந்து சக்கையை ஆட்டி அசைத்துப் பிடுங்கியது.சக்கை வெளியே வந்ததும் பிளவாய் இருந்த மரம் படீரென்று ஒன்று சேர்ந்தது.அந்தப் பிளவில் அகப்பட்டிருந்த குரங்கின் காலும்,வாலும் நசுங்கிப் போயின.

விஷமம் செய்வது சுலபம்,அதனால் ஏற்படும் கெடுதலில் இருந்து தப்புவது கடினம்

உயிர் காக்கும் தந்திரம்

நரி பூனையிடம் தற்பெருமை பேசிக்கொண்டது. “எனக்கு பகைவர்களிடமிருந்து தப்பிக்க நூறு தந்திரங்கள் தெரியும். உனக்கு?”

“எனக்கு ஒரே ஒரு தந்திரம் தான் தெரியும்.” என்றது பூனை.

அப்போது பெரிசாக சப்தம் கேட்டது. ஒநாய்களும், வேடர்களும் துரத்தி வரும் இரைச்சல் கேட்டது. பூனை லபக்கென்று மரத்தில் பாய்ந்து உச்சாணியில் ஏறிக்கொண்டது.

நரிக்கு தன் நூறு தந்திரங்களில் எந்தத் தந்திரத்தைப் பயன் படுத்துவது என்ற யோசனையில் காலதாமதமாகி மாட்டிக்கொண்டு உயிர் துறந்தது.

நீதி : சந்தேகத்துக்குரிய நூறு வழிகளைவிட பத்திரமான ஒரு வழியே மேல்.