நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்/

நவீன தமிழ் அருஞ்சொற்பொருள்/   GLOSSARY OF MODERN TAMIL

A - வரிசை

ABACUS - மணிச்சட்டம்
ABBREVIATION - குறுக்கம்
ABDUCTION - ஆட்கடத்தல்
ABROAD - வெளிநாடு
ACCESSORY - துணைக்கருவி
ACCOUNTANT - கணக்கர்
ACORUS - வசம்பு
ACQUISITION - கையகப்படுத்தல்
ACRE - இணையேர்
ACROBAT, ACROBATICS - கழைக்கூத்து, கழைக்கூத்தாடி
ACT (OF LAW) - கட்டளைக்கோல், கட்டளைச்சட்டம்
ACTINIUM - நீலகம்
ACTIVITY - செய்கைப்பாடு
ACRYLIC - ஆக்கிரம்
ADAM'S APPLE - கண்டம்
ADAPTATION (DRAMA, MUSIC ETC) - தழுவல்
ADHESION - ஒட்டுப்பண்பு
ADHESIVE- பசைமம்
ADJECTIVE - பெயர் உரிச்சொல்
ADRENAL GLAND, ADRENALINE - அண்ணீரகம், அண்ணீர்
ADVANCE (MONEY) - முன்பணம், உளவாடம்
ADVERB - வினை உரிச்சொல்
AERIAL (ANTENNA) - வானலை வாங்கி
AEROBRIDGE - விமானப் பாலம், வான்பாலம்
AEROGRAMME - வான்மடல்
AEROPLANE - விமானம், பறனை
AEROSOL - சொட்டூதி
AGENT - முகவர்
AGENCY - முகமையகம்
AGRICULTURAL TRACT - பானல்
AGRICULTURE - கமம், விவசாயம், வேளாண்மை
AIDS (ACQUIRED IMMUNO DEFICIENCY SYNDROME) - வேட்டைநோய், உடற்தேய்வு நோய்
AILERON - இரக்கைத் துடுப்பு
AIR - காற்று
AIR BAG - (காப்புக்) காற்றுப்பை
AIR-CONDITIONER - குளிரூட்டி, குளிர்சாதனம், பனிக்காற்றுப்பெட்டி
AIR-COOLER - காற்றுப் பெட்டி
AIR FRESHENER - காற்றினிமைத் திவலை
AIR MAIL - வானஞ்சல்
AIR POCKET - காற்று வெற்றிடம்
AIR WAYBILL - வான் பார‌ப்ப‌ட்டி
AIRCRAFT - வானூர்தி
AIRCRAFT CARRIER - விமானம் தாங்கி கப்பல்
AIRHOSTESS - விமானப்பணிப்பெண்
AIRLINE - வான்வழி
AIRLINER - முறைவழி விமானம், முறைவழி வானுர்தி
AIRPORT - பறப்பகம், வானூர்தி நிலையம், வானிலையம்
AIRSPACE - வானெல்லை
AIRWORTHINESS - பறத்தகுதி
AIRWORTHY - பறத்தகுதியுள்ள
ALARM, ALARM CLOCK - அலறி, அலறிக் கடிகாரம்
ALARM CHAIN (IN TRAIN) - அபாயச் சங்கிலி
ALBINO, ALBINISM - பாண்டு, பாண்டுமை
ALBUM - செருகேடு
ALBUMIN - வெண்புரதம்
ALBURNUM - மென்மரம்
ALCHEMIST, ALCHEMY - இரசவாதி, இரசவாதம்
ALCOHOL - சாராயம்
ALFALFA - குதிரை மசால்
ALGAE - நீர்ப்பாசி
ALIGN, ALIGNMENT - சீரமை, சீரமைவு
ALLERGEN, ALLERGY - ஒவ்வான், ஒவ்வாமை
ALLIGATOR - ஆட்பிடியன்
ALLOY - உலோகக் கலவை
ALMOND - பாதாம்
ALUM - படிகாரம்
ALUMINIUM - அளமியம்
AMATEUR - அமர்த்தர்
AMBULANCE - திரிவூர்தி
AMERICIUM - அமரகம்
AMMONIA - நவச்சாரியம்
AMMONIUM CHLORIDE - நவச்சார வாயு/வளி
AMPLITUDE MODULATION (AM) / MEDIUM WAVE (MW) - மதியலை
ANACONDA - ஆனைக்கொன்றான், யானைக்கொன்றான்
ANCHOR - நங்கூரம்
ANDROGEN - ஆண்மையூக்கி
ANESTHETIC - உணர்வகற்றி
ANIMATION - அசைப்படம்
ANISE - சோம்பு
ANKLE - கணுக்கால்
ANT-EATER - எறும்புதின்னி
ANTENNA (TRANMIT OR RECEIVE) - அலைக்கம்பம்
ANTENNA (AERIAL) - வானலை வாங்கி, அலைவாங்கி
ANTHANUM - அருங்கனியம்
ANTIMONY - கருநிமிளை, அஞ்சனம்
ANTHROPODA - கணுக்காலி
ANTONYM - எதிர்ப்பதம்
APARTMENT (BLOCK) - அடுக்ககம்
APE - கோந்தி
APPLE - குமளிப்பழம் / அரத்திப்பழம்
APPLE CIDER VINEGAR - அர‌த்தி நொதிக்காடி, அர‌த்திக்காடி
APPLAUSE - கரவொலி
APPLIANCE - உபகரணம்
APPRECIATION - நயத்தல், மெச்சல்
APRICOT - சக்கரை பாதாமி
APRIL - மீனம்-மேழம்
APPOINTMENT (JOB) - பணி அமர்த்தம்
APPOINTMENT (MEETING) - (சந்திப்பு) முன்பதிவு
APPROACH (v.) - அண்மு (வினைவேற்சொல்), அணுகு (வினைவேற்சொல்)
APRON (AIRPORT) - ஏற்றிடம்
APRON (KITCHEN) - சமயலுடை
AQUAMARINE - இந்திரநீலம்
ARBITRATION POWERS - யதேச்சாதிகாரம், மேலாண்மையுரிமை
ARC LAMP - வில் விளக்கு
ARCH - தோரணவாயில், வளைவு
ARCH-BISHOP - பேராயர்
ARCH-DIOCESE - பேராயம்
ARECANUT - பாக்கு
ARENA - கோதா
ARGON - இலியன்
ARMED - ஆயுதபாணி
ARMNAMENT - படைக்கலம்
ARREARS - ஆண்டைச்சிகை, நிலவுத்தொகை
ARROGANCE - ஆணவம், தெனாவெட்டு
ARROWROOT - கூவை
ARSENIC - பிறாக்காண்டம்
ARTERY - தமனி
ARTILARY - பீரங்கிப் படை
ARTHRITIS - கீல்வாதம், மூட்டுவாதம்
ARTISAN - கைவினைஞர்
ASAFOETIDA - பெருங்காயம்
ASBESTOS - கல்நார்
ASPARAGUS - தண்ணீர்விட்டான்
ASPHALT - நிலக்கீல்
ASSASINATION - வன்கொலை
ASSEMBLY (MANUFACTURING) - ஒன்றுகூட்டல்
ASSEMBLY (STRUCTURE) - கட்டகம்
ASSEMBLY-LINE - ஒன்றுகூட்டு வரிசை
ASSUMPTION - தற்கோள்
ASSURANCE - காப்பீட்டுறுதி
ASTEROID - சிறுகோள்
ASTROLOGY - ஐந்திரம்
ASTONISHMENT - திகைப்பு, ஆச்சரியம்
ASTRINGENT - துவர்ப்பி
ASTRONAUT - விண்வெளி வீரர்
AUGUST - கடகம்-மடங்கல்
AUTHENTICITY, AUTHENTIC - சொக்க(மான), சொக்கம்
ATTAIN (v.) - எய்து (வினை வேற்சொல்)
ATTENDANT - ஏவலாள்
ATHLETICS - தடகளம்
ATOL - பவழத்தீவு
ATOMIC BOMB - அணுகுண்டு
ATONEMENT - பரிகாரம், பிராயச்சித்தம்
AUDIO - கேட்பொலி
AUDIO-CASSETTE - ஒலிப்பேழை
AUTOMATIC TELLER MACHINE (ATM) - தானியங்கி பணவழங்கி
AUTOMOBILE - உந்துவண்டி, தானுந்து
AUTORICKSHAW - தானி
AUTUMN - கூதிர்காலம், இலையுதிர்காலம்
AQUA REGIA - அரசப்புளியம்
AVAILABLE, AVAILABILITY - கிடைக்கும், கிடைக்கப் பெறுதல்
AVALANCHE - பனிச்சரிவு
AVENUE - நிழற்சாலை
AVIATION - பறப்பியல்
AVIONICS - பறப்பு மின்னணுவியல்
AVOCADO - வெண்ணைப் பழம்
AXLE - இருசு, அச்சாணி

B - வரிசை
BABCHI SEEDS - கற்பகரிசி கற்பூரவரிசி
BACKBITING - புறங்கூறல்
BACTERIA - குச்சியம்/குச்சியங்கள்
BACKGAMMON - சொக்கட்டான்
BACKWATER - உப்பங்கழி, காயல், கடற்கழி
BACKYARD - புறங்கடை, புழக்கடை, கொல்லை
BACON - உப்புக்கண்டம்
BADMINTON BALL - பூப்பந்து
BADGE - வில்லை
BAKER - வெதுப்பகர்
BAKERY - அடுமனை, வெதுப்பகம்
BAIT - இரை
BALANCE SHEET - ஐந்தொகை
BALCONY - மேல்மாடம், மேன்மாடம், உப்பரிகை
BALL - பந்து
BALL BADMINTON- பூப்பந்தாட்டம்
BALL BEARING - மணித்தாங்கி
BALL-POINT PEN - (பந்து)முனை எழுதுகோல்
BALOON - வளிக்கூண்டு, வாயுக்கூண்டு, புகைக்கூண்டு
BANDAGE - கட்டு
BANK (MONEY) - வைப்பகம்
BANK (RIVER) - ஆற்றங்கறை
BANNER - பதாகை
BANYAN TREE - ஆலமரம்
BAR (DRINKS) - அருந்தகம்
BAR CODE - பட்டைக் குறியிடு
BARBER - நாவிதன்
BARBADOS CHERRY - சீமைநெல்லி
BARGAIN - பேரம் பேசு
BARIUM - பாரவியம்
BARK (TREE) - மரப்பட்டை
BARLEY - வால்கோதுமை
BARRACUDA - சீலா மீன்
BARRISTER - வழக்குரைஞர்
BASE PAY - தேக்கநிலை ஊதியம்
BASEBALL - அடிப்பந்தாட்டம்
BAT (ANIMAL) - வவ்வால்
BAT (SPORT) - மட்டை
BATALLION - பட்டாளம்
BATH-TUB - குளியல் தொட்டி
BATTLE-FIELD - போர்க்களம், செருக்களம்
BATSMAN (CRICKET) - மட்டையாளர்
BATTER (BASEBALL) - மட்டையாளர்
BAY - விரிகுடா
BEAM - உத்திரம்
BEAVER - நீரெலி
BEE'S WAX - தேன்மெழுகு
BEER - தோப்பி
BEETROOT - செங்கிழங்கு
BELLY-WORM - நாங்கூழ், நாங்குழு
BELT (WAIST) - இடுப்பு வார்
BERRY - சதைக்கனி
BERYLIUM - வெளிரியம்
BIBLE - வேதாகமம்
BICEPS BRANCHII MUSCLE - இருதலைப்புயத்தசை
BICEPS FEMORIS MUSCLE - இருதலைத்தொடைத்தசை
BICEPS MUSCLE - இருதலைத் தசை
BICYCLE - மிதிவண்டி,
BILBERRY - அவுரிநெல்லி
BILE - பித்தம்
BILL - விலைப்பட்டியல்
BILLIARDS - (ஆங்கிலக்) கோல்மேசை
BILLION - நிகற்புதம்
BINOCULAR - இரட்டைக்கண்நோக்கி
BISCUIT - மாச்சில்
BISMUTH - அம்பரை, நிமிளை, மதுர்ச்சி
BISON - காட்டேணி
BIT - துணுக்கு
BLACK - கருப்பு, கார்
BLACK GRAM - உளுத்தம் பருப்பு
BLACK EYED PEAS - வெள்ளை காராமணி
BLACKBERRY - நாகப்பழம்
BLACKBUCK - வேலிமான்
BLACKSMITH - கொல்லர்
BLADE - அலகு
BLEACHING POWDER - வெளுப்புத் தூள், வெளிர்ப்புத் தூள்
BLENDER - மின்கலப்பி
BLISTER PACK - கொப்புளச் சிப்பம்
BLUE - நீலம்
BLUEBERRY - அவுரிநெல்லி
BLUE VITRIOL - மயில்துத்தம்
BLUE-BELL - நீலமணி
BLUNT - மொண்ணையான, மொண்ணையாக
BLOOD VESSEL - குருதி நாடி, ரத்தக் குழாய்
BLOTTING PAPER - உறிஞ்சுதாள்
BOA (CONSTRICTOR) - அயகரம்
BOAT - தோணி, படகு
BOAT HOUSE - படகுக் குழாம்
BOILER - கொதிகலன்
BODYGUARD - மெய்க்காப்பாளர்
BOMB - வெடிகுண்டு
BONE, BONE MARROW - எளும்பு, மஜ்ஜை
BOOK - புத்தகம், நூல்
BOOK-KEEPING - கணக்குப்பதிவியல்
BOOMERANG - சுழல்படை
BOOT (FOOTWEAR) - ஜோடு
BOTHERATION - உபாதை
BORAX - வெண்காரம்
BORDER - எல்லை
BOREDOM - அலுப்பு
BOREWELL - ஆழ்குழாய் கிணறு
BORING - அலுப்பான
BORON - கார்மம்
BORROW - இரவல் வாங்கு
BOTTLE GOURD - சுரைக்காய்
BRAILLE - புடையெழுத்து
BRAKE - நிறுத்தான், நிறுத்தி
BRASS - பித்தளை
BRASSIERE - மார்க்கச்சு
BRAVADO - சூரத்தனம்
BREAD - ரொட்டி
BREWER'S YEAST - வடிப்போனொதி
BRIEFCASE - குறும்பெட்டி
BRIDGE - பாலம், வாராவதி
BRINJAL - கத்திரிக்காய்
BRITTLE, BRITTLENESS - நொறுங்கும், நொறுங்குமை
BROADBAND, BROADBAND CONNECTION - அகண்ட அலைவரிசை, அகண்டலைவரிசை இணைப்பு
BROCCOLI - பச்சைப் பூக்கொசு
BROKEN BEANS - மொச்சைக் கொட்டை
BROKER - தரகர்
BROKERAGE FIRM - தரககம்
BROMINE - நெடியம்
BRONZE - வெண்கலம்
BROOCH - அணியூக்கு
BRUISE - ஊமையடி
BRUSSELS SPROUTS - களைக் கோசு
BUBBLE WRAP - குமிழியுறை, குமிழிச் சிப்பம்
BUBONIC PLAGUE - அரையாப்பு(க்கட்டி)க் கொள்ளைநோய்
BUDGET - பொக்கிடு (வினை), பொக்கீடு
BUG (SOFTWARE) - இடும்பை
BUGLE - ஊதுகொம்பு
BULB (ELECTRIC) - மின்குமிழ்
BULLDOZER - இடிவாரி
BUN - மெதுவன்
BUNDLE - பொதி
BUOY (OF AN ANCHOR) - காவியா, காவியக்கட்டை
BURIAL URN - முதுமக்கள் தாழி
BURNER - விளக்குக்காய்
BUS - பேருந்து
BUS STOP - பேருந்து தரிப்பு, பேருந்து நிறுத்தம்
BUSH - புதர், பற்றை
BUSH (MECHANICAL) - உள்ளாழி
BUSINESS VISA - வணிக இசைவு
BUSY - வேலையாக/கம்மக்கையாக, வேலையான/கம்மக்கையான
BUTTER - வெண்ணெய்
BUZZER - இமிரி

C - வரிசை
CAB - வாடகைச் சீருந்து
CABBAGE - முட்டைக் கோசு
CABLE - வடம்
CABLE CAR - கம்பிவட ஊர்தி
CABIN - சீற்றறை
CACTUS - சப்பாத்திக் கள்ளி
CADMIUM - நீலீயம்
CAECIUM - சீரிலியம்
CAFFEINE - வெறியம்
CAKE - இனியப்பம்
CAKE SHOP - இனியப்பகம்
CALCIUM - சுண்ணம்
CALENDAR - நாள்காட்டி
CALIPER - நழுவிடுக்கி
CALL OPTION - வாங்கல் சூதம்
CALL TAXI - அழைப்பூர்தி
CALCIUM - சுண்ணம்
CALCULATOR - கணிப்பான்
CALUMNY - வசை
CAMCORDER - நிகழ்பதிவி
CAMEL - ஒட்டகம்
CAMERA - நிழற்படக்கருவி/நிழற்படவி
CAMPHOR - கற்பூரம்
CANAL- கால்வாய்
CANINE - கோரைப்பல்/நாய்ப்பல்
CANNIBAL, CANNIBALISM - தன்னினத்தின்னி, தன்னினத்தின்னல்
CANNON - பீரங்கி
CANOE - வள்ளம்
CANOPY - கவிகை
CANTELEVER - துருத்துவிட்டம்
CANTONMENT - பாளையம், படையிடம்
CANVAS - கித்தான்
CANVAS SHOE - கித்தான் சப்பாத்து
CANYON - ஆற்றுக்குடைவு
CAPE - கடல்முனை, நிலமுனை, கரைக்கூம்பு
CAPSTAN - நங்கூரவுருளை
CAPTAIN (FLIGHT) - குழுத்தலைவர்
CAPTAIN (SHIP) - மீகாமர்
CAPTAIN (SPORT) - அணித்தலைவர்
CAR - சீருந்து
CAR RENTAL - சீருந்து இரவல், சீருந்து இரவலகம்
CAR VACUUM - சீருந்து தூசி உறிஞ்சி/சீருந்து வெற்றிடவுறிஞ்சி
CARAMEL - எரிசர்க்கரை
CARBURETOR - காற்றுக்கலக்கி
CARBOHYDRATE - மாவுச்சத்து
CARBON - கரிமம்
CARBON PAPER - கரிப்படித்தாள்
CARBORUNDUM - தோகைக்கல்
CARD READER - அட்டைப் படிப்பி
CARDAMOM - ஏலக்காய்
CARETAKER GOVERNMENT - காபந்து அரசு
CAROL - ஞானகீதம்
CARPENTER - தச்சர்
CARPET - தரைப்பாய்
CARRIER TRUCK - தாங்குந்து
CARROM (BOARD) - சதுப்பலகை
CARROT - மஞ்சள் முள்ளங்கி/செம்மங்கி/
CARTILEGE - குடுத்தெலும்பு
CARTOON - கருத்துப்படம்
CAROUSAL (AMUSEMENT) - குதிரை ராட்டிணம்
CAROUSAL (CONVEYOR) - சக்கரவியூகம்
CASUARINA - சவுக்கு
CASH - காசு, ரொக்கப்பணம்
CASHIER - காசாளர்
CAST IRON - வார்ப்பிரும்பு
CASTING - வார்ப்படம்
CASTLE IN THE AIR - மனக்கோட்டை
CAT - பூனை
CAT'S EYE - வைடூரியம்
CAT FISH - கெளுத்தி
CATALYST - வினையூக்கி
CATALYTIC CONVERTER - மாசகற்றி
CATARACT - கண்புரை
CATERING - ஊட்டநெறி
CAT'S EYE - வைடூரியம்
CAT FISH - கெளுத்தி
CATECHIN - காசிச்சத்து
CATECHU - காசிப்பட்டை
CAULIFLOWER - பூக்கோசு, பூங்கோசு
CAUSTIC SODA - சாடாக் காரம்
CAVALRY - குதிரைப்படை
CAYENNE PEPPER - சீமைப்பச்சைமிளகாய், பேய்மிளகாய்
CEDAR - தேவதாரு மரம்
CEILING - உட்கூரை
CEILING FAN - கூரை விசிறி
CELERY - சிவரிக்கீரை
CELL PHONE (MOBILE PHONE) - கைபேசி, நகர்பேசி, அலைபேசி
CELLULOSE - மரநார்
CEMENT - சீமைக்காரை, பைஞ்சுதை
CENTIGRADE SCALE - சதாம்ச அளவு
CERAMIC TILE - வனையோடு
CERAMIC - வனைபொருள்
CEREMONY - சடங்கு, சடங்காச்சாரம், வினைமுறை
CERTIFY, CERTIFICATE - சான்றளி, சான்றிதழ்
CESIUM - சீரிலியம்
CESS - தீர்வை
CEYLON PLUM - சொத்தைக்களா
CHAIR - கதிரை, நாற்காலி
CHALK - சுண்ணங்கட்டி
CHALLENGE - அறைகூவல்
CHAMOMILE - சீமைச்சாமந்தி
CHAOS - கசகு
CHARGER - மின்னூட்டி
CHAUVINISM - குறுகியவாதம்
CHAUVINIST - குறுகியவாதி
CHAYOTE - சௌச்சௌ, சவுச்சவ்
CHECK-IN - பயண் ஆயத்தம்
CHECK-IN (LUGGAGE), CHECKED LUGGAGE - சரக்கிடு, சரக்கிட்டச் சுமை(கள்)
CHECK-POST - சோதனைச் சாவடி
CHECQUE - காசோலை
CHECQUE-BOOK - காசோலை ஏடு
CHEESE - பாலாடைக்கட்டி
CHEESE SPREAD - பாலாடைத் தடவை
CHEETAH - சிறுத்தைப்புலி
CHEMIST - வேதியியலர்
CHERRY - சேலா(ப்பழம்)
CHESS - சதுரங்கம்
CHICADA - சிள்வண்டு
CHICKEN-POX - சின்னம்மை, சிச்சுலுப்பை
CHICKPEA - கொண்டைக்கடலை
CHICORY - காசினிவிரை
CHIKUNGUNYA - மூட்டுக்காய்ச்சல்
CHIMNEY - புகைப்போக்கி
CHIPS (EATABLE) - சீவல்
CHISEL - உளி
CHIVES - உள்ளித்தழை, பூண்டுத்தழை
CHLORINE - பாசிகை, லவணசாரம்
CHLORINATION - பாசிகவூட்டல்
CHLOROFORM - ஒருக்கொள்ளிய முப்பாசிகம்
CHOCOLATE - காவிக்கண்டு
CHOKER (NECKLACE) - அட்டிகை
CHOLOROPHYL - பச்சையம்
CHOLERA - வாந்திபேதி
CHOLESTROL - ரத்தக் கொழுப்பு
CHRISTMAS - நத்தார்
CHROMIUM - நீலிரும்பு
CHRONOMETER - காலமானி
CIGAR - சுருட்டு
CIGARETTE - தம், வெண்சுருட்டு
CINNAMON - லவங்கப் பட்டை
CIRCUIT BREAKER - சுற்று முறிப்பான்
CIRCULAR - சுற்றரிக்கை
CIRCULATE - சுற்றனுப்பு
CIRCUS - வட்டரங்கு (PLACE), வட்டரங்கு வித்தை (TRICKS)
CITIZEN - குடிமகள் (f), குடிமகன் (m), குடிநபர்
CITIZENSHIP - குடியுரிமை
CIVET CAT - புனுகுப்பூனை
CIVIL SUPPLIES - குடிமைப்பொருள்
CLAIRVOYANCE - தெளிவுக்காட்சி
CLAMP - இறுக்கி, கவ்வி, பற்றி
CLARINET - காகளம்
CLARITY - தெளிமை, தெளிவு
CLAUSE (OF A LAW) - உறுப்புரை
CLERK - எழுத்தர்
CLIENT - வாடிக்கையர், வாடிக்கையாளர்
CLIFF - ஓங்கல்
CLINIC - மருத்துவகம்
CLIP - பிடிப்பி
CLONE - போலிகை
CLOSED CIRCUIT CAMERA - நெருங்கி சுழலும் நிழற்படக்கருவி/நிழற்படவி
CLOSED CIRCUIT TELEVISION (CCTV) - சுற்று மூட்டத் தொலைக்காட்சி
CLOVE - கிராம்பு
CLOVER - சீமைமசால்
CLUB - மன்றகம்
CLUB (RECREATIONAL) - மனமகிழ் மன்றம்
CLUTCH - விடுபற்றி
CO-ORDINATE - ஒருங்கியக்கு (act.), ஒருங்கியங்கு (pas.)
CO-ORDINATION - ஒருங்கியக்கம்
CO-ORDINATOR - ஒருங்கியக்குநர்
COAT - குப்பாயம்
COBALT - மென்வெள்ளி
COBBLER - சக்கிலியர்
COCKPIT - விமானியறை
COCOON - கூட்டுப்புழு
COCONUT - தேங்காய், கோம்பை (empty, without husk/உமியகற்றப்பட்ட)
COCONUT SHELL - சிரட்டை, கொட்டாங்குச்சி
COD - பன்னா
CODE (OF LAW) - சட்டக்கோவை
COFFEE - குழம்பி, கொட்டை வடிநீர்
COKE - கற்கரி
COLLAR (SHIRT) - கழுத்துப் பட்டி
COLLAR BONE - காறையுலும்பு
COLLATERAL - பிணையம், பிணையத் தொகை
COLLEGE - கல்லூரி
COLLOID - கூழ்மம்
COLLOIDAL SILVER - வெள்ளிக் கூழ்மம்
COLON - முன் சிறுகுடல்
COLOUR PENCIL - வண்ண விரிசில்
COLUMBIUM - களங்கன்
COMET - வால்வெள்ளி
COMMANDER - படைத்தலைவர்
COMMANDO - அதிரடிப்படையர்
COMMISSION - ஆணைக்குழு
COMMISSION (PAYMENT) - பணிப்பாணை
COMMITTEE - செயற்குழு
COMMODITY - பண்டம்
COMMOMORATIVE - ஞாபகார்த்தம்
COMMUTATOR - திசைமாற்றி
COMPASSION - ஈவிறக்கம்
COMPACT DISK - குறுவட்டு, குறுந்தட்டு
COMPANY (ESTABLISHMENT) - குழுமம்
COMPASS - கவராயம்
COMPLACENCY - பொய்யின்பம்/தன்மகிழ்ச்சி
COMPLAINT - புகார்
COMPLIANT, COMPLIANCE - இணக்கமான, இணக்கம்
COMPUTER - கணிப்பொறி, கணினி
COMPUTERIZED NUMERICAL CONTROL (C.N.C.) MACHINE - கணிமுறை கடைப்பொறி/கணிக்கடைப்பொறி
CONCENTRATE, CONCENTRATION - கவனி, கவனம்
CONCENTRATION (ACID, CHEMICALS) - செறிவு
CONCERN (BOTHERATION) - இடர்ப்பாடு
CONCERT - கச்சேரி
CONCOCTION - கியாழம்
CONCRETE - கற்காரை
CONDENSED MILK - குறுகியப் பால்
CONDITION (TERMS) - அக்குத்து
CONFECTIONARY - பணிகாரம்
CONFECTIONER - பணிகாரர்
CONFERENCE - கருத்தரங்கு
CONFERENCE CALL - கலந்துரையாடல் அழைப்பு. கலந்தழைப்பு
CONIFER, CONIFEROUS FOREST - ஊசியிலை மரம், ஊசியிலைக் காடு
CONFIDENCE - தன்னம்பிக்கை
CONFIDENTIALITY, CONFIDENTIAL - மந்தணம், மந்தணமான
CONIFEROUS FOREST - ஊசியிலைக் காடு
CONJUCTIVITIES - வெண்விழி அழற்சி, விழிவெண்படல அழற்சி
CONSCIENCE - மனசாட்சி
CONSCRIPTION - படையாட்சேர்ப்பு
CONSTITUENCY - தொகுதி
CONSUMER - பாவனையாளர், நுகர்வர்
CONSISTENCY, CONSISTENT - ஒருதரம், ஒருதரமான/ஒருதரமாக
CONTACT - தொடர்பு
CONTACT (TOUCH) - தொற்று
CONTACT LENS - விழிவில்லை
CONTAINER - சரக்குப் பெட்டகம்
CONTAINER - கொள்கலன்
CONTEXT - இடஞ்சொற்பொருள்
CONTINENT - கண்டம்
CONTRACEPTIVE - கருத்தடையி
CONTRAST - உறழ்பொருவு, மலைவு
CONTROVERSY - சர்ச்சை
CONVENOR - அவைக்கட்டுநர், அழைப்பர்
CONVEYOR BELT - கொண்டுவார்
CONVICTION - திடநம்பிக்கை
CONVINCE (v.) - நம்பவை (வினை வேற்சொல்)
COOKY - ஈரட்டி
COOLANT - குளிர்பொருள்
COPPER - செம்பு, செப்பு, தாமிரம்
COPPERNICKEL - கல்வெள்ளி
COPPER SULPHATE - மயில்துத்தம்
CORAL - பவழம், முருகைக்கல்
COREL TREE - கல்யாணமுருங்கை
CORK - தக்கை
CORMORANT - காரண்டலம்
CORN - மக்காச் சோளம்
CORN FLAKES - சோளத்துருவல்
CORNEA - விழிவெண்படலம்
CORNICE - கொடுங்கை
CORROSION - அரிப்பு
COTTAGE - குடில்
COTTAGE CHEESE - பால்கட்டி
COUNTER - முகப்பு
COUPE - பதுங்கறைச் சீருந்து
COURIER - தூதஞ்சல்
COURTESY - பணிவன்பு
COVERAGE (NETWORK, TEST ETC.) - துழாவுகை
CRAB - நண்டு
CRACK - வெடிப்பு
CRAFTSMAN - கைவினைஞன்
CRAYON - வண்ணக்கட்டி, மெழுகு விரிசில்
CRANE (BIRD) - கொக்கு
CRANE - பளுதூக்கி
CRATER - கிண்ணக்குழி
CREDIT (LOAN) - கடன்
CREDIT (ADDITION INTO BANK ACCOUNT) - வரவு (தமிழ்க் குறி "")
CREDIT CARD - கடனட்டை
CREAK(ING SOUND) - கீரிச்சொலி
CREMATORIUM - சுடுகாடு, சுடலை
CRICKET - துடுப்பாட்டம், மட்டைப்பந்து
CRICKET (INSECT) - சீரிகை
CRITIC - திறனாய்வாளர்
CROTCH - கவட்டை
CRUISE (v.) - சீரியங்கு (வினை)
CRUISE CONTROL - சீர்வேகக்கருவி
CRUISING SPEED - சீரியங்கு வேகம், சீர்வேகம்
CRUST (EARTH) - (புவி)ஓடு
CRYSTAL - பளிங்கு
CUBICLE - குறுவறை
CURRENT (PRESENT, INSTANT, EG. CURRENT MONTH) - நாளது (எ.க. நாளது மாதம்)
CURRICULUM - பாடவிதானம், பாடத்திட்டம்
CURTAIN - திரைச்சீலை
CUTICLE - புறத்தோல்
CUMIN - ஜீரகம்
CUP - கோப்பை
CURFEW - ஊரடங்கு
CURRENT (ELECTRICITY) - மின்னோட்டம் (மின்சாரம்)
CURRENT (SEA) - நீரோட்டம்
CURD - தயிர்
CURIUM - அகோரியம்
CUSTOMS (IN AIRPORT, BORDER ETC) - சுங்கம், ஆயம்
CUTTER (VESSEL) - கத்திக் கப்பல்
CUTTLEFISH - கணவாய்
CYCLE - மிதிவண்டி
CYCLE-RICKSHAW - மிதியிழுவண்டி
CYCLOSTYLE - படிப்பெருக்கி
CYLINDER (AUTOMOBILE) - கலன்
CYLINDER (GAS) - வாயூகலன்
CYLINDER (SHAPE) - உருளை
CYANIDE (GENERAL) - ருசக்கரிமம்

D - வரிசை
DAFFODIL - பேரரளி
DAGGER - பிச்சுவா
DAHLIA - சீமையல்லி
DANCE, DANCER - நடனம், நடனர்
DANDRUFF - சொடுகு, பொடுகு
DAILY (NEWSPAPER) - நாளிகை
DAILY ALLOWANCE - அகவிலைப்படி
DAIRY - பால் பண்ணை
DAISY - வெளிராதவன், வெளிராதவப்பூ
DARN (v.), DARNER, DARNING - ஒட்டத்தை (வினைச்சொல்), ஒட்டத்தையலாளர், ஒட்டத்தையல்
DATUA - ஊமத்தை
DATE - திகதி, தேதி
DEADLINE - கெடு
DEATH ROW, DEATH ROW PRISONER - மரணச்சிறை, மரணக்கைதி
DEDUCTION (SALARY) - பிடித்தம்
DEBIT (DEDUCTION) - பற்று (தமிழ்க் குறி "")
DEBIT CARD - பற்றட்டை
DECADE - பத்தாண்டு
DECAF(FINATED COFFEE) - வெறியம் நீக்கியக் குளம்பி
DECOCTION - வடிசாறு
DECREE - தீர்ப்பாணை
DEBENTURE - கடனியம்
DEBT COLLECTOR - கடன்மீட்பர்
DEBT INSTRUMENT - கடன் பத்திரம்
DECEMBER - நளி-சிலை
DECENCY - தகைமை
DEFAULT - முன்னிருப்பு, கொடா நிலை
DEFENDANT - பிரதிவாதி
DEFIBRILLATION - குறுநடுக்கநீக்கம்
DEFIBRILLATOR - அதிர்வுப்பெட்டி/குறுநடுக்கமெடுப்பி
DEGREE (EDUCATION) - பட்டம்
DEGREE (TEMPERATURE, ANGLE) - பாகை
DEMAND DRAFT - வரைவு காசோலை, வரைவோலை
DEMAND NOTICE - கோரிக்கை அறிவிப்பு
DEMENTIA - மூளைத்தேய்வு
DEMOCRACY - ஜனநாயகம், மக்களாட்சி
DEMOGRAPHY, DEMOGRAPHER - மக்கள் கணிப்பியல், மக்கள் கணிப்பியலர்
DEMONSTRATION (OF AN EQUIPMENT ETC.) - தெரியக்காட்டல்
DEMURRAGE - சுணக்கக் கட்டணம்
DENGUE FEVER - எலும்பு முறிக் காய்ச்சல்
DENIM - உரப்புப்பருத்தி
DENTURE - பற்தொகுதி
DENSE, DENSENESS/DENSITY - அடர்த்தியான, அடர்த்தி
DEODOURANT - நாற்றநீக்கி
DEODOURIZER - நாற்றகற்றி
DEPARTMENT (GOVERNMENT, COLLEGE ETC) - துறை, திணைக்களம்
DEPARTMENTAL STORE - பலசரக்கு அங்காடி
DEPORT - நாடுகடத்து
DERIVATIVE - சார்பியம்
DESERVE - அருகதைப்படு
DETERGENT - சலவைக்காரம்
DETERMINE - உறுதிபடுத்து
DETERMINED (MENTALLY) - மன உறுதியான
DETONATOR - வெடிதூண்டி
DEVIL FIG - பேயத்தி
DIAL (A PHONE NUMBER) - சுழற்று, அழை
DIAL TONE - இயங்கொலி
DIALECT - கிளைமொழி
DIAPHRAGM - உதரவிதானம்
DIARRHOEA - பேதி, வயிற்றுப்போக்கு
DIARY - நாட்குறிப்பு, நினைவேடு
DICTATION - சொல்வதெழுதுதல்
DICTATOR - சர்வாதிகாரி
DICTATORSHIP - சர்வாதியாட்சி, வல்லாட்சி
DIE (GAME) - பகடைக்காய், கவறு
DIE (INTEGRATED CIRCUIT) - வகுமம்
DIE (COLOUR) - சாயம்
DIESEL - வளியெண்ணை, வளிநெய்
DIGIT - இலக்கம்
DIGITAL -இலக்க, எண்ணியல்
DIGITAL AUDIO TAPE - எண்ணியல் ஒலிநாடா
DIGITAL CAMERA - எண்ணியல் (புகப்/நிழற்)படக்கருவி
DIGITAL WATCH - எண்கடிகை
DIGNIFIED - கண்ணியமான
DIGNITY - கண்ணியம்
DIMETHYL SULPHOXIDE (DMSO) - இருக்கொள்ளியக் கந்தகவுயிரகம்
DINOSAUR - தொன்மா
DIPHTHERIA - தொண்டை அடைப்பான் நோய்
DIPLOMAT - விரகர்
DIRECT - நேரடி(யான)
DIRECT-TO-HOME (DTH) - இல்ல‌நேர‌டித் தொலைக்காட்சி
DIRECTOR - இயக்குநர்
DISCOMFORT - உபாதை
DISCUSS - சந்தித்துப் பேசு, கலந்தாராய்
DISCUSSION - கலந்தாய்வு
DISORDER - சீர்குலைவு
DIVIDEND - ஈவுத்தொகை
DISC - வட்டு
DISCLAIMER - மறுதலிப்பு, உரிமைத் துறப்பு
DISH ANTENNA - அலைக்கும்பா
DISTILLATION - துளித்தெடுப்பு
DISTILLED WATER - ஆவிநீர்
DISTILLRERY - வடிமனை, வடிசாலை
DISTRACTION - கவனச்சிதைவு
DIVERT, DIVERSION - கவனமாற்று, கவனமாற்றம்
DIVIDEND - பங்காதாயம், ஈவுத்தொகை
DOCTOR - வைத்தியர், மருத்துவர்
DOG - நாய், நடையன்
DOG IN THE MANAGER - அலுப்பன், அலுப்பத்தனம்
DOLPHIN - கடல்பன்றி, கடற்பன்றி
DOLPHINFISH - பதாலன், பாதாளன்
DOMAIN - எல்லையம்
DOME - கலசம், குவிமாடம்
DOOR-LENS - புறநோக்கி
DOOR-MAT - சவுட்டி
DOT MATRIX PRINTER - புள்ளியணி அச்சுப்பொறி
DOUGH - மேல்தயிர்
DOVE - புறா
DOWRY - மணப்பரிசம்/மணக்கொடை/மணக்கூலி
DRAGON - பறவைநாகம், வலுசர்ப்பம்
DRAIN - வடிகால்
DRAIN PIPE - தூம்பு
DRAW BRIDGE - தூக்குப்பாலம்
DRAWEE - பெயரவர்
DRILL-BIT - துரவாணி
DRIILLING MACHINE - துரப்பணம்
DRINKING WATER - குடிநீர்
DRINKING WATER POND - ஊருணி
DRIVER - சாரதி, ஓட்டுநர், ஓட்டி
DRY LAND - புஞ்செய் (தமிழ்க் குறி "")
DRUM - பறை
DUGONG - அவில்லியா
DUMB BELL - கர்லாக்கட்டை
DUNG - சாணம், சாணி
DURIAN - முள்நாரிப்பழம்
DUTY-FREE - தீர்வையற்ற
DUTY-FREE SHOP - தீர்வையில்லகம், தீர்வையில்லங்காடி
DYNAMITE - வேட்டு
DYNAMO - மின்னாக்கி
DYSENTARY - சீதபேதி

E - வரிசை
EAR - காது, செவி
EAR-DRUM - செவிப்பறை
EAR WAX - குறும்பி
EARTH - புவி, பூமி
EARTH MOVER - மண்வாரி
EARTHQUAKE - நிலஅதிர்ச்சி
EBONY - கருங்காலி
ECHO - எதிரொலி
ECHO-SOUNDER - புருவம்
ECZEMA - மேகப்பட்டை
EDITOR (SOFTWARE) - திருத்தி
EDITOR (NEWS, ETC) - தொகுப்பாளர்
EEL - விலாங்கு
EGG - முட்டை
EGO - தன்முனைப்பு
EMULSION - பால்மம்
ELASTIC (BAND) - மீள்பட்டை
ELECTRICAL CUT-OUT - எரியிழை எடுப்பான்
ELECTRONIC, ELECTRONICS - மின்னணு, மின்னணுவியல்
ELECTROSTATIC SENSITIVE - நிலைமின்பாதிப்புத்தகு
ELEGY - இறங்கற்பா
ELEPHANT - வேழம், யானை
ELK DEER - கடம்பைமான்
EMBROIDERY - பூ வேலை/பூத்தையல்(கலை)
EMERALD - மரகதம்
EMERGENCY - உற்றுழி
EMERGENCY ASSISTANCE - உற்றுழியுதவி
EMIGRATION - குடிபெயர்வு, குடியேற்றம்
EMOLLIENT - வறட்சியகற்றி
EMOLUMENTS - பணியூதியம்
EMULATE (A PERSON ETC.) - பின்பற்று
ENAMEL - பற்சிப்பி
ENCUMBRENCE - வில்லங்கம்
ENCYCLOPAEDIA - கலைக்களஞ்சியம்
ENDOWMENT - அறக்கட்டளை
ENEMA - வஸ்தி, வத்தி
ENFORCEMENT - செயலாக்கம்/அமலாக்கம்
ENGINE - விசைப்பொறி
ENGINEER - பொறியாளர்
ENIGMA - பூடகம்
ENQUIRY - விசாரிப்பு
ENTHUSIASM - ஆர்வம்
ENTREPRENEUR - தொழில்முனைவர்
ENTREPRENEURSHIP - தொழில்முனைவு
ENTRY, ENTRANCE - நுழைவு
ENTRY PASS, ENTRY TICKET - நுழைவுச்சீட்டு
ENTRY VISA - நுழை இசைவு
ENZYME - நொதியம்
EPISODE - உபகதை, கிளைக்கதை
ERASOR - அழிப்பான்
ERBIUM - எல்லிரும்பு
ESCALATOR - நகரும் படிகள்
ESTATE - பேட்டை
EVAPORATED MILK - பால் சுண்டி, பாற்சுணச்்டி
EXAM - தேர்வு, பரிட்சை
EXAMINEE - பரிட்சார்த்தி, பரிட்சையாளர்
EXAMINER - பரிட்சகர்
EXAMPLE - உதாரணம், போலிகை
EXECUTE (DEATH SENTENCE) - மரணமிடு
EXECUTE (A TASK) - செயல்படுத்து
EXECUTIONER - நிசாரணன், அலுகோசு
EXHAUST FAN - புகைவிசிறி
EXHAUSTION - ஆயாசம்
EXPERIENCE - பட்டறிவு
EXPERT - நிபுணர், வல்லுநர்
EXPERTISE - வல்லமை, நிபுணத்துவம்
EXPORT - ஏற்றுமதி
EQUALITY - சமத்துவம்
EQUATOR - நிலநடுக்கோடு
ESTUARY - கழிமுகம்
EVIDENCE - தடயம், ஆதாயம்
EXPERIMENT - பரிட்சார்த்தம்
EXPRESSWAY - விரைவுச்சாலை
EXTORSION - கப்பம்
EXTRAVAGANCE - உதாரித்தனம்
EYE - கண்
EYE LASH - புருவம்
EYE LID - இமை
EYE-WASH - கண்துடைப்பு

F - வரிசை
FACIAL BLEACH - முகப் பூச்சு
FAKE - போலி
FALCON - வல்லூறு
FAN - விசிறி
FANG - கோரைப்பல், நச்சுப்பல்
FAREWELL - பிரியாவிடை
FARMER - கமர், விவவாயி, வேளாளர்
FARMING - உழவு
FAST FOOD - துரித உணவகம்
FASTENER - கொண்டி
FAT (IN FOOD) - கொழுப்பு
FAX - தொலைநகல், நிகரி
FEATHER - இறகு
FEATURE - கூறுபாடு, அம்சம்
FEBRUARY - சுறவம்-கும்பம்
FEUDAL SYSTEM - படைமானியத் திட்டம்/பாளயக்காரர் முறை
FEUDALISM - நிலப்பிரபுத்துவம்
FELSPAR - களிக்கல்
FENNEL - பெருஞ்சீரகம்
FERMIUM - வெளுகன்
FERN - பன்னம்
FERRULE - பூண்
FERRY - ஓடம்
FIBRE - இழை
FIBREGLASS - கண்ணாடியிழை
FIBRE-OPTIC CABLE - ஒளியிழைவடம்
FICKLENESS - சபலம்
FICTION - புனைக்கதை
FIELD (OF WORK) - களப்பணி
FIELD BOUNDARY - ÒÄ ±ø¨Ä
FIGURE OF SPEECH - வழிமொழி
FILAMENT - கம்பியிழை
FILE - அரம்
FIN - இறகு
FINANCIAL ASSET - நிதிச் சொத்து
FINE (PENALTY) - தண்டம்
FIG - அத்திப்பழம் (FRUIT), அத்திமரம் (TREE)
FIR TREE - பாய்மரவிருட்சம்
FIREWALKING - தீ மிதி
FIXED DEPOSIT - நிரந்தர வைப்பு
FLAMINGO - செந்நாரை
FLASK - குடுவை
FLAT (APARTMENT) - அடுக்கு வீடு
FLATTERY - முகத்துதி, முகஸ்துதி
FLAG, FLAGSTAFF - கொடி, கொடிமரம்
FLAX SEED - அலி விரை, அலிசி விதை, சணல்விதை
FLAX SEED OIL - சணலெண்ணை
FLEXIBLE, FLEXIBILITY - வளைந்துக்கொடுக்கும்/வளைமையான, வளைமை
FLIGHT, FLIGHT NUMBER - பறப்பு/பறக்கை, பறப்பெண்/பறக்கையெண்
FLINTSTONE - சிக்கிமுக்கிக்கல்
FLOPPY - நெகிழ்வட்டு, மென் தட்டு
FLUID - பாய்மம்
FLUORINE, FLUORINATION - வினைவியம், வினையியமூட்டல்
FLUSH-OUT - கழுவி
FOG - மூடுபனி
FOLIAGE - தழை
FOLKWAYS - குடிவழக்கு
FOLLOW THROUGH - பின்தொட‌ர்ச்சி
FOLLOW UP - பின்தொட‌ர்த‌ல், பின்தொட‌ர் (வினைச்சொல்)
FONT - எழுத்துரு

FOOD PROCESSING - உணவு பரிகரிப்பு
FOREIGN AFFAIRS - அயலுறவு
FORK - முள்கரண்டி
FOSSIL - தொல் எச்சம்
FOUNDARY - வார்ப்பகம்
FOUNTAIN - நீரூற்று
FOUNTAIN PEN - ஊற்று எழுதுகோல்
FOXTAIL MILLET - திணை
FRANCIUM - வெடியிதள்
FRENCH BEANS - சீமையவரை
FREQUENCY (RADIO SIGNAL) - அலைவெண்
FREQUENCY (OF SERVICE ETC) - அடிக்கடி
FREQUENCY MODULATION (FM) - பண்பலை
FREQUENT FLYER PROGRAM - தொடர் பயணியர் திட்டம்
FREEZER - உறைப்பெட்டி, உறையறை
FRIDAY - வேள்ளிக்கிழமை
FRIEND - நண்பர்
FRIEZE MOULDING - எழுதகம்
FROG - தவளை
FROGFISH - நுணல்
FROST - உறைபனி
FRUIT SALAD - பழக்கூட்டு
FRYING PAN - வறையோடு, தோசைக்கல்
FULCRUM - ஆதாரப்புள்ளி, ஏற்றமடல்
FULL MOON (DAY) - வெள்ளுவா
FULLER'S EARTH - உவர்மண்
FUNDAMENTALIST - அடிப்படைவாதி
FUNGUS - பூஞ்சனம்
FUNNEL - புனல்
FUR - மென்மயிர்
FURNITURE - அறைகலன், தளபாடம், தளவாடம்
FURROW - சால்
FUSELAGE - வானுடல்
FUSE - உருகி, எரியிழை

G - வரிசை
GADOLINIUM - காந்தவியம்
GAIN - லாபம்
GALAXY - விண்மீன் மண்டலம்/விண்மீன் கூட்டம்/விண்மீன் திரள்
GALL BLADDER - பித்தப்பை
GALL-NUT - கடுக்காய்
GALLIUM - மென்தங்கம்
GALLOWS - தூக்குமரம்
GARBANZO BEANS - கொண்டைக் கடலை
GARDEN - தோட்டம்
GARDEN PLOT - பாத்தி
GARNET - கருமணிக்கல்
GAS CYLINDER - வாயூகலன்/வளிக்கலன்
GASKET - இடையடை(ப்பு)
GATE - வாயில்
GEAR - பற்சக்கரம்
GEL - களிமம்
GELATIN - ஊண்பசை
GEMSTONE - நவரத்தினக் கல்
GENETICALLY MODIFIED - மரபணு மாற்றப்பட்ட
GENOME - மரபு ரேகை
GERM - கிருமி
GERMANIUM - சாம்பலியம்
GERMICIDE - கிருமிக்கொல்லி
GIANT WHEEL - ராட்சத ராட்டிணம்
GILL (FISH) - செவுள்
GILOY - அமிழ்தவள்ளி
GINGER - இஞ்சி
GINSENG - குணசிங்கி
GIRAFFE - ஒட்டகச் சிவங்கி
GLAZE - துலக்கப்பூச்சு
GLIRICIDIA - சீமை அகத்தி
GLIDER - சறுக்கு வானூர்தி
GLITCH - தடுமாற்றம்
GLUTEN - மதம், மதச்சத்து
GLOBAL WARMING - உலக வெம்மை
GLOSS - துலக்கம்
GLYCERINE - களிக்கரை
GLYCEROL - களிக்கரை
GOAT - ஆடு
GOATEE - ஆட்டுத் தாடி
GOD - ஈஸன், இறைவன், கடவுள்
GODOWN - கிடங்கு
GOLDSMITH - ஆச்சாரி, தட்டார், பொற்கொல்லர், பத்தர்
GOLF - குழிப்பந்தாட்டம்
GONG - சேகண்டி
GOOSEBERRY - நெல்லிக்காய்
GORILLA - மனிதக்குரங்கு
GORGE - மலையிடுக்கு
GOSSIP - ஊர்க்கதை
GOWN - மெய்ப்பை
GRANITE - கருங்கல்
GRAPEFRUIT - பப்ளிமாஸ்
GRAPHITE - எழுதுகரி
GRAPES - திராட்சை, கொடிமுந்திரி
GRASSLAND - புன்னிலம்
GRATITUDE - செய்நன்றி
GRATUITY - பணிக்கொடை
GRAVEL - குறுமண்
GREASE (LUBRICANT) - மசகு
GREASE (OILY DIRT) - (எண்ணைப்) பிசிக்கு
GREEN - பச்சை
GREEN BEANS - பச்சை அவரை
GREEN VITRIOL - அன்னபேதி
GREENHOUSE - பசுமைக் குடில்
GREY - சாம்பல்(நிறம்)
GRID (ELECTRIC) - மின்தொகுப்பு
GRIND, GRINDING, GRINDING STONE - அறை, அறவை, ஆட்டுக்கல்
GRINDER - மின்னறவை
GRIZZLY BEAR - கொடுங்கரடி
GROPE (SEARCH) - துளாவு
GROUND FLOOR - தரைத் தளம்
GUARANTOR - பிணையாளி
GUARD - மெய்க்காப்பாளர்
GUEST - விருந்தாளி
GUEST-BOOK - வாசகர் ஏடு
GUEST HOUSE - விருந்தகம், விருந்தில்லம், விருந்துமனை, விருந்தினர் விடுதி
GUIDES (GIRL SCOUTS) - சாரணியர்
GUILD - குழாம்
GUITAR - நரம்புகலம்
GUITARIST - நரம்புகலமர்
GUL MOHAR - மயில் கொன்றை
GULF - வளைகுடா
GUM - கோந்து
GUM ARABIC - கருவேலம் பிசின்
GUN - துப்பாக்கி
GUN METAL - பீரங்கி வெண்கலம்
GUN-POWDER - கருமருந்து
GUTTURAL - மிடற்றொலி எழுத்து
GYM - உடற்பயிற்சியகம்
GYN - பழஊறல்
GYMNASTICS - சீருடற்பயிற்சி
GYPSUM - உறைகளிக்கல்

H - வரிசை
HACKSAW - நைவாள்
HAIL - ஆலங்கட்டி மழை
HAILSTORM - கல்மாரி
HAIR FOLLICLE - முடி மூட்டுப்பை
HALL - கூடம்
HALIBUT - பொத்தல்
HALLUCINATION - பிரமை
HALOGEN LAMP - உப்பீனி விளக்கு
HANDBOOK - கையேடு
HANDKERCHIEF - கைக்குட்டை
HANGAR (AIRPORT) - கூடாரம்
HANGER (CLOTHES) - தொங்கி
HANGMAN - அலுகோசு
HARD DISK - நிலைவட்டு, வன் தட்டு
HARDWARE - வன்பொருள், வன்கலன்
HARMONE - சுரப்புநீர்
HARMONICA - ஊதுக்கின்னரம்
HARMONIUM - சுரப்பெட்டி
HARP - யாழ்
HARVEST - அறுவடை
HATCHBACK (CAR) - பொதுவறை சீருந்து/மகிழுந்தி
HATRED - துவேசம்
HAWK - இராசாளி, ராஜாளி
HEADLIGHT - முகப்புவிளக்கு
HEARING AID - காதுக்கருவி
HEAT EXCHANGER - வெப்பமாற்றி
HELICOPTER - காற்றாடி விமானம், உலங்கூர்தி
HELIUM - பரிதியம்
HELL - நரகம்
HELMET - தலையந்தளகம்
HELPER - கையாள்
HELPLESSNESS - நிராதரவு
HEMISPHERE - அரைக்கோளம்
HEMP - சீமைச்சணல்
HERNIA - குடலிறக்கம், அண்டவாதம்
HERPES - அக்கி
HIGH TIDE - கடலேற்றம்
HINGE - பிணைச்சல், (கதவுக்)கீல்
HINTERLAND - பின்னிலம்
HIPPOPOTOMOUS - நீர்யானை
HOBBY - பொழுதுப்போக்கு, ஓய்வுழை
HOCKEY - கோல்பந்து
HOLLOW (OF THE NECK) - தொண்டைக்குழி
HOLLOW - குடைவு, குடைவான, குடைவாக
HOMEOPATHY - இனமுறை மருத்துவம்
HONEY-COMB - தேன்கூடு
HOOPOE - கொண்டலாத்தி
HOROSCOPE - பிறப்பியம்
HORSE - குதிரை
HORS D'OUEVRE - பசியூட்டி
HOSE - நெளிவுக்குழாய்
HOSIERY - உள்ளாடை
HOSPITALITY INDUSTRY - விருந்தோம்பல் துறை
HOSPITALIZATION - மருத்துவமனைச் சேர்க்கை
HOSTAGE - பிணையாளி
HOUR-GLASS - மணிக்கலம்
HOVERCRAFT - மெத்தூர்தி/வளியூர்தி
HUE - வண்ணச்சாயல்
HUM - இமிர்
HUMAR RESOURCES - மனிதவளம்
HUMMINGBIRD - ரீங்காரப் பறவை
HURDLE - இடையூறு, தடை
HURDLES - தடையோட்டம்
HUSK - உமி
HYBRID ENGINE - கலப்பின விசைபொறி
HYDEL POWER - புனல் மின்சாரம்
HYDROFOIL - விரைப்படகு
HYDROGEN - நீரசம், நீரியம், நீரகம்
HYDROGEN PEROXIDE - நீரகம் ஈருயிரகம்
HYENA - கழுதைப்புலி, கடுவாய்
HYPERACTIVITY - மிகைச்சுறுதி
HYPNOTISM - அறிதுயில், மனவசியம்
HYPROCRACY - இருதரம்
HYPROCRAT - இருதரமானவர்

I - வரிசை
ICE - பனிக்கட்டி
ICE CREAM - பனிக்கூழ்
ICE HOCKEY - பனிக்கோல்பந்து
IDEOLOGY - சித்தாந்தம்
IDOL - விக்கிரகம்
IGNORANCE - அறியாமை, பேதமை
ILLUSTRATE. ILLUSTRATION - எடுத்துரை, எடுத்துரைப்பு
INTERCEPT, INTERCEPTION - இடைமறி, இடைமறிப்பு
INCH - அங்குலம்
INCH TAPE - அளவுநாடா
INCISOR - வெட்டுப்பல்
INDEPENDANT (NOT DEPENDANT) - சுயாதீனமான, சுயாதீனமாக
INDIGO - கருநீலம்
INDIUM - அவுரியம்
INFERENCE - அனுமானம், உய்ப்பு, பாணிப்பு
INFERIOR VENECAVA - கீழ்ப்பெருஞ்சிரை
INFLUENZA - சளிக்காய்ச்சல்
INFORMANT - தகவலர்
INK - மை
IMMIGRATION - குடிநுழைவு
IMMITATE, IMMITATION - பின்பற்று, பின்பற்றல்
IMMITATION (FAKE) - போலி
IMPLEMENTATION - செயல்முறைப்படுத்தல்
IMPORT - இறக்குமதி
INFLATION - பணவீக்கம்
INITIATE, INITIATIVE - தூண்டிவிடு, தூண்டுதல்
INJUNCTION - உறுத்துக்கட்டளை
INK-JET PRINTER - மைப்பீச்சு அச்சுப்பொறி, மைதெளி அச்சுப்பொறி
INN - அறையகம்
INNING(S) (CRICKET, BASEBALL ETC.) - நுழைவு
INNOVATION - நூதனம்
INQUISITIVE - விடுப்பான, விடுப்பாக
INSIGNIA - அடையாள முத்திரை
INSPIRATION - உத்வேகம்
INSTALLMENT - தவணை
INSULATION - மின்காப்பு
INSULT - நிந்தி, அவமதி
INSURANCE - காப்புறுதி, காப்பீடு
INSURANCE COVERAGE - காப்புறுதித் துழாவுகை, காப்பீட்டுத் துழாவுகை
INTELLIGENCE (CRIME, ESPIONAGE) - நுண்ணறிவு
INTENSIVE CARE UNIT (I.C.U.) - ஈர்க்கவனிப்பறை, தீவிர சிகிச்சைப் பிரிவு
INTERNET - இணையம்
INTERNET BROWSING CENTER - இணைய உலாவகம்
INTERPRETER - பொருள்விளக்குநர்/பொருள்விளக்காளர்
INTERVIEW (MEDIA) - பேட்டி
INTERVIEW (STAFFING) - நேர்க்காணல்
INTROSPECT, INTROSPECTION - உள்முகத்தேடடு, உள்முகத்தேடல்
INTUITION - உள்ளுணர்வு
INVENTORY - பொருள் கணக்கு
INVESTIGATION - விசாரணை, புலனாய்வு
INVESTIGATOR - விசாரணையாளர், புலனாய்வாளர்
INVOICE (LIST) - விவரப்பட்டியல்
INVOICE (PRICE) - விலைப்பட்டியல்
IPTV (INTERNET PROTOCOL TV) - இணையவழி தொலைக்காட்சி
IODINE - நைலம்
IRIDIUM - உறுதியம்
IRIS - கருவிழி
IRRIGATION - பாசனம்
IRRIGATION TANK - கண்மாய்
IRON - இஸ்திரி, மின்தேய்ப்பு பெட்டி
IRONY - வஞ்சப் புகழ்ச்சி
ISLAND - தீவு
ITALICS - சரிவெழுத்து. சாய்வெழுத்து
ITINERARY - பயணநிரல்
IVORY - தந்தம்

J - வரிசை
JACINTH - சுநீரம்
JACKET (COVER) - உறை
JACKET (CLOTHING) - மேலிகை
JADE - சீனப் பச்சைக்கல்
JAM (FOOD) - பழப்பாகு
JAMAICA CHERRY - தேன்பழம்
JAW - தாடை
JAMUN FRUIT - நாகப்பழம்
JANITOR - தூய்மையர்
JANUARY - சிலை-சுறவம்
JARGON - குழுமொழி
JAVELIN, JAVELIN THROW - ஈட்டி, ஈட்டியெறிதல்
JEALOUSY - பொறாமை
JEANS - உரப்புக் காற்சட்டை
JEEP - வல்லுந்து
JELLY - திடக்கூழ்
JET LOOM - தாரைத் தறி
JETTY - இறங்கு துறை/வாய்க்கரை
JOB - பணி
JOIST - தராய், விட்டம்
JOKE - நையாண்டி
JOURNALISM - பத்திரிகையியல்
JOURNEY - வழிப்பயணம்
JUGGLER, JUGGLERY - காரடன், காரடவித்தை
JULY - ஆடவை-கடகம்
JUMP - தாவு
JUNE - விடை-ஆடவை
JUNK MAIL - கூளஞ்சல், குப்பை அஞ்சல்
JUPITER - வியாழன் (கோள்), குரு
JUSTICE - நீதி
JUSTNESS - தார்மீகம்
JUTE - சணல்
JOYSTICK - இயக்குப்பிடி

K - வரிசை
KALA-AZAR - கருங்காச்சல்
KALE - பரட்டைக்கீரை
KANGAROO - பைமான்
KETCHUP - தக்காளிச் சுவைச்சாறு
KETTLE - கெண்டி
KEY - சாவி, திறவுகோல்
KEY CHAIN - சாவிக்கொத்து
KEYBOARD (COMPUTER, TYPEWRITER) - விசைப்பலகை
KEYBOARD (MUSIC) - இசைப்பலகை
KNOL RABI - நூல்கோல்
KINDERGARTEN - அரிவரி
KITCHEN - குசினி, அடுப்பங்கறை, சமயலறை
KITE (BIRD) - பருந்து
KITE (SPORT) - பட்டம்
KIWI FRUIT - பசலிப்பழம்
KNIGHT - திருத்தகை
KNOB - குமிழ்
KODO MILLET - வரகு
KRAIT - கட்டு விரியன்
KRYPTON - மறைவியம்

L - வரிசை
LAB - ஆய்வகம், சோதனைக்கூடம்
LADDER - ஏணி
LAGOON - கடற்கரைக்காயல், களப்பு
LAND OWNER - நிலக்கிழார்
LANDMINE - கண்ணிவெடி
LANDSCAPE - நிலத்தோற்றம்
LANGUR - கரடிக் குரங்கு
LARD - பன்றிக்கொழுப்பு
LANTHANUM - மாய்மம்
LARVA - வளர்புழு
LARYNX - மிடறு
LASAGNA - மாவடை
LASER - ஊடொளி
LASER PRINTER - ஊடொளி அச்சுப்பொறி
LATCH (DOOR) - தாழ்ப்பூட்டு
LATHE - கடைப்பொறி
LATITUDE - அகலாங்கு
LAVA - எரிமலைக்குழம்பு
LAW-SUIT - தாவா
LAWYER - வழக்கறிஞர், வக்கீல்
LAXATIVE - மலமிளக்கி
LAY OFF (FROM WORK) - ஆட்குறைப்பு
LAYOUT (LAND) - மனைப்பிரிவு
LEAD (CRIME) - துப்பு
LEAD (METAL) - ஈயம், அதங்கம்
LEADER - தலைவர்
LEAP YEAR - மிகுநாள் ஆண்டு
LEAPARD - சிருத்தை
LEARNER'S LICENSE - பழகுநர் (ஓட்டுநர்) உரிமம்
LEAVEN - கமீர்
LECTURER - விரிவுரையாளர்
LEECH - அட்டைப் பூச்சி
LEEK - இராகூச்சிட்டம்
LEFT-JUSTIFY - இடவணி செய், இடவொழுங்கு செய்
LEGERDEMAIN - கண்கட்டுவித்தை
LEND - இரவல் கொடு
LENS - கண்ணாடி வில்லை
LETTUCE - இலைக்கோசு
LEUCORRHEA - வெள்ளைப்படுதல்
LEUCODERMA - வேண்குட்டம்
LEVEE - தடுப்புச்சுவர்
LEVEL (WATER, ETC.) - மட்டம்
LEVEL CROSSING - இருப்புப்பாதைக் கடவை
LEVER - நெம்புகோல்
LEVITATION - இலகுமம்
LICENCE - உரிமம்
LICORICE - அதிமதுரம்
LIFT - மின் தூக்கி
LIFT-WELL - மின்தூக்கித் துரவு
LIGAMENT - தசைநார்
LIGHT HOUSE - கலங்கரை விளக்கம்
LILAC - இளமூதா
LIME (BITTER) - கிச்சிலிப்பழம்
LIM(OUSINE) - உல்லாசவுந்து
LINER (OCEAN) - முறைவழிக் கப்பல்
LINOLEUM - சிறுசணலியத்திண்மம்
LINSEED - சீறுசணல்
LINSEED OIL - சிறுசணலெண்ணை
LINT - சலவைத்திரி, காரத்திரி
LIPOSUCTION - கொழுப்புறிஞ்சல்
LIPSTICK - உதடுச்சாயம்
LITTLE CORMORANT - நீர்க்காக்கை
LITHIUM, LITHIUM BATTERY - மென்னியம், மென்னிய மின்கலம்
LIVE (TELECAST), LIVE PROGRAM - நேரடி, நேரலை
LIVER - கல்லீரல்
LOACH - அயிரை
LOAD (n., v.) - பொதி, பொதியேற்று
LOAD-AUTO - பொதித் தானி
LOCOMOTIVE - உந்துப்பொறி
LOCKET - தொங்குசிமிழ்
LODGE - தங்ககம்
LOG IN - புகுபதிகை
LOG OUT - விடுபதிகை
LOGO - இலச்சினை
LOGISTICS - ஏற்பாட்டியல்
LONGITUDE - நெட்டாங்கு
LOTION - நீர்க்க‌ளிம்பு
LOUVI PLUM - சீமைச்சொத்தைக்களா
LOW TIDE - கடல்வற்றம்
LUBRICANT - மசகு
LUGGAGE - பயணப்பெட்டி/சுமை
LUMINOL - குருதி நீலொளிரி
LUNAR DAY - பிறைநாள்
LUTETIUM - மிளிரியம்
LYCHEE - விளச்சிப்பழம்
LYMPH, LYMPH GLAND, LYMPH NODE - நிணநீர், நிணநீச் சுரப்பி, நிணநீர்க் கட்டி
LYNCHPIN - கடையாணி

M - வரிசை
MACARONI - மாச்சுருள்
MACHINE - இயந்திரம்
MACE - ஜாதிப்பத்திரி
MACKERAL - கானான் கெழுத்தி மீன
MADRASSAH - ஓதப்பள்ளி
MAGENTA - கருஞ்சிவப்பு
MAGNET - காந்தம்
MAGNETIC LEVITATION (MAGLEV) - காந்தலகுமம்
MAGNESIUM - வெளிமம்
MAGNIFYING GLASS - பூதக் கண்ணாடி
MAHOGANY - சீமைநூக்கு
MAHUA - இலுப்பை
MAILING LIST - மடற்குழு
MAINSTREAM - பெருவோட்டம்
MAIZE - மக்காச்சோளம்
MALABAR NUT - ஆடாதொடை
MALARIA - முறைக்காய்ச்சல்
MALLET - கொடாப்புளி
MALT - முளைதானியம்
MALTOSE - மாப்பசைவெல்லம்
MAMMAL - பாலூட்டி
MANAGEMENT - முகாமை, மேலாண்மை
MANEUVER - நழுவியக்கம்
MANGANESE - செவ்விரும்பு
MAN-HOLE - சாக்கடைப் புழை
MAP - வரைப்படம்
MAPLE TREE - சீமை கத்தி சவுக்கு மரம்
MARCH (MONTH) - கும்பம்-மீனம்
MARKER PEN - குறிப்பு எழுதுகோல்
MARKET - சந்தை
MARIGOLD - துலுக்கச்சாமந்தி
MARINER'S COMPASS - காந்தப் பெட்டி
MAROON - அரக்கு நிறம்
MARROW - மஜ்ஜை
MARS - செவ்வாய் (கோள்)
MARSH - சதுப்பு நிலம்
MARKET - சேற்றுவாயு
MAT - பாய்
MATERIAL - மூலதனம்
MATTER (CONCERN) - விடயம், விசயம்
MATRIMONIAL - மணமேடை
MATTRESS - மெத்தை
MAY - மேழம்-விடை
MEALYBUG (FERRISIA VIRGATA) - சப்பாத்திப் பூச்சி
MEALYBUG (PLANOCOCCUS CITRI) - கள்ளிப் பூச்சி
MEALYBUG (PLANOCOCCUS LILACINUS) - மாவுப் பூச்சி
MECHANISM - பொறிநுட்பம்
MEDITERRAINEAN - மத்தியத்தரைக்கடல் (சார்ந்த)
MEMO - குறிப்பாணை
MEMORY - நினைவு
MENTHOL - கற்பூரியம்
MERCENARY - கூலிப்படையர்
MERCHANDISE - வணிகச்சரக்கு
MERCURY (METAL) - அகரம், பாதரசம், இதள், சூதம்
MERCURY (PLANET) - புதன் (கோள்)
MERRY-GO-ROUND - ராட்டிணம்
MESQUITE TREE - சீமைப்பரம்பை, சீமைக்குருவை
METABOLISM - வளர்சிதைமாற்றம்
METAL - உலோகம், மாழை
METALLOID - உலோகப்போலி, மாழைப்போலி
METEOR - எரிமீன்
METEORITE - விண்கல்
METHANE - கொள்ளிவளி, கொள்ளிவாயு
METRO RAIL - விரைந‌க‌ர்வு
MICA - அப்ரகம், அப்பிரகம்
MICRONUTRIENT - நூண்ணூட்டம்
MICROWAVE OVEN - மின்காந்த அடுப்பு
MIDDLEMAN - இடைத்தரகர்
MILK - பால்
MILK CHOCOLATE - பால் காவிக்கண்டு
MIKE - ஒலிவாங்கி
MILK - பால்
MILKSHAKE - பாற்சாறு
MILLET - வரகு
MIMICRY - அவிநயக்கூத்து, அபிநயக்கூத்து
MINE - சுரங்கம்
MINERAL - கனிமம்
MINERAL (NUTRIENT) - கனிமச்சத்து
MINERAL WATER - தாதுநீர்
MINESWEEPER - கண்ணிவாரி (LAND, PERSON), கண்ணிவாரி கப்பல் (SEA)
MINI GIANT WHEEL - ரங்கராட்டினம்
MINIBUS - சிற்றுந்து
MINUS (EG 2 MINUS 2) - சய
MIRAGE - கானல்நீர்
MIRROR - ஆடி
MISER - கஞ்சன், கருமி
MISFORTUNE - அவப்பேறு
MISSILE - ஏவுகணை
MIXIE - மின்னம்மி
MOAT - அகழி
MODEL (FASHION) - அழகன், அழகி
MODEL (OF A CAR, NEW MODEL ETC.) - போல்மம்
MODEL (MATHEMATICAL) - மாதிரி
MODEM - இணக்கி
MODESTY - தன்னடக்கம்
MODULE, MODULAR - கட்டகம், கட்டக
MOLAR TOOTH - கடைவாய்ப் பல்
MOLASSES - சர்க்கரைப்பாகு
MOLYBDENUM - போன்றீயம்
MONARCHY - மன்னராட்சி
MONASTRY - மடம்
MONASTRY (BUDDHIST ETC.) - விகாரம், விகாரை
MONDAY - திங்கட்கிழமை
MONEY ORDER - காசாணை, பணவிடை, காசுக்கட்டளை
MONEY TRANSFER - பணமாற்று
MONITOR (COMPUTER ETC.) - திரையகம்
MONK - பிக்கு
MONORAIL - த‌னித்த‌ட‌ம்
MONSOON - பருவக்காற்று
MONTHLY (MAGAZINE) - மாதிகை
MOON - நிலவு
MOON-SIGN - ஓரை
MOONSTONE - நிலாமணிக்கல்
MOPED - குதியுந்து
MORTAR - சாந்து
MOSQUE - பள்ளிவாசல், மசூதி
MOTEL - உந்துவிடுதி
MOTHER - தாய்
MOTOR - மின்னோடி
MOTOR-CYCLE - உந்துவளை
MOTOR PUMP - மின்னிறைப்பி
MOTOR VEHICLE - இயக்கூர்தி
MOVING WALKWAY - ந‌க‌ர்ந‌டைமேடை
MOULD (FUNGUS) - பூஞ்சனம்
MOUSE DEER - புலுட்டுமான்
MOUTH FRESHENER - வாயினிப்பி
MOUTH-WASH - வாய்க்கழுவி/வாய்க்கழுவல்
MUD - மண்
MUD GUARD - மணல் காப்புறை, மட்காப்பு
MULE - கோவேறுக்கழுதை
MULTIPLE SCLEROSIS - தண்டுவட மரப்பு நோய்
MULTI-UTILITY VEHICLE (S.U.V.) - பலபயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
MUMPS - அம்மைக்கட்டு
MARSHMALLOW - சீமைத்துத்தி
MUSCLE - தசை
MUSEUM - நூதனசாலை, அருங்காட்சியகம்
MUSHROOM - காளான்
MUSK - காசறை
MUSK DEER - காசறை மான்
MUSK MALLOW - வெற்றிலைக் காசறை
MUSLIN (CLOTH) - சல்லா
MUTTON - ஆட்டிறைச்சி
MYRRH - வெள்ளைப்போளம்

N - வரிசை
NANNY - செவிலித்தாய்
NAPTHA - நெய்தை
NARCORIC - போதை மருந்து, போதைப் பொருள்
NARCISSUS - பேரரளி
NATIONALITY - நாட்டினம்
NATURE - இயற்கை
NATURAL GAS - இயல்வளி
NAUTICAL CHART - வழிகாணல் வரைப்படம்
NAVEL - கொப்பூழ்
NAVIGATION - கடலோடுதல்/கடலோடல் (SEA), வானோடல்/வானோடுதல் (AIR)
NAVY - கடற்படை
NEBULIZATION - தெளிமருந்துச் சிகிச்சை
NEBULIZER - தெளிமருந்துக்கருவி
NEGATIVE (MINUS, DISADVANTAGE) - குறை
NEGATIVE (MINUS, EG -5) - நொகை (எ.டு. நொகை ஐந்து)
NEW MOON (DAY) - காருவா
NEIGHBOUR - அண்டையர்
NEODYMIUM - இரட்டியம்
NEON, NEON SIGN - ஒளிரியம், ஒளிரியக் தகவல் பலகை
NEPTUNE - புறநீலன்
NEPTUNIUM - நெருப்பியம்
NET-CONFERENCE - வலையாடல்
NETWORK - பிணையம்
NEWSLETTER - செய்திமடல்
NICKEL - வன்வெள்ளி
NICOTINE - புகைநஞ்சம்
NIGERSEED - பேயெள்ளு
NIGHT CLUB - கூத்தரங்கு
NIMBUS (CLOUD) - சூல்மேகம்
NIOBIUM - களங்கன்
NITROGEN - ருசரகம், தழைமம்
NITROGEN (NUTRIENT) - தழைச்சத்து
NITROGEN GAS- இலவணவாயு, ஜடவாயு
NOISE - இரைச்சல்
NOMINATION - நியமனம்
NOMINATION PAPER - வேட்பு மனு
NOODLES - நூலடை
NOVEMBER - துலை-நளி
NORM - நெறிமிறை
NORTH POLE - வட துருவம்
NOTARY PUBLIC - சான்றுறுதி அலுவலர்
NOTE (MUSIC) - சுரம், கோவை
NOTEBOOK - குறிப்பேடு, கொப்பி
NOTEBOOK COMPUTER - மடிகணினி
NOTICE BOARD - அறிவிப்புப் பலகை
NUCLEAR REACTOR - அணு உலை
NURSE - செவிலியர்
NURSERY (CHILDREN) - மழலைப்பள்ளி
NURSERY (PLANT) - நாற்றங்கால்
NURSING HOME - நலம்பேணகம்
NUTMEG - சாதிக்காய்
NYLON - நொசிவிழை

O - வரிசை
OAK TREE - கருவாலி
OAR - துடுப்பு
OATH - உறுதிமொழி
OATS - காடைக்கண்ணி
OATMEAL - காடைக்கண்ணிக் கூழ், காடைக்கண்ணிக் கஞ்சி
OBJECTIVE, OBJECTIVELY - பொருட்டு, பொருட்டுடன்/பொருட்டான
OBLIGATION - கடப்பாடு
OBLIQUE - சாய்வான
OBLONG - நீள்சதுரம்
OBSERVER - நோக்காளன்
OBSOLETE (adj.) - வழக்கொழிந்த, வழக்கற்று போன (அடைச்சொல்)
OBSOLETE (v.)- வழக்ககற்று (வினைச்சொல்)
OCEAN - பெருங்கடல்
OCTAPUS - சிலந்திமீன்
OCTANE, OCTANE NUMBER - எட்டகம், எட்டக எண்
OCTAVE (MUSIC) - எண்மம்
OCTOBER - கன்னி-துலை
OESTROGEN - பெண்மையூக்கி
OFFICE - கந்தோர், அலுவலகம்
OFFSET PRINTING - மறுதோன்றி அச்சு
OIL EXTRACT - ஊற்றின எண்ணை, ஊற்றெண்ணை
OLEANDER - அரளி
OLIVE - இடலை
OLIVE OIL - இடலையெண்ணை
OLIVE GREEN - இடலைப் பச்சை
OMELET - முட்டையடை, முட்டைத்தோசை
OMEN - நிமித்தம்
OMNIPRESENT - நீக்கமற
OPAL - அமுதக்கல்
OPEN - திறந்த
OPERATION (SURGEORY) - பண்டுவம்
OPERATION THEATER - பண்டுவ அறை
OPIUM - அபின்
OPTICALS - கண்ணணியகம்
OPTICIAN - கண்ணணிப்பாளர்
OPTIMIST - உகமையர்
OPTIMISTIC - நன்னம்பிக்கையுடைய
OPTION (STOCK, DERIVATIVE) - சூதம்
ORANGE (COLOUR) - செம்மஞ்சள்
ORANGE - நரந்தம்பழம், தோடம்பழம்
ORANGE (SWEET) - சாத்துக்கொடி
ORCHARD - தோப்பு
ORCHID - மந்தாரை
ORIEL - சுவராதாரப்பாகணி
ORNAMENT - ஆபரணம், அணிகலன்
OREGANO - கற்பூரவள்ளி
OSMIUM - கருநீலீயம்
OSMOSIS - சவ்வூடுபரவல்
OSTRICH - நெருப்புகோழி
OTTER - நீர்நாய்
OVEN - போறணை
OVER-THE-COUNTER MEDICATION - எழுதிக்கொடா மருந்து
OVER (CRICKET) - சுற்று
OVERDRAFT - மேல்வரைபற்று, மேலதிகப்பற்று
OX - எருது
OXYGEN (GAS) - ப்ராணவாயூ
OXYGEN (GENERAL) - உயிர்மம், உயிரியம்
OYSTER - கிளிஞ்சல்
OZONE - சாரலியம்

P - வரிசை
PACEMAKER - இதயமுடுக்கி
PACKAGE - சிப்பம்
PACKAGED DRINKING WATER - அடைக்கப்பட்ட குடிநீர்
PACT - உடன்படிக்கை
PADDY FIELD - கழனி
PAGER - விளிப்பான்
PAGODA - வராகன்
PAINT - வர்ணம், வண்ணெய்
PAINTBRUSH - வர்ணத்தூரிகை
PAINTER (ART) - ஓவியர்
PAINTER - வர்ணம் பூசாளர்
PAINTING (ART) - ஓவியம்
PALAENLITHIC - தொல் கற்காலம்
PALAENTHOLOGY - தொல்கால மனிதவியல்
PALAEOGAEA - தொல்லுலகம்
PALLADIUM - வெண்ணிரும்பு
PALMYRA - பனை(மரம்)
PANCREAS - கணையம்
PANDA - கரடிப்பூனை
PANT - காற்சட்டை, செலுவர்
PANTOGRAPH - வரைசட்டம்
PANTHER - கருஞ்சிருத்தை
PAPER - காகிதம்
PAPER-MACHE - காகிதக்கூழ்
PAPYRUS - தாள்புல்
PARACHUTE - வான்குடை
PARADE - கவாத்து
PARAFFIN - வெண்மெழுகு
PARAPET - கைப்பிடிச்சுவர்
PARCEL, PARCEL SERVICE - சிப்பம், சிப்பம் அனுப்பகம்
PARKING LOT - தரிப்பிடம், நிறுத்திடம்
PARTNER - பங்காளி
PARLIAMENT - நாடாளுமன்றம்
PARTIALITY - பக்கச் சார்பு
PARTITION - பிரிவினை
PASS (CAR, STUDENT) - சலுகைச்சீட்டு
PASSBOOK - கைச்சாத்துப் புத்தகம்
PASSENGER TERMINAL - பயணிகள் சேவை முனையம்
PASSPORT - கடவுச்சீட்டு
PASTA - மாச்சேவை
PATROL - பாரா
PATENT - புனைவுமை
PATENT PENDING - புனைவுமை நிலுவையில்
PATHOLOGY - நோய்நாடல்
PATIO - பின் திண்ணை
PATTERN - துனுசு, தோரணி
PAYLOAD - தாங்குசுமை
PEDAL - மிதிக்கட்டை
PEAR - பேரிக்காய்
PEBBLE - கூழாங்கல்
PEDAL - மிதிக்கட்டை
PEDESTRIAL FAN - நெடுவிசிறி
PEDESTRIAN - நடையாளர்
PEEPAL - அரசமரம்
PELICAN - கூழைக்கடா, கூழைக்கிடா
PEN - எழுதுகோல்
PENCIL - கரிக்கோல், விரிசில்
PENCIL SHARPENER - விரிசில் துருகி, விரிசில் சீவி
PENDANT - தொங்கட்டான்
PENETENTIARY - சீர்த்திருத்தப்பள்ளி
PENGUIN - பனிப்பாடி
PENINSULA - தீபகற்பம், குடாநாடு
PENSION - ஓய்வூதியம்
PEON - ஏவலர்
PER CAPITA INCOME - தலைவீத வருமானம்
PEPPERMINT - புதினா
PERFUME- வாசனைப்பொருள், அத்தர்
PERFUMERY - அத்தரகம்
PERISCOPE - மறைநோக்கி
PERKS - மேலதிகச் சலுகைகள்
PERSONAL COMPUTER - தன்னுடமைக் கணினி/சொந்தக் கணினி/தனிநபர் கணினி
PERSONAL DIGITAL ASSISTANT - தன்னுடமை எண்ணியல் உதவி (தன்னுதவி)
PERSON MEDIA PLAYER - த‌ன்னூட‌கி/சுய‌வூட‌கி
PERSONAL IDENTIFICATION NUMBER (PIN NUMBER) - ஆளறியெண்
PERSONALITY - ஆளுமை
PERSPICACITY - நுண்மாண் நுழைபுலம்
PESSIMIST - படுகையர்
PETITION - மனு
PETROL - கல்லெண்ணை, கல்நெய், கன்னெய்
PETROL-BUNK - கன்னெய்க் கிடங்கு
PETROCHEMICAL - பாறைவேதிப்பொருள்
PETROLEUM - பாறையெண்ணை
PETTICOAT - உள்பாவாடை
PHOSPHATE (NUTRIENT) - மணிச்சத்து
PHOSPHOROUS - தீமுறி
PIANIST - கின்னரப்பெட்டியிசைஞர்
PIANO - கின்னரப்பெட்டி
PICNIC - உல்லாச உலாப்போக்கு
PICK-UP TRUCK/VAN - பொதியுந்து
PIER (IN A PORT, BUS-STATION) - பாந்து
PILGRIM, PILGRIMAGE - யாத்திரிகன், யாத்திரை, புனிதப்பயணி
PILOT - வானோடி, விமானி
PIN - குண்டூசி
PIN CUSHION - ஊசிப்பஞ்சு
PINK - இளஞ்சிவப்பு
PIPE - குழாய்க்கம்பி, புழம்பு
PIPER - பைக்குழல்
PISTON - ஆடுதண்டு
PITCH (CRICKET) - ஓடுதளம்
PITCH (MUSIC) - சுருதி, கேள்வி
PITCH (SCREW) - புரியிடைவெளி
PIVOT JOINT - முளைமூட்டு
PIZZA - வேகப்பம்
PIZZERIA - வேகப்பகம்
PLAGUE - கொள்ளைநோய்
PLAN (BUILDING) - கிடைப்படம்
PLASTIC - நெகிழி
PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
PLATELET(S) - இரத்தத் தட்டு(கள்), இரத்த வட்டு(கள்)
PLATFORM (OPERATING SYSTEM) - (இயங்கு)தளம்
PLATFORM (STREET) - நடைபாதை
PLATFORM (TRAIN) - நடைமேடை
PLATINUM - வெண்தங்கம், வெண்மம், விழுப்பொன்
PLEAT (OF A PANT, SKIRT) - கொசுவம்
PLIER - குறடு
PLUMBER - குழாய்ப்பணியாளர், புழம்பர்
PLUNDER - சூறையாட்டம்
PLUNGER (TOILET) - தள்ளாங்கோல்
PLUG - செருகி
PLUM - ஆல்பக்கோடா
PLUS (EG 2 PLUS 2) - சக
PLUTO - அயலன்
PLUTONIUM - அயலாம்
PLYWOOD - ஒட்டுப்பலகை
PNEUMATIC - காற்றியக்க
POLE-CAT - மரநாய்
POLITE - பணிவான
POLITICS - அரிசியல்
POLITICIAN - அரிசியல்வாதி
POLIO(MYELITIS) - இளம்பிள்ளை வாதம்
POLONIUM - அனலியம்
POLYCYSTIC OVARIAN SYNDROME - ப‌ல‌க‌ட்டி சூல‌ நோய‌றிகுறி, பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய்க்கான கூட்டு அறிகுற
POLYMER - பல்படியம்
POLYTHENE, POLYTHENE BAG - ஈகநார், ஈகநார்ப் பை
POMFRET - வாவல் மீன்
POOL (SWIMMING) - நீச்சல்குளம்
POOL (BILLIARDS) - (அமெரிக்கக்) கோல்மேசை
POP CORN - சோளப்பொறி
POPPY - கசகசா
PORTIA - பூவரசு
POROSITY - புரைமை
PORTRAIT - உருவப்படம்
POSITIVE (PLUS, ADVANTAGE) - நிறை
POSITIVE (PLUS, EG. +5) - பொதிவு (எ.டு. பொதிவு ஐந்து)
POST (INTERNET) (v, n) - இடுகையிடு, இடுகை
POST MASTER - தபாலதிபர், அஞ்சலதிபர்
POSTAL ORDER - அஞ்சலாணை
POSTMAN - அஞ்சலர், தபால்காரர்
POSTNATAL CARE - பிற‌விய‌டுத்த‌ப் பேணுகை
POSTPARTUM DEPRESSION - மக‌ப்பேற‌டுத்த‌ உள‌ச்சோர்வு
POSTURE - தோரணை
POTASSIUM - வெடியம், சாம்பரம்
POTATO CHIPS - உருளைச் சீவல், உருளைக்கிழங்குச் சீவல்
POTENTIAL (CAPABILITY) - இயலாற்றல்
POTTER - குயவர்
POWER GRID- மின் தொகுப்பு
POWER STATION - மின் நிலையம்
PRACTICE - அப்பியசி, அப்பியாசம்
PLASTIC SURGERY - ஒட்டுறுப்பு அறுவை சிகிச்சை
PRAWN - இரால்
PREACH, PREACHING - உபதேசி, உபதேசம்
PREDATOR - கொன்றுண்ணி
PRESCRIPTION - மருந்துச்சீட்டு
PRESCRIPTION DRUG - எழுதிக்கொடு மருந்து
PRESERVATIVE - பதப்பொருள்
PRESENCE OF MIND - சமயோசிதம்
PRESSURE - அழுத்தம்
PRESSURE COOKER - அழுத்தப் பாத்திரம்
PRETEND, PRETENTION - பாசாங்குசெய், பாசாங்கு
PRETENSION - பம்மாத்து, வெளிவேஷம்
PRIMROSE - சீமைமுட்செவ்வந்தி
PRISM - அரியம், பட்டகம்
PRIVACY - அந்தரங்கம்
PRIVATE (IN ARMY) - புரிவர்
PRIME (v.), PRIMING (OF A MOTOR ETC.) - பெரும்பு, பெரும்புதல்
PRINTER - அச்சுப்பொறி
PROCLAIM - பறைதட்டு, பறைசாற்று
PROCLAMATION - பறைதட்டல், பறைசாற்றல்
PROFIT - ஆதாயம்
PROGRAMMER - நிரலர்
PROGRESS - ஆக்கம்
PROJECT MANAGER - திட்ட மேலாளர்
PROMISORY NOTE - வாக்குறுதி பத்திரம்
PROMOTER - மேம்படுத்துநர்
PROPELLER (AEROPLANE) - உந்தி
PROSTITUTION - பரத்தமை, விபச்சாரம்
PROTACTINIUM - பாகையம்
PROTRACTOR - பாகைமானி
PROTECTION - காபந்து, பாதுகாப்பு
PROTOTYPE - படியச்சு
PROVISION - மளிகை
PSYCHOLOGY - உளவியல்
PUB - குடிமனை, தவறணை
PUBERTY - பூப்பு, பூப்படைவு
PULSAR - துடிப்பு விண்மீன்
PULSE - கைநாடி
PUMP - எக்கி
PUNCTUALITY - காலத்தவறாமை
PUPA - கூட்டுப்புழு
PURPLE - ஊதா
PUT OPTION - விற்றல் சூதம்
PYKNOMETER - அடர்த்திமானி
PYRAMID - கூம்பகம்
PYTHON - மலைப்பாம்பு

Q - வரிசை
QUAIL - காடை
QUALIFICATION - கல்வித் தகுதி
QUALITY - தரம்
QUARANTINE - தொற்றொதுக்கம்
QUARREL - வாய்ச்சண்டை, சச்சரவு
QUARTZ - படிகக்கல்
QUARRY - கற்சுரங்கம், கொய்வாரம்
QUASAR - துடிப்பண்டம்
QUAY - கப்பல் துறை
QUESTIONABLE - ஆட்சேபத்திற்குறிய
QUILL-PEN - எழுதிறகு, தூவல்
QUINCE - சீமைமாதுளை, சீமைமாதுளம்பழம்
QUINOA - சீமைத் திணை
QUIVER - தூணீ(ரம்) தூணம், அம்புக்கூடு
QUOTATION - விலைப்புள்ளி
QURAN - மறையகம், திருமறை

R - வரிசை
RACOON - அணில்கரடி
RADAR - கதிரலைக் கும்பா
RADIATOR - கதிர்வீசி
RADIO - வானொலி
RADIOLOGIST - கதிரியக்கர்
RADIO STATION - வானொலி நிலையம்
RADIUM - கருகன்
RADIUS - ஆரம்
RADON - ஆரகன்
RAFFLESIA - பிணவல்லி
RAGAM - பண்
RAILING - கிராதி
RAILWAYS - இருப்புப்பாதை
RAINBOW - வானவில்
RAIN COAT - மழைப்பாகை, மழைக் குப்பாயம்
RAIN METER - மழைமானி
RARE - அரிய
RARE (LESS DENSE), RARENESS - ஐதான, ஐது
RASH - சினப்பு, சினைப்பு
RASPBERRY - புற்றுப்பழம்
RAT RACE - போட்டிம‌ய‌ம்
RATION - பங்கீடு
RATTLESNAKE - சாரைப்பாம்பு
RAVEN - அண்டங்காக்கை
RAYON - மரமாப்பட்டு
RAZOR BLADE - சவர அலகு, சவரலகு
RAZOR KNIFE - சவரக் கத்தி
READYMADE (DRESS) - ஆயத்த ஆடை
RECEIPT - பற்றுச்சீட்டு
RECEPTACLE - கொள்கலம்
RECEPTION - வரவேற்பறை
RECEPTIONIST - வரவேற்பாளர்
RECONSTRUCTION - மறுசீரமைப்பு
RECTUM - மலக்குடல்
RECYCLING - மறுசுழற்சி
RECLAMMATION (LAND) - மீளகம்
RED - சிவப்பு
RED CROSS SOCIETY - செஞ்சிலுவைச் சங்கம்
RED KIDNEY BEANS - சிகப்பு காராமணி
REDRESS - குறைதீர்
REED (PLANT) - நாணல்
REFERENCE - மேற்கோள், உசாத்துணை
REFERENDUM - பொதுவாக்கெடுப்பு
REFILL (PENCIL ETC.) - மாற்றில், நிரப்பில்
REFILL PACK - நிரப்பில் சிப்பம்
REFINED OIL - சுத்திகரிக்கப்பட்ட எண்ணை
REFLECTION - எதிரொளி, பிரதிபலிப்பு
REFLEX - எதிர்வினை
REFRIDGERANT - குளிர்ப்பொருள்
REFRIDGERATOR - குளிர்பதனப்பெட்டி, குளிர்பதனி, குளிர்சாதனப்பெட்டி
REHABILITATION - புனர்வாழ்வு
REHABILITATION - புனர்வாழ்வு
REINDEER - பனிக்கலைமான்
REINFORCED CEMENT CONCRETE (R.C.C.) - திண்காரை
REJECT - நிராகரி
REJOICE - மகிழ்
REJOINDER - எதிருரை
RELAPSE - பின்னடைவு
REMINDER - ஞாபகப்படுத்தல்
REMOTE CONTROL - தொலையியக்கி
RENEWAL - புதுப்பிப்பு
RENOVATE - புனரமை
RENTED CAR - இரவல் சீருந்து
RENUMERATION - பணியூதியம்
REPAIR, REPAIR WORK - செப்பனிடு, செப்பம் வேலை
REPEAT - மறுசெயல்
REPEATABILITY - மறுசெயற்திறன்
RESIN - குங்கிலியம், பிசின்
RESPONSE - மறுமொழி
RESULT - முடிவு
RETAIL - சில்லரையான
RETINA - விழித்திரை
RETREADING - மறைக்கிழித்தல்
REVENUE STAMP - முத்திரை வில்லை
REVERSE OSMOSIS - எதிர்மறை சவ்வூடுபரவல்
REVOLVER - சுழற்துப்பாக்கி
RHINOCEROUS - காண்டாமிருகம்
RHODIUM - அரத்தியம்
RICE - அரிசி
RICE BRAN - அரிசித் தவிடு
RICKETY - நராங்கிய, நரங்கிய
RIDE - சவாரி
RIDGE (OF A FIELD) - வரப்பு
RIDGE GOURD - பீர்க்கங்காய்
RIFLE - துமுக்கி
RIGHT-JUSTIFY - வலவணி செய், வலவொழுங்கு செய்
RINGTONE - மணியோசை
RINGWORM - படர்தாமரை
RISK - இடர்ப்பாடு
RITUAL (RELIGIOUS) - சமயாசாரம்
RIVET - கடாவி, தறையாணி
ROAD - சாலை, வீதி
ROAMING FACILITY (CELL PHONE) - அலையல் வசதி
ROAD-ROLLER - சாலைச் சமனி
ROAST - முறுவல்
ROBOT - பொறியன்
ROCKET (WEAPON, SPACE) - ஏவுகலன், ஏவூர்தி
ROCKET (FIREWORK) - வாணம்
RODENT - கொறித்துண்ணி/கொறிணி
ROOF - கூரை
ROSE - முட்செவ்வந்தி
ROSE APPLE - ஜம்பு நாவல்பழம்
ROSE-MILK - முளரிப் பால்
ROSEWOOD, ROSEWOOD TREE - áì¸ÁÃõ
ROTUNDA - கவிமாடம்
ROWBOAT - தோணி
ROYALTY - உரிமத்தொகை
RUBBER (ERASER) - அழிப்பான்
RUBBER (MATERIAL) - மீள்மம்
RUBBER STAMP - மீள்ம முத்திரை
RUBIDIUM - அர்மிமம்
RUBY - மாணிக்கம், கெம்பு
RUDDER - சுக்கான்
RUGBY - அஞ்சல்பந்தாட்டம்
RUM - வெல்லச்சாராயம்
RUMOUR - வதந்தி
RUNNER - ஒடகர்
RUNNER (OF A ZIP) - பல்லோடி
RUNWAY - ஓடுபாதை
RUSK - காந்தல் ரொட்டி
RUSSEL'S VIPER - கண்ணாடி விரியன்
RUST - துரு
RUTHENIUM - உருத்தீனம்
RYE - புல்லரிசி
RYEMEAL - புல்லரிசிக் கூழ், புல்லரிசிக் கஞ்சி

S - வரிசை
SACRIFICE - யாகம், வேள்வி
SADDLE - சேணம்
SAFETY - ஏமம், பாதுகாப்பு
SAFETY PIN - பூட்டூசி, காப்பூசி, ஊக்கு
SAFETY VALVE - பாதுகாப்பு ஓரதர்
SAFFLOWER, SAFFLOWER OIL - குசம்பப்பூ, குசம்பப்பூ எண்ணை
SAFFRON - குங்குமப்பூ
SAFFRON (COLOUR) - காவி (நிறம்)
SAGE (HERB) - அழிஞ்சில்
SAGO - ஜவ்வரிசி
SAILING (SEA ROUTE) - மிதப்பு
SAILING SHIP - பாய்மரக் கப்பல்
SALARY - சம்பளம்
SALES ORDER - விற்பாணை
SALINE SOIL - களர்நிலம்
SALINITY - களர்த்திறன்
SALIVA - வீணீர், எச்சில், உமிழ்நீர்
SALT LAKE - உப்பேரி
SAMARIUM - சுடர்மம்
SAMPLE - மாதிரி
SANCTION - இசைவாணை
SANDPAPER - மண்காகிதம், உப்புக்காகிதம்
SANDPAPER TREE - உகா மரம்
SANDSTONE - மணப்பாறை
SANDWICH - அடுக்கு ரொட்டி
SANITARY NAPKIN - சுகாதாரக் குட்டை
SANITARY WORKER - துப்புறவுத் தொழிலாளர், தோட்டி
SANSKRIT - சங்கதம்
SAP-WOOD - மென்மரம்
SAPHIRE - மரகதம்
SARDINE - சாலை மீன்
SATURATION, SATURATE - தெவிட்டல், தெவிண்டுபோ
SATURDAY - காரிக்கிழமை
SATURN - காரி, சனி (கோள்)
SATELLITE - செயற்கைக் கோள்
SATIRE - வசைச்செய்யுள்
SATISFACTION - பொந்திகை
SAUCE - சுவைச்சாறு
SAUCER - ஏந்துதட்டு
SAVANNA - வெப்பப்புல்வெளி
SAW (CARPERTER'S) - ரம்பம்
SAW SCALED VIPER - சுருட்டைப் பாம்பு
SAXOPHONE - கூம்பிசைக்க‌ருவி
SCAB - பொருக்கு
SCAFFOLDING - சாரம்/சாரக்கட்டு
SCALE (MUSIC) - மண்டிலம்
SCANDAL - ஊர்வாய்
SCANDIUM - காந்தியம்
SCARECROW - வெருளி
SCARF - கழுத்துக்குட்டை
SCABBARD - வாளுறை
SCHOOL - பள்ளி(க்கூடம்)
SCHOOL FEES - பள்ளிக்கூடச் சம்பளம்
SCISSORS - கத்தரிக்கோல்
SCOOTER - துள்ளுந்து
SCOUTS - சாரணர்
SCREEN (TV ETC) - திரை
SCREW - திருகு, திருகாணி
SCREW GAUGE - திருகுமானி
SCREWDRIVER - திருப்புளி
SEA - கடல்
SEA EAGLE - ஆலா
SEA GULL - கடற்புறா
SEAL - கடல்நாய்
SEA LION - கடற்சிங்கம்
SEA SHELL - சிப்பி
SEAL (STAMP) - சாப்பா, முத்திரை
SEAMAN - மாலுமி
SEDAN - சரக்கறை சீருந்து/மகிழுந்து
SERGEANT - செய்வகர்
SEASON-TICKET - பருவச்சீட்டு
SEAT BELT - இருக்கை வார்
SECRETERIAT - தலைமைச் செயலகம்
SEER FISH - சீலா மீன்
SELENIUM - செங்கந்தகம்
SELF-CONCIOUS - தன்னுணச்சியுடன், தன்னுணர்வுடன்
SENIORITY - பணிமூப்பு
SEPAL - புல்லிதழ்
SERENDIPITY - தற்செயற்கண்டுபிடிப்பு
SESAME - எள்ளு
SESSION - செற்றம்
SEPTEMBER - மடங்கல்-கன்னி
SET TOP (BOX) - மேலமர்வுப் பெட்டி, மேலமர்வி
SHAFT - சுழல்தண்டு
SHALLOW - களப்பான, களப்பாக
SHAMPOO - சீயநெய், குளியல் குழம்பு
SHAFE-AUTO - பங்குத் தானி
SHARK - சுறாமீன்
SHAVING CREAM - சவரக் களிம்பு, மழிப்புக் களிம்பு
SHED - கொட்டாரம்
SHEEP - செம்மறி ஆடு
SHEPARD - இடையன், மெய்ப்பன்
SHERBAT - நறுமட்டு
SHINE - பளபளப்பு
SHIP (VESSEL) - கப்பல்
SHIPPING - கடல்முகம்
SHOCK ABSORBER - அதிர்வேற்பி
SHOE - சப்பாத்து, மிதியடி, அரணம்
SHOOT (PLANT) - தண்டுக்கிளை
SHOPPING - வணிகம்
SHOPPING BASKET - வணிகக் கூடை
SHOPPING CART (ONLINE) - வணிகத் தொகுப்பு
SHORTS - அரைக்கால்சட்டை
SHOW-CASE - காட்சிப் பேழை
SHOWER (TAP) - பீச்சுக்குழாய்
SHRIMP - இரால்
SHUTTER (CAMERA, SHOP) - சார்த்தி
SHUTTLE-COCK, SHUTTLE BADMINTON - சிறகுப்பந்து/இறகுப்பந்து, சிறகுப்பந்தாட்டம்/இறகுப்பந்தாட்டம்
SIGNAL LIGHT - சைகை விளக்கு
SIGN BOARD - தகவல் பலகை
SIGNS OF LIFE - பேச்சுமூச்சு
SILICA - மணல்மம்
SILICON - மண்ணியம்
SILK - பட்டு
SILK-COTTON - இலவம்பஞ்சு
SILK FLOWER - பட்டுக்கூடு
SILT - வண்டல் (மண்)
SINK (WASH BASIN) - மித்தம்
SIPHON - இறைகுழாய்
SKETCH PEN - வரையெழுதுகோல்
SKI - பனிச் சருக்கல்
SKIPPING, SKIPPING ROPE - கெந்துதல், கெந்துகயிறு
SKULL - மண்டையோடு, கபாலம்
SLATE - கற்பலகை
SLOGAN - சொலவம்
SMALLPOX - வைசூரி, பெரிய அம்மை
SMART CARD - விரைவூக்க அட்டை/சூட்டிகை அட்டை
SMITHY - உலைக்களம்
SNAIL - நத்தை
SNAKE GOURD - புடலங்காய்
SOAP - சவர்க்காரம், சவுக்காரம்
SOAP-NUT - மணிப்புங்கு
SOCKET - பிடிப்பான், மாட்டி
SOCKET (ELECTRIC) - (மின்சார) தாங்குகுழி
SOCKET JOINT - கிண்ணமூட்டு
SOCKS - கால்மேசு, காலுறை
SODA - காலகம், உவர்காரம்
SODIUM - உவர்மம்
SOFA - (நீள்) சாய்வு இருக்கை/சாய்விருக்கை
SOLITARY - ஏகாந்த(மான)
SOFTWARE - மென்பொருள், மென்கலம்
SOLUTE - கரையம்
SOLVENT - கரைப்பான்
SOMERSAULT - குட்டிக்கரணம்
SOOR - எக்காளம்
SOPHISTICATED - மதிநுட்பமான, அதிநவீன
SOUP - சப்புநீர்
SOY(A) - சோயாமொச்சை
SOY-SAUCE - சோயாமொச்சைக் குழம்பு
SOUTH POLE - தென் துருவம்
SNOW, SNOWFALL - உறைமழை, பனிமழை
SNOOKER - (இந்தியக்) கோல்மேசை
SPACE, SPACE CRAFT - விண், விண் ஓடம்
SPACE SHUTTLE - விண்கலம்
SPADE - மண்வெட்டி, சவள்
SPAGHETTI - நூலப்பம்
SPAN (n.) - வீச்செல்லை
SPANNER - திருகி
SPARK - தீப்பொறி
SPARK PLUG - தீப்பொறிச்செருகி
SPASM - இசிவு
SPEAKER - ஒலிபெருக்கி, ஒலிபரப்பி
SPECIALIST SPECIALIZATION - களப்பணியாளர், களப்பணி
SPECTRUM - நிறமாலை
SPECULATIVE TRADING - யூக வர்த்தகம், யூக வணிகம்
SPELL-CHECKER - எழுத்தாயர்
SPELLING - எழுத்துக்கோர்வை
SPHERE - கோளம்
SPINE - முள்ளெளும்பு
SPRIT (FLAMMABLE) - எரிசாராயம்
SPITOON - உமிழ்கலம்
SPLEEN - மண்ணீரல்
SPOKE - ஆரக்கால்
SPONSORSHIP - நல்கை
SPOOL - கண்டு
SPOON - கரண்டி
SPORT UTILITY VEHICLE (S.U.V.) - கடுவழிப்பயன் மகிழுந்து/சீருந்து/ஊர்தி
SPRAY - தெளிப்பான், தெளிப்பி
SPRING - சுருள்
SPRINKLE (v.) - சிவிறு, தெளி (வினை வேற்சொல்)
SPRINKLER, SPRINKLE (v.) - சிவிறி, தெளிப்பான்
SPYWARE - ஒற்று மென்பொருள்
SQUARE - சதுரம்
SQUARE YARD - குழி
SQUASH GOURD - சீமைப்பூசனி(க்காய்)
SQUID - ஊசிக் கணவாய்
SQUASH-(RACQUETS) - அறைப்பந்தாட்டம்
STABLE - நிலைப்பான
STALACTITE - கசிதுளிவீழ்
STALAGMITE - கசிதுளிப்படிவு
STAFF MEMBER - அலுவலர், ஊழியர்
STAG - கலைமான்
STAINLESS STELL - துருவுறா எஃகு
STAPLE - பிணிப்பூசி
STAPLER - பிணிக்கை
STAR - விண்மீன், நாள்மீன், தாரகை
STARCH (CLOTHES) - கஞ்சி (ஆடைகள்)
STATISTICS, STATISTICIAN - புள்ளியியல், புள்ளியியலர்
STATIONERY (NOT MOVING) - இடம் பெயராத, நகராத
STATIONERY (PAPER, PENCIL ETC.) - எழுதுபொருள்
STEEL - எஃகு
STEAMER - நீராவிக்கப்பல்
STEERING - சக்கரம் திருப்பான்
STENOGRAPHER - சுருக்கெழுத்தர்
STERLIZE, STERLIZATION - கிருமிநீக்கம் செய், கிருமிநீக்கம்
STEREO - இசைப்பெட்டி
STEREOTYPE - ஒரே மாதிரி சிந்த‌னை/ஒரே மாதிரி க‌ருத்து
STEROID - ஊக்கியம்
STEWARD - விமானப்பணியாளர்
STIGMATA - மூச்சுத்துளை
STILTS - முட்டுக்கட்டை
STINGRAY - திருக்கை மீன்
STONE-AGE - கற்காலம்
STOCK MARKET - பங்குச்சந்தை
STOOL - முக்காலி, மொட்டான்
STORK - நாரை
STRAIGHT - நேர்
STRAIT - நீர்சந்தி, நீரிணை
STRAW (BOTTLE) - உறிஞ்சி
STRAW (HAY) - வைக்கோல்
STRAWBERRY - செம்புற்றுப்பழம்
STEALTH - மறைவியக்க
STEAM WASH - வெள்ளாவிச் சலவை
STENCIL - வரையச்சு
STENCIL-WHEEL (ORNAMENTAL) - கோலத்தட்டு
STETHOSCOPE - துடிப்புமானி
STEVIA - சர்க்கரைத் துளசி, சீனித் துளசி
STREAM - புனல்
STRETCHER - டோலி
STRIP - கீற்று
STROLLER - இழுபெட்டி
STRONTIUM - சிதறியம்
STUDIO - நிழற்படமனை
STUMPS (CRICKET) - குச்சம்
STURGEON - கோழிமீன்
STYLUS - எழுத்தாணி
STYROFOAM - மலக்கிய மெத்து
SUBCONTINENT - துணைக் கண்டம்
SUBLET - உள்வாடகை
SUBLIMATE - பதங்கம்
SUBMARINE - நீழ்மூழ்கிக் கப்பல்
SUGAR - சர்க்கரை, சீனி
SUGAR BEET - சர்க்ரைக் கிழங்கு
SUGGEST, SUGGESTION (HINT) - சூசகி, சூசகம்
SUGGEST, SUGGESTION (IDEA) - பரிந்துரை, பரிந்துரைப்பு
SUITCASE - கைப்பெட்டி
SULPHUR - கந்தகம்
SULTRY - புழக்கமான
SUMP - கட்டுத் தொட்டி
SUNBERRY - மனத்தக்காளி
SUNFLOWER - பொழுதுவணங்கி
SUN - கதிரவன்
SUNDAY - ஞாயிற்றுக்கிழமை
SUNROOF - வெளிச்சக்கூரை
SUPERPOWER - வல்லரசு
SUPERIOR VENECAVA - மேல்பெருஞ்சிரை
SUPERSTITION - மூடநம்பிக்கை
SUPERSONIC - ஒலிமிகை
SUPPLICANT - இரந்து வேண்டுநர்
SUPPLICATION - இரந்து வேண்டுதல்
SUPPLY - வரத்து (SUPPLY FROM), அளிப்பு (SUPPLY TO)
SURFING - கடல்சருக்கல்
SURGEON, SURGERY - பண்டுவம், சத்திரம்
SURGERY - பண்டுவர், சத்திரர்
SURPLUS - மிகை
SURVEY (LAND) - நில அளவை
SURVEYOR - நிலஅளவர்
SUSPENSION - தொங்கல்
SUSTAIN, SUSTAINABILITY - பேண், பேணியலுகை
SUTTLE - நாசூக்கான, நாசூக்காக
SWAMP - சதுப்பு நிலம்
SWAN - அன்னம்
SWEATER - வெயர்வி
SWEET SORGHUM - சர்க்கரைச் சோளம்
SWITCH - விசை (KEY), திறப்பான், நிலைமாற்றி
SYLLABLE - அசை
SYLLABUS - பாடவிதானம், பாடத்திட்டம்
SYMPTOM - அறிகுறி
SYNDROME (DISEASE) - இணைப்போக்கு
SYPHILIS - கிரந்தி நோய்
SYSTEM ANALYST - முறைமை பகுப்பாய்வாளர்/பகுப்பாய்வர்

T - வரிசை
T-SHIRT - கொசுவுசட்டை
TABLE - மேசை
TABLE TENNIS- மேசைப்பந்தாட்டம்
TADPOLE - தலைப்பிரட்டை
TAILOR - தையலர், தையலாளர்
TALC - பட்டுக்கல்
TANGERINE - கமலாப்பழம்
TANK (CONTAINER) - தொட்டி
TANK (WAR) - பீரங்கி வண்டி
TANKER LORRY - தொட்டிச் சரக்குந்து
TANKER SHIP - தொட்டிக் கப்பல்
TANTALLUM - இஞ்சாயம்
TAPIOCA - மரவள்ளிக்கிழங்கு
TASK - செய்பணி
TATTOO - பச்சைக்குத்து
TAXI - வாடகி
TAPEWORM - தட்டைப்புழு
TAPE RECORDER - நாடாப் பதிவி
TAR - (கரிக்)கீல்
TARPAULIN - படங்கு, கீல்ப்பாய்
TAVERN - தவறணை
TEA - தேநீர், இலை வடிநீர் (DRINK), தேயிலை (GRAINS, LEAVES)
TECHNETIUM - பசகன்
TECHNICIAN - தொழ்நுட்பப் பணியாளர், தொழிற்பணியர்
TELE-CONFERENCE, TELECONFERENCING - தொலையாடல்
TELEPHONE - தொலைபேசி
TELE-TEXT - தொலையுரை
TELEVISION - தொலைகாட்சி
TELEX - தொலைப்பதிவு
TELLER - காசாளர்
TELLURIUM - வெண்கந்தகம்
TEMPLATE - வார்ப்புரு
TEMPLE - ஆலயம், கோயில்
TEMPLE (OF THE HEAD) - கன்னப்பொறி, நெற்றிப்பொட்டு
TENDON - தசைநாண்
TENNIS - வரிப்பந்தாட்டம்
TERBIUM - தென்னிரும்பு
TERRA-COTTA - சுடுமண்(பொருள்)
TERRAPIN - கிணற்றாமை
TERMITE - கறையான்
TEST CRICKET - தேர்வு துடுப்பாட்டம்
TESTIMONY - வாக்குமூலம்
TETANUS - ரண ஜன்னி, ஏற்புவலி, தசைவிறைப்பு, நரம்பிசிவு நோய்
TETANUS SHOT - ஏற்பு ஊசி
TEXTBOOK - பாடநூல்
THALLIUM - தெள்ளீயம்
THAW - கெட்டி உருகு/கெட்டிவுருகு, கெட்டி உருகல்/கெட்டிவுருகல்
THEATRE - திரையரங்கு
THERMAL POWER - அனல் மின்சாரம்
THERMOCOLE - மலக்கிய மெத்து
THERMOMETER - வெப்பமானி
THORIUM - இடியம்
THRONG (v.) - குழுமு
THINNER - மெலிபூச்சு
THULIUM - துலங்கியம்
THURSDAY - வியாழக்கிழமை
TICKET - (பயணச்)சீட்டு
TICKET CHECKER - சீட்டு நோக்கர்
TICKET COUNTER - சீட்டு முகப்பு
TIDE - (கடல்)ஓதம்
TILE (FLOOR) - தரை ஓடு
TILLAGE - கமத்தொழில்
TIME-TABLE - நேரசூசி, கால அட்டவணை
TIMES (EG 2 TIMES 2) - தர
TIN (CAN) - தகரம்
TIN (METAL) - வெள்ளீயம்
TINCTURE - கறையம்
TIPS - கொசுறு
TISSUE (BIOLOGICAL) - இழையம்
TISSUE (NAPKIN) - மெல்லிழுப்புத்தாள்
TITANIUM - வெண்வெள்ளி
TOAD - தேரை
TOASTER - (ரொட்டிச்) சுடுவி
TOBACCO - புகையிலை
TOKEN - கிள்ளாக்கு
TOLERANCE - சகிப்பு
TOLL GATE - சுங்கச்சாவடி
TONIC - தெம்பூட்டி, உரமாக்கி
TOOTHBRUSH - பல் தூரிகை
TOOTHPASTE - பற்பசை
TOPAZ - புஷ்பராகம்
TOPOLOGY - நிலவுருவியல், நிலவுருவம்
TORCHLIGHT - சுடரொளி
TORPEDO - கடற்கணை
TOUCH-SCREEN - தொடுதிரை
TOUCHSTONE - கட்டளைக்கல்
TOURISM - சுற்றுலா
TOURIST - சுற்றுலாப் பயணி
TOURIST VISA - சுற்றுலா இசைவு
TOWER - கோபுரம்
TRACK (RAIL) - தண்டவாளம், இருப்புப்பாதை
TRACTION - துரக்கம்
TRACE, TRACEABILITY - சுவடுகாண், சுவடுகாணல்
TRACK, TRACKABILITY - தடங்காண், தடங்காணல்
TRACTOR - ஏருந்து/உழுவை
TRADE-MARK - வர்த்தகக் குறி
TRAFFIC LIGHT/SIGNAL - சைகை விளக்கு
TRAIN (GENERAL MULTI-CARRIAGE) - தொடர்வண்டி
TRAIN (RAIL) - இருப்பூர்தி, கோச்சி
TRAIN (TEACH) - பயிற்சியளி
TRAINEE - பயிலாளர்
TRAILER (VEHICLE) - இழுவை
TRAINER - பயிற்றாளர்
TRAITOR - (தேச)துரோகி
TRAM - கம்பிப் பேருந்து
TRANSPARENT - தெளிமையான, ஒளிப்புகு (இயற்பியல்/physics)
TRANSPARENCY (SHEET) - தெளிதகடு
TRANSFORMER - மின்மாற்றி
TRANSPONDER - செலுத்துவாங்கி
TRAVEL AGENCY - பயண முகமையகம்
TRAVEL AGENT - பயண முகவர்
TRAVELLER'S CHECQUE - பயணியர் காசோலை
TRANSFER PASSENGER - மாற்று பயணி
TRANSIT PASSENGER - இடைநிற் பயணி
TRANSIT LOUNGE - மாற்றுப்பயணியர் ஓய்வறை
TRAVEL - செல்கை
TRAVELLATOR - ந‌க‌ர்ந‌டைமேடை
TRAY - தட்டம், தாம்பாளம்
TREADMILL - ஓடுபொறி
TREASON - (தேச)துரோகம்
TREASURY - கருவூலம்
TREMOR - நிலநடுக்கம்
TRIBUNAL - ஞாயசபை, நடுவர் மன்றம்
TRIAL PACK - பரிட்சார்த்தச் சிப்பம்
TRILLION - கற்பம்
TRIGGER (GUN) - குதிரை
TRIP - பயணம்
TRIP-SHEET - நடைமுறி
TROLLEY - தள்ளுவண்டி
TROPIC OF CANCER - கடக ரேகை
TROPIC OF CAPRICORN - மகர ரேகை
TROPICS, TROPICAL - வெப்பமண்டலம், வெப்பமண்டல
TRUCK - சுமையுந்து
TRUE MAHOGANI - சீமைநுக்கு
TRUMPET - தாரை
TRUSS - தூலக்கட்டு
TRUSTEE - அரங்காவலர், மரைக்கார் (ISLAMIC)
TSUNAMI - ஆழிப்பேரலை
TUBE (CREAM, OINTMENT) - பிதுக்கு
TUBE - தூம்பு
TUBELIGHT - குழல்விளக்கு
TUBERCULOSIS - காசநோய்
TUBEROSE - நிலச்சம்பங்கி
TUCK (A SHIRT, v.) - கொசுவு
TUESDAY - செவ்வாய்க்கிழமை
TULIP - காட்டுச்செண்பகம்
TUMBLER - லோட்டா
TUMOUR - கழலை
TUNE - சந்தம்
TUNGSTEN - மெல்லிழையம்
TURBULENCE - கொந்தளிப்பு
TURMERIC - மஞ்சள்
TURNING LATHE - கடைமரம்
TURNING POINT - திருப்பும் முனை
TURNIP - கோசுக்கிழ‌ங்கு
TURPENTINE - கற்பூரத் தைலம், கற்பூரநெய்
TURQUOISE - பேரோசனை
TUSKER (ELEPHANT) - கொம்பன்யானை
TWIG - சுள்ளி
TWILIGHT - அந்தியொளி
TYPEWRITER - தட்டச்சுப்பொறி
TYPHOID - குடற்காய்ச்சல்
TYPIST - தட்டச்சர்
TYRANNY - கொடுங்கொண்மை, அராஜகம்
TYRE - வட்டகை/உருளிப்பட்டை

U - வரிசை
UNIFORM (DRESS) - சீருடை
ULTRAVIOLET - புறஊதா
ULTRASONIC - கேளாஒலி
ULTRASOUND - ஊடொலி
UNARMED - நிராயுதபாணி
UMBRELLA - குடை
UMBRELLA THORN - நாட்டு ஓடை
UNANANYMOUS, UNANYMOUSLY - ஏகோபித்த, ஏகோபித்து
UNITED NATIONS - ஐக்கிய நாட்டு சபை, ஐநா சபை
UNIVERSE - அண்டம்
UNIVERSITY - பல்கலைக்கழகம்
UPDATE - புதுப்பிப்பு
URANIUM - அடரியம்
URANUS - அகநீலன்
URETER - சிறுநீர்ப் புறவழி
URGENT - அவசரமான
URN - தாழி
USELESS - உதவாக்கரை
UTERUS - கருப்பை
UTENSIL - பாத்திரம்

V - வரிசை

VACABULARY - சொற்றொகை
VACUUM CLEANER - தூசி உறிஞ்சி/வெற்றிடவுறிஞ்சி
VALUE - விழிமியம்
VALVE - ஓரதர்
VAN - கூடுந்து/மூடுந்து
VANADIUM - பழீயம்
VANILLA - வனிக்கோடி
VARICOSE VEINS - சுருட்டை நரம்பு, நரம்பு சுருட்டு
VARNISH - மெருகெண்ணை, மெருகுநெய்
VEIN - சிரை
VELVET - பூம்பட்டு, முகமல்
VENTILATOR - காலதர்
VENUS - வெள்ளி (கோள்)
VERANDAH - ஆளோடி
VERDIGRIS - செம்புக்களிம்பு
VERMIFUGE - புழுக்கொல்லி
VERSION - பதிப்பு, வடிவுரு
VESTIBULE - இணைப்புக்கூண்டு
VIDEO - காணொளி, ஒளித்தோற்றம்
VIDEO COACH - படக்காட்சிப் பேருந்து
VIDEO PHONE - காணொளிப்பேசி
VIDEO CONFERENCING - காணொளிக் கலந்துரையாடல்/காணொளியாடல்
VIDEO PHONE - காணொளிப்பேசி
VINEGAR - புளிக்காடி
VIOLIN - பிடில்
VIOLIN-CELLO - கின்னரம்
VIPER - விரியன்
VIRUS - நச்சியம்
VIRGO - ஆயிழை, கன்னியராசி
VISA - இசைவு
VISCOUS, VISCOSITY - பிசுக்கானம் பிசுக்குமை
VISIBILITY - விழிமை
VISITING CARD - முகப்பு அட்டை
VIDEO CASSETTE - ஒளிப்பேழை
VOLATILE, VOLATILITY - வெடிமையுடைய, வெடிமை
VOLUME (CAPACITY) - கொள்ளளவு
VOLUME (SOUND) - ஒலி விசை
VOMIT - சத்தி, வாந்தி
VOODOO - சூனியம்
VOW - நேர்த்திக்கடன்
VULTURE - பிணந்தின்னிக் கழுகு

W - வரிசை
WALLABEE - பைமுயல்
WALKMAN - நடைகேட்பி
WALKING STICK - ஊன்றுகோல்
WALRUS - கடற்பசு
WANDER - சுற்றித்திரி
WARDROBE - கைப்பெட்டி, உடுப்புப்பெட்டி, உடுக்கைப்பெட்டி
WAREHOUSE - பண்டகசாலை, கிட்டங்கி
WARRANT - பற்றாணை
WART - மரு
WASH AREA - அலம்பகம்
WASH BASIN - கழுவுதொட்டி
WASHER (MECHANICAL) - அடைப்பி
WASHERMAN - கட்டாடி, சலவைக்காரர்
WASHING MACHINE - சலவை இயந்திரம், சலவைப் பெட்டி
WASHING POWDER - சலவைத்தூள்
WATER COOLER - நீர்க்குளிரி
WATER HEATER - நீர்வெம்மி
WATER-COLOUR - நீர்வர்ணம்/நீர்வண்ணம்/நீர்ச்சாயம்
WATER INFLOW - நீர்வரத்து
WATER-PROOF - நீர்ப்புகா
WATER RESISTANT - நீரெதிர்
WATER SUPPLY - நீரளிப்பு
WATERMARK - நீர்க்குறி
WATERMELON - கொம்மட்டிப்பழம்
WATCHMAN - காவலாளி
WATCH TOWER - காவல்மேடை
WAX (CANDLE) - மெழுகு
WAX (EAR) - (காதுக்)குறும்பி
WAX BATH - மெழுகுத் தொட்டிி
WAYBILL - (ஊர்திப்) பார‌ப்ப‌ட்டி
WEASEL - மரநாய்
WEATHER - வானிலை
WEB CAM - இணையப் படப்க்கருவி
WEBSITE - இணையதளம்
WEDGE - ஆப்பு
WEDNESDAY - அறிவன்கிழமை
WEEKLY (MAGAZINE) - வாரிகை
WELD, WELDING, WELDING ROD - பற்றவை, பற்றவைத்தல், பற்றுக்கோல்
WET, WETNESS - ஈரமான, ஈரம்
WET LAND - நஞ்செய் (தமிழ்க் குறி "")
WET GRINDER - விசையுரல், விசை உரல், மின்னுரல்
WHALE - திமிங்கலம்
WHEAT - கோதுமை
WHEAT BRAN - கோதுமைத் தவிடு
WHET (v.), WHETSTONE - சாணைபிடி (வினைவேற்சொல்), சாணை(க்கல்)
WHIP - கசை
WHIRLPOOL - நீர்ச்சுழல், நீர்ச்சுழி
WHISKY - ஊறல்
WHISPER - குசுகுசுப்பு, குசுகுசுத்து (வினை வேற்சொல்)
WHISTLE - ஊதல்/சீட்டி, சீட்டியடி (வினை வேற்சொல்)
WHITE - வெள்ளை
WHITE CEMENT - வெண்காரை
WHITE DWARF - வெண் குறுமீன்
WHITE GOLD - வெள்ளித் தங்கம்
WHITE VITRIOL - வெள்ளைத் துத்தம்
WHOLESALE - மொத்தமான
WICKET (CRICKET) - இலக்கு
WIDOW - விதவை
WIDOWER - விதவன், தாரமிழந்தவன்
WILD JASMINE - காவா, காட்டுமல்லிகை
WINCH - மின்னிழுவை
WIND SOCK - திசைக்கூம்பு
WINDMILL - காற்றாலை
WINDWARD - வாப்பர்
WINE - தேறல்
WINTERGREEN - கோலக்காய்
WIPER - துடைப்பான்
WIRE TRANSFER - கம்பி பரிமாற்றம்
WIRELESS - கம்பியில்லா
WOODPECKER - மரங்கொத்தி
WOOD POLISH - மரவெண்ணை
WORD PROCESSOR - சொற்செயலி
WOLF - ஓநாய்
WOOL - கம்பளம்
WORK, WORKMAN, WORKMANSHIP - வேலை, வேலையாள் வேலைப்பாடு
WORTH - பெறுமதி, பெறுமானம்
WREATH - மலர்வளையம்
WRIST - மணிக்கட்டு

X - வரிசை
X-RAY - ஊடுக்கதிர்
X-RAY PHOTOGRAPH - கதிர்ப்படம்
XEBEC - முப்பாய்ப்படகு
XENON - அணுகன்
XEROPHYTE - பாலைவனத் தாவரம்
XEROX - நகல் பொறி, நகலி
XYLEM - மரவியம்
XYLOPHONE - சுரம் இசைவி, சுர‌ இசைக்க‌ருவி, ஜ‌ல‌த்த‌ர‌ங்க‌ம்

Y - வரிசை
YAK - கவரிமான்
YAM - சேனைக்கிழங்கு
YARD - கஜம்
YARDSTICK - அளவுகோல்
YARN - நூலிழை
YAGHT - செலவி
YEAR-BOOK - ஆண்டுநூல்
YEAST - புளிச்சொண்டி
YEASTBALL - சொண்டிச்சோறு
YELLOW - மஞ்சள்
YELLOW OLEANDER - சீமையலரி
YOGHURT - வெண்ணைத்தயிர், வெண்தயிர்
YOLK - மஞ்சள் கரு
YTTERBIUM - திகழ்வெள்ளீயம்
YTTRIUM - திகழியம்

Z - வரிசை
ZAMINDAR - பண்ணையார்
ZIGZAG - எதிர்புதிரான
ZINC - துத்தநாகம்
ZINNIA - நிறவாதவப்பூ, நிறவாதவன்
ZIGZAG - எதிர்புதிரான
ZIP LOCK BAG - பிணையடை(ப் பை)
ZIP(PER) - பற்பிணை
ZIRCOMIUM - வன்தங்கம்
ZUCCHINI - சீமைச் சுரைக்காய்
ZODIAC - ஞாயிற்று வீதி
ZONE - வட்டாரம்

ZOO - விலங்குப் பூங்கா

நீங்க என்ன நட்சத்திரம்? எந்த ருத்திராட்சம் போடலாம்?

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் உகந்த ருத்ராக்ஷங்கள்
நமது அற நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

ஆனால் ருத்ராக்ஷத்தைப் பொறுத்தவரை எதை அணிந்தாலும் நிச்சயம் தீங்கு பயக்காது. மிக்க நலத்தையே நல்கும்.ருத்ராக்ஷத்தை ஒவ்வொருவருடைய நட்சத்திரத்திற்கும் ஏற்ற ருத்ராக்ஷங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
இவற்றை நல்ல நாள் பார்த்து பாலில் நனைத்து தெய்வ சந்நிதியில் அணிவது மரபு.

ருத்ராக்ஷம் அணிய மிக உத்தமமான நட்சத்திரமாக பூசம் என்று நம் அற நூல்களில் குறிப்பிடப்படுகிறது. இதனுடைய அதிபதி சனி. இந்த நட்சத்திரத்தில் பிருஹஸ்பதி உச்சத்தில் இருக்கிறார். ஆகவே வியாழக்கிழமையும் பூச நட்சத்திரமும் கூடிய அதி உன்னதமான நாளில் ருத்ராக்ஷம் அணிந்தால் மிக சிறப்பாகும்.

வாரம் ஒரு முறை வியாழக்கிழமையும் மாதம் ஒரு முறை பூச நட்சத்திரமும் வந்தாலும் கூட இவை இரண்டும் இணைவது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ தான்! ஆகவே அந்த நாளைக் குறித்து வைத்துக் கொண்டு ருத்ராக்ஷம் அணிதல் வேண்டும்.

நட்சத்திரம் - கிரகம் - அணிய வேண்டிய ருத்ராக்ஷம்

1) அஸ்வினி - கேது - நவமுகம்

2)பரணி - சுக்ரன் - ஷண்முகம்

3)கார்த்திகை - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

4)ரோஹிணி - சந்திரன் - த்விமுகம்

5)மிருகசீரிஷம் - செவ்வாய் - த்ரிமுகம்

6)திருவாதிரை - ராகு - அஷ்டமுகம்

7)புனர்பூசம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

8)பூசம் - சனி - சப்தமுகம்

9) ஆயில்யம் - புதன் - சதுர்முகம்

10) மகம் - கேது - நவமுகம்

11)பூரம் - சுக்ரன் - ஷண்முகம்

12)உத்தரம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

13)ஹஸ்தம் - சந்திரன் - த்விமுகம்

14)சித்திரை - செவ்வாய் - த்ரிமுகம்

15)ஸ்வாதி - ராகு - அஷ்டமுகம்

16)விசாகம் - ப்ருஹஸ்பதி - பஞ்சமுகம்

17)அனுஷம் - சனி - சப்தமுகம்

18)கேட்டை - புதன் - சதுர்முகம்

19)மூலம் - கேது - நவமுகம்

20)பூராடம் - சுக்ரன் - ஷண்முகம்

21)உத்திராடம் - சூர்யன் - ஏகமுகம் அல்லது த்வாதசமுகம்

22)திருவோணம் - சந்திரன் - த்விமுகம்

23)அவிட்டம் - செவ்வாய் - த்ரிமுகம்

24) சதயம் - ராகு - அஷ்டமுகம்

25)பூரட்டாதி - சனி - பஞ்சமுகம்

26)உத்திரட்டாதி - சனி - சப்தமுகம்

27)ரேவதி - புதன் - சதுர்முகம்

Measurements for Memory & Storage




1024 bytes

 = 

1 KB

1024 KB

 = 

1 MB

1024 MB

 = 

1 GB

1024 GB

 = 

1 TB

1024 TB

 = 

1 PB

KB

 = 

Kilobyte

MB

 = 

Megabyte

GB

 = 

Gigabyte

TB

 = 

Terabyte

PB

 = 

Petabyte

தமிழர் அளவை முறைகள்

அளவைக்கருவிகளுள் ஒன்றான உழக்கு
பண்டைய தமிழர்களின் அளவை முறைகள் மிகவும் விசித்திரமானவை. அந்தக் காலக்கட்டங்களில் தமிழர்கள் மனக்கணக்குகள்தான் செய்தார்கள் என்று பல ஆய்வாளர்களும் , அறிஞர்களும் கூறுகின்றனர். பூச்சரங்கள் வாங்கும்போது நீட்டலளவான முழம் என்ற அளவினால் பயன்படுத்தும் முறையை இன்றும் வழக்கில் உள்ளதைப் பார்க்கலாம். பண்டைய கட்டடக்கலைகளிலும் முழம் என்ற அளவையே தமிழர்கள் பின்பற்றியிருக்கிறார்கள். இதற்குச் சான்றாகப் பல முழக்குச்சிகளை ( ஒன்று அல்லது இரண்டு முழம் நீளம் உள்ள) பயன்படுத்தியதாகத் ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளார்கள். ஆகவே தமிழர்களின் நீள அளவை முறைகள் தரப்படுத்தப் பட்டுள்ளதை நாம் தீர்க்கமாகச் சொல்லமுடியும். தமிழ் நாட்டிலும், கேரளத்திலும் பெரும் அளவான கல்வெட்டுக்கள் இன்னும் படிக்கப்படாமலும், அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படாமலும், இருப்பதால் தென்னிந்தியாவின் அறிவியலை முழுதாக இன்னும் அறியமுடிவதில்லை.[1]
பால், எண்ணெய்களை (நீர்மம்) அளப்பதற்குத் தமிழர்கள் உழக்கு என்ற அளவை உருவாக்கி இருக்கிறார்கள். அதற்குச் சான்றாக ஓர் உழக்கு, இரு உழக்கு அளவிலான செப்பு, பித்தளை, வெள்ளிப் பாத்திரங்கள் தமிழர்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றும் பயன்படுத்துவதைக் காணலாம். ஆகவே தமிழர்களின் அளவை முறைகள் தனித்துவம் வாய்ந்ததாக அமைகின்றன. பின்வரும் பட்டியல், வாய்பாடுகள் பண்டைய தமிழர்கள் உருவாக்கிய அளவை முறைகள் ஆகும்.
பழந்தமிழர் அளவைகள், பெரும்பாலும் இக்காலத்திலும் உள்ள தமிழர் அளவைகள் ஆகும். அவை
  1. எண்ணல்
  2. நிறுத்தல்
  3. முகத்தல்
  4. பெய்தல்
  5. நீட்டல்
  6. தெறித்தல்
  7. சார்த்தல்
ஒன்று, இரண்டு, மூன்று என்ற எண்ணாகவோ வீசம், அரைக்கால், கால் என்ற இலக்கமாகவோ, அல்லது பதாதி சேனாமுகம், குமுதமெனத் தொகையாகவோ எண்ணிக் கணக்கிடுவது எண்ணல் அளவை ஆகும்.இந்த எண்ணலளவை சிற்றிலக்கம், பேரிலக்கமென இருவகைப்படுகிறது.

பேரிலக்கம்

ஒன்று, இரண்டு, மூன்று முதலிய முழுவெண்கள் பேரிலக்கம் எனப்படும்.
Oldtamilcharactersold.jpg
1 - ஒன்று (ஒண்டு)
2 - இரண்டு
3 - மூன்று (மூண்டு)
4 - நான்கு
5 - ஐந்து
6 - ஆறு
7 - ஏழு
8 - எட்டு
9 - ஒன்பது
10 - பத்து
100 - நூறு
1000 - ஆயிரம்

எண் வாய்பாடு

10கோடி - 1அற்புதம்
10அற்புதம் - 1நிகற்புதம்
10நிகற்புதம் - 1கும்பம்
10கும்பம் - 1கணம்
10கணம் - 1கற்பம்
10கற்பம் - 1நிகற்பம்
10நிகற்பம் - 1பதுமம்
10பதுமம் - 1சங்கம்
10சங்கம் - 1சமுத்திரம்
10சமுத்திரம் - 1ஆம்பல்
10ஆம்பல் - 1மத்தியம்
10மத்தியம் - 1பரார்த்தம்
10பரார்த்தம் - 1பூரியம்
10பூரியம் - 1 முக்கோடி
10 முக்கோடி - 1 மகாயுகம்

சிற்றிலக்கம்

அரை கால், அரைக்கால் வீசம்(மாகாணி) முதலிய பின்னவெண்கள் சிற்றிலக்கம் எனப்படும். சிற்றிலக்கத்தில் கீழ்வாயிலக்கமென்றும், மேல்வாயிலக்கமென்றும் இருவகையுண்டு.
கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தோடு ஒப்பு நோக்கியே, அரை, கால்,அரைக்கால் முதலியன மேல்வாய்ச் சிற்றிலக்கமெனப்படும்.

மேல்வாயிலக்கம்

மேல்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்
  • மேலரை(அரை)
  • மேற்கால்(கால்)
  • மேலரைக்கால்(அரைக்கால்)
  • மேல்வீசம்(வீசம்)
  • 3/4 - முக்கால்
  • 1/2 - அரைக் கால்
  • 1/4 - கால்
  • 1/5 - நாலுமா
  • 3/16 - மூன்று வீசம்
  • 3/20 - மூன்றுமா
  • 1/8 - அரைக்கால்
  • 1/10 - இருமா
  • 1/16 - மாகாணி(வீசம்)
  • 1/20 - ஒரு மா
  • 3/64 - முக்கால் வீசம்
  • 3/80 - முக்காணி
  • 1/32 - அரைவீசம்
  • 1/40 - அரைமா
  • 1/64 - கால் வீசம்
  • 1/80 - காணி
  • 3/320 - அரைக்காணி முந்திரி
  • 1/160 - அரைக்காணி
  • 1/320 - முந்திரி
  • மேல்வாய்ச் சிற்றிலகத்தில் அடிமட்ட எண், மேல்முந்திரி /முந்திரி = 1/320 ஆகும்.

மேல்வாயிலக்கம் குறிப்புகள்

  • மா: பரப்பளவில் மா என்பது ஒரு வேலியில் 1/20 ஒரு நில அளவான காணி அதிற் காற்பங்காயிருந்திருக்கலாம். இவ் வீரளவைப் பெயர்களும் நீட்டலளவையினின்று எண்ணலள வைக்கு எடுத்தாளப் பெற்றதாகத் தெரிகின்றது. மாத்தல் என்பது ஒரு வழக்கற்ற வினை. மாத்தல் அளத்தல். மா+அனம் = மானம் = அளவு, படி (மேலைவடார்க்காட்டு வழக்கு). மா+திரம் = மாத்திரம்-மாத்திரை.
  • காணி காணிக்கப்பட்ட நிலஅளவு. காணித்தல்- மேற்பார்த்தல்.
  • வீசம்: பிசு-விசு-விசுக்கு-விசுக்காணி = சிறியது. விசு-வீசம்=சிற்றளவு. மாவும் காணியும் சேர்ந்தது மாகாணி.
  • முந்திரி:முந்திரி என்னும் சொல் ஒரு சிற்றெண்ணையும் ஒரு பழவகையையுங் குறிக்கும். முந்திரிப்பழத்தின் கொட்டை பழத்திற்கு வெளியே முன் துருத்திக்கொண்டிருப்பதால், அப் பழம் அப் பெயர் பெற்றது. முன்+துரி = முந்துரி-முந்திரி-முந்திரிகை. முந்து உருத்தது முந்திரி என்றுமாம். உருத்தல்-தோன்றுதல். முந்திரி என்னும் கீழ்வாயிலக்கப் பெயரும் முந்தித் தோன்றியதென்னும் பொருளதே.

கீழ்வாயிலக்கம்

  1. கீழரை = 1/640,
  2. கீழ்க்கால் = 1/1280
  3. கீழரைக்கால் = 1/2560
  4. கீழ்வீசம் = 1/5120
  • கீழ்வாய்ச் சிற்றிலக்கத்தில் அடிமட்ட எண், கீழ்முந்திரி = 1/102,400 ஆகும்.
கீழ்வாயிலக்கம் என்பதில் அடங்கும் அலகுகள்.
கீழ்வாய் இலக்கத்தின் எண்மதிப்புகீழ்வாய் இலக்கத்தின் பெயர்
1/640கீழரை
1/280கீழ்க்கால்
1/2560கீழரைக்கால்
1/5120கீழ் வீசம்
1/102400கீழ் முந்திரி
1/1075200இம்மி
1/23654400மும்மி
1/165580800அணு
1/1490227200குணம்
1/7451136000பந்தம்
1/44706816000பாகம்
1/312947712000விந்தம்
1/5320111104000நாகவிந்தம்
1/74481555456000சிந்தை
1/489631109120000கதிர்முனை
1/9585244364800000குரல்வளைப்படி
1/575114661888000000வெள்ளம்
1/57511466188800000000நுண்மணல்
1/2323824530227200000000தேர்த் துகள்
குறிப்பு
  • இம்மி என்பது மிகச் சிறிதான மத்தங்காய்ப் புல்லரிசி. அது எள் தினை என்பனபோல் சிற்றளவைப் பொருளாயிற்று. சிறுமையை உணர்த்தும் இல் என்னுஞ் சொல்லினின்று, இம்மி யென்னும் பெயர் தோன்றியிருக்கலாம்.[2]

எண் கூற்று வாய்ப்பாடு

1 இம்மி11 மும்மி
11 மும்மி7 அணு
1 அணு9 குணம்
1 குணம்5 பந்தம்
1 பந்தம்6 பாகம்
1 பாகம்7 விந்தம்
7 விந்தம்17 நாகவிந்தம்
1 நாகவிந்தம்60 வெள்ளம்
1 குரல்வளைப்படி60 வெள்ளம்
1 வெள்ளம்100 நுண்மணல்

நிறுத்தலளவை

எடுத்தல் என்பது எடுத்து நிறுத்தல். எடுத்தலளவையில் பொன்னும் மணியும் நிறுக்க ஒன்றும், பிற பொருள்களை நிறுக்க ஒன்றுமாக இருவகையுண்டு. பொன்நிறை யளவைக்குப் பொன்னிலக்கம் என்று பெயர். பொன் ஏராளமா யிருப்பின், அதுவும் பிற பொருள்போல் நிறுக்கப்படும். குன்றிமணி, வராகனெடை, பலம், வீசை, துலாமெனப் படிக்கல் கொண்டு தராசிலிட்டு நிறுப்பது நிறுத்தல் அளவை ஆகும். இந்த எடுத்தலளவை பொன்னளவை,பிற பொருளளவையென இருவகைப்படுகிறது. அரசு முத்திரை இட்ட அளவுக்கல்லானது, குடிஞைக்கல், பாடிக்கல், பண்டாரக்கல் என்னும் பெயர்களுள் ஒன்றாற் குறிக்கப்பட்டது. அதே அளவுக்கல்லானது, நகரங்களில் நகரக்கல் எனப்பட்டது.
நிறுத்தல் அளவுக்கான தராசு ஆறு வகைப்படும்.
  1. மணித்தராசு - இது இரத்தினம் முதலியவற்றை நிறுக்கும் மிகச் சிறிய தராசு
  2. பொன் தராசு - தங்கம் போன்றவைகளை நிறுக்கும் சிறு தராசு
  3. உலோகத் தராசு - செம்பு, பித்தளை முதலியவற்றை நிறுக்கும் பெருந் தராசு
  4. பண்டத் தராசு - பலசரக்குகளை நிறுக்கும் தராசு
  5. கட்டைத் தராசு - விறகு அல்லது மூட்டைகளை நிறுக்கும் தராசு. இது இரு புறமும் சதுர மரப்பலகைகளைத் தட்டுக்களாகக் கொண்டிருக்கும்.
  6. தூக்கு - காய்கறிகளை நிறுக்கும் தராசு. இது மரக்கம்பாலான துலாக் கோலின் ஒரு பக்கத்தில் மட்டும் தொங்கும் கூடைத் தட்டால் ஆனது.

அளவைகள்

  • உளுந்து (grain) - 65 மி. கி.
  • குன்றிமணி - 130 மி. கி.
  • மஞ்சாடி - 260 மி.கி.
  • மாசம் - 780 மி.கி.
  • பனவெடை - 488 மி.கி
  • வராகனெடை - 4.2 கி.
  • கழஞ்சு - 5.1 கி.
  • பலம் - 41 கி. (35 கி.)
  • கஃசு அல்லது கைசா - 10.2 கி.
  • தோலா - 12 கி.
  • ரூபாவெடை - 12 கி.
  • அவுன்ஸ் - 30 கி.
  • சேர் - 280 கி.
  • வீசை - 1.4 கி.கி.
  • தூக்கு - 1.7 கி.கி.
  • துலாம் - 3.5 கி.கி.

பண்டங்கள் நிறுத்தல் வாய்ப்பாடு

பொன் அதிகமாக இருப்பினும், இந்த அளவையே பின்பற்றப்பட்டது.
32 குன்றிமணி1 வராகன்1.067 கிராம்
10 வராகனெடை1 பலம்10.67 கிராம்
8 பலம்1 சேர்85.33 கிராம்
5 சேர்1 வீசை426.67 கிராம்
1000 பலம்1 கா10.67 கிலோகிராம்
6 வீசை1 துலாம்2.560 கிலோகிராம்
8 வீசை1 மணங்கு3.413 கிலோகிராம்
20 மணங்கு1 கண்டி (பாரம்)68.2667 கிலோகிராம்

பொன்னளவை

பொன்னையும்,மணியையும் நிறுக்கப் பயன்படுகிறது. இது 'பொன்னிலக்கம்' எனப்பட்டது.
  • பேரளவான பொன்னை நிறுக்க ஆணிக்கல்லும், மிகப்பேரளவான பொன்னை நிறுக்க, துலாம் கணக்கும் பயன்படுத்தப்பட்டது.

பொன்னிலக்க அலகுகள்

பொன்னிலக்கம் என்பதன் அலகுகள்
  • 4 நெல்லெடை = 1 குன்றிமணி
  • 2 குன்றிமணி = 1 மஞ்சாடி
  • 2 மஞ்சாடி = 1 பணவெடை வல்லம்
  • 5 பணவெடை = 1 கழஞ்சு
  • 10 வல்லம் = ஒரு கழஞ்சு= 16அவுன்சு
  • 8 பணவெடை = 1 வராகனெடை
  • 4 கழஞ்சு = 1 கஃசு
  • 4 கஃசு = 1 பலம்

பொன்நிறுத்தல் வாய்ப்பாடு

1 நெல் (எடை)8.33 மில்லிகிராம்
4 நெல்1 குன்றிமணி33.33 மில்லிகிராம்
2 குன்றிமணி1 மஞ்சாடி66.67 மில்லிகிராம்
2 மஞ்சாடி1 பணம்(பணவெடை)*133.33 மில்லிகிராம்
8 பணம்(பணவெடை)1 வராகன்1.067 கிராம்
5 வராகன்1 கழஞ்சு5.33 கிராம்
4 கழஞ்சு1 கஃசு10.4 கிராம்
4 கஃசு1 பலம்41.6 கிராம்
1.5 கழஞ்சு8 கிராம்

முகத்தலளவை

முகத்தளலவைக் கருவிகளுள் ஒன்றான படிஅல்லது நாழி
பால், மோர், நெய் போன்ற நீரியல் பொருளை உழக்கு படிகளால் மொண்டு எடுத்து அளப்பது முகத்தல் அளவை ஆகும். முகந்து அளக்கப்படும் பொருள்களுள், நெல் பெரும்பான்மையாகவும், சிறந்ததாகவுமிருத்தல் பற்றி, முகத்தலளவைநெல்லிலக்கம் எனப்படும்.

முகத்தலளவை அலகுகள்

  1. 2செவிடு = பிடி
  2. 5செவிடு = 1 ஆழாக்கு
  3. 2ஆழாக்கு = 1 உழக்கு
  4. 2உழக்கு = 1 உரி
  5. 2உரி = 1 நாழி
  6. 8நாழி = 1 குறுணி(மரக்கால்)
  7. 2குறுணி = 1பதக்கு
  8. 2பதக்கு = 1தூணி(காடி)
  9. 3தூணி = 1 கலம்
  10. 400குறுணி = 1 கரிசை (பறை)

தனி முகத்தலளவைகள்

  1. அரசு முத்திரையிட்ட அளவை நாழியும் மரக்காலும், அரச பண்டாரத்தில் அரசன் பெயரினைத் தாங்கியிருந்தன.
(எடுத்துக்காட்டு:சோழாந்தகன் நாழி, அருண்மொழித்தேவன் மரக்கால்)
  1. கோயிற் பண்டாரத்தில் தெய்வப்பெயரினைத் தாங்கியிருந்தன. (எடுத்துக்காட்டு:ஆடவல்லான் மரக்கால்,செப்புக்கால் திருச்சிற்றம்பலமுடையான் மரக்கால்)
  2. ஒவ்வொரு நாட்டிற்கும், சிறப்பான பெருமுகத்தலளவும் உண்டு.
  • 21மரக்கால் = கோட்டை என பாண்டி நாட்டில் அழைக்கப்பட்டது.
  • 40மரக்கால் = புட்டி என வடசோழநாட்டில் அழைக்கப்பட்டது.

பெய்தல் அளவை

நெல் முதலியவற்றை படி, மரக்கால்களில் சொரிந்து அளப்பது பெய்தல் அளவை ஆகும்.
  • 360 நெல் = 1 செவிடு
  • 5 செவிடு = 1 ஆழாக்கு
  • 2 ஆழாக்கு = 1 உழக்கு
  • 2 உழக்கு = 1 உரி
  • 2 உரி = 1 படி
  • 8 படி = 1 மரக்கால்
  • 2 குறுணி = 1 பதக்கு
  • 2 பதக்கு = 1 தூணி
  • 5 மரக்கால் = 1 பறை
  • 80 பறை = 1 கரிசை
  • 48=96 படி = 1 கலம்
  • 120 படி = 1 பொதி
1 படிக்கு
  • அவரை = 1,800
  • மிளகு = 12,800
  • நெல் = 14,400
  • பயறு = 14,800
  • அரிசி = 38,000
  • எள் = 1,15,000

கரண்டி அளவுகள்

1 தேக்கரண்டி - 4 மி.லி
1 குப்பி - 175 தேக்கரண்டி ( 700 மி.லி)
1 தீர்த்தக்கரண்டி - 1.33 மி.லி
1 நெய்க்கரண்டி - தேக்கரண்டி (4.0 மி.லி)
1 உச்சிக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 மேசைக்கரண்டி - 4 தேக்கரண்டி (16 மி.லி)
1 பாலாடை - 30 மி.லி
1 எண்ணெய்க்கரண்டி - 8 பாலாடை (240 மி.லி)

முகத்தல் (நீர்ம) வாய்ப்பாடு

5 செவிடு = 1 ஆழாக்கு
2 ஆழாக்கு = 1 உழக்கு
2 உழக்கு = 1 உரி
2 உரி = 1 படி
8 படி = 1 குறுணி (மரக்கால்)
2 குறுணி = 1 பதக்கு
2 பதக்கு = 1 தூணி

நீட்டலளவை

விரல், சாண், முழம் என நீளத்தை கை அல்லது கால்களால் அளப்பது நீட்டல் அளவை ஆகும்.நீட்டலளவை வழியளவை, நிலவளவையென இருவகைப் படுகிறது.
  • 10 கோண் = 1 நுண்ணணு
  • 10 நுண்ணணு = 1 அணு
  • 8 அணு = 1 கதிர்த்துகள்
  • 8 கதிர்த்துகள் = 1 துசும்பு
  • 8 துசும்பு = 1 மயிர்நுனி
  • 8 மயிர்நுனி = 1 நுண்மணல்
  • 8 நுண்மணல் = 1 சிறு கடுகு
  • 8 சிறு கடுகு = 1 எள்
  • 8 எள் = 1 நெல்
  • 8 நெல் = 1 விரல்
  • 12 விரல் = 1 சாண்
  • 2 சாண் = 1 முழம்
  • 4 முழம் = 1 பாகம்
  • 6000 பாகம் = 1 காதம் (1200 கஜம்)
  • 4 காதம் = 1 யோசனை

வழியளவை

  1. 8 தோரை(நெல்) = 1 விரல்
  2. 12 விரல் = 1 சாண்
  3. 2 சாண் = 1 முழம்
  4. 4 முழம் = 1 பாகம் அல்லது தண்டம்
  5. 2000 தண்டம் = 1 குரோசம் 21/4மைல்
  6. 4 குரோசம் = 1 யோசனை
  7. 71/2 நாழிகைவழி = 1 காதம்(10மைல்)
  8. 4840 சதுர கெசம் = 1 ஏக்கர்
  9. 436 குழி = 1 ஏக்கர்
  10. 5 பர்லாங்கு = 1 கிலோமீட்டர்
  11. 8 பர்லாங்கு = 1 மைல்

நிலவளவை

இது குழிக்கணக்கு எனப்படும். அவை வருமாறு;-
  1. 16 சாண் = 1 கோல்
  2. 18 கோல் = 1 குழி
  3. 100 குழி = 1 மா
  4. 240 குழி = 1 பாடகம்
  5. 20 மா = 1 வேலி
  6. 1 மரக்கால் வேலைபாடு (நெல் நடவுக்கு தேவையான விதைகள்) - 8 சென்ட்
  7. 12.5 மரக்கால் வேலைபாடு - 100 சென்ட் - 1 ஏக்கர்
  8. 40 மரக்கால் = 1 புட்டி
  9. 1 குழி - 100 சதுர அடி
  10. 1 மா - 100 குழி (10000 சதுர அடி)
  11. 1 காணி - 4 மா (40000 சதுர அடி = 92 சென்ட் = 0.92 ஏக்கர்) - 400 குழி
  12. 1 வேலி - 7 காணி (6.43 ஏக்கர் = 2.6 ஹெக்டர்)
  13. 1 பர்லாங்கு - 220 கெசம் (660 அடி)
  14. 1 நிலம் (ground) - 2400 சதுர அடி - 5.5 சென்ட் - 223 சதுர மீட்டர்
குறிப்பு
  • செய் என்ற ஒரு நில அளவு, சங்க காலத்தில் இருந்தது.
  • நிலவரி முறை - நிலவரியை கணிக்க நிலவளவை நடத்தின அதிகாரி உலகளந்தான் எனப்பட்டான்.
  • அவன் கையாண்ட அளவுகோல், உலகளந்த கோல் எனப்பட்டது.
    • இம்முறை முதலாம் இராசராசன் காலத்தில் ஒரு முறையும்,முதற் குலோத்துங்கன் காலத்தில் ஒருமுறையும், மூன்றாங்குலோத்துங்கன் காலத்தில் ஒரு முறையும் அளக்கப்பட்டது.
  • இறையிறுக்குங்கோல், குடிதாங்கிக் கோல் எனப்படும் அளவைகள், நாட்டின் எல்லை மாறும் போதெல்லாம் அளக்க பயன்பட்டது.
    • நிலங்கள் மிக நுட்பமாக அளக்கப்பட்டன.
எடுத்துக்காட்டு
ஆக இறையிலி நீங்கு நிலம் முக்காலே
இரண்டு மாக்காணி அரைக்காணி
முந்திரிகைக்கீழ் அரையே இரண்டுமா
முக்காணிக் கீழ் முக்காலே நான்குமா
அரைக்காணி முந்திரைக் கீழ்
நான்கு மாவினால்
இறை கட்டின காணிக்கடன்"(சோ.,பக்.58)
- இதில் குறிக்கப்பட்ட நில அளவு 1/52,428,800,000 வேலி.

கால வாய்ப்பாடு / தெறிப்பு அளவை

நொடி, நாழிகை, நாளெனக் காலத்தைக் கணிப்பது தெறிப்பு அளவை ஆகும்.
அளவைஅளவை முறைகுறிப்புகள்
1 குழி(குற்றுழி)கார்த்திகை நாள்மீன் ஒரு முறை மின்னும் நேரம்
10 குழி1 கண்ணிமைகண்ணை இமைக்கும் நேர அளவு
2 கண்ணிமை1 கைந்நொடி[3]கையை நொடிக்கும் நேர அளவு
2 கைந்நொடி1 மாத்திரை[3]
2 மாத்திரை1 குரு[3]
2 குரு1 உயிர்[3]
6 உயிர்1 சணிகம்[3]தற்கால 2 நொடி அளவு
12 சணிகம்1 விநாடி[3]தற்கால 24 நொடி அளவு
60 தற்பரை1 விநாடி
60 விநாடி1 நாழிகை(நாடி)[3]தற்கால 24 நிமிட அளவு
2 சணிகம்1 அணு[சான்று தேவை]
6 கண்ணிமை1 நொடி(சிற்றுழி)ஒரு நீருள்ள பாத்திரத்தில் மூங்கில் குழலால் ஊதும் பொழுது ஏற்படும் குமிழியானது ஒரு சாண் அளவு உயரும் நேரம்[சான்று தேவை]
2 நொடி1 வினாடிஒரு மனிதனின் இதயம் ஒரு முறை துடிக்கும் நேரம்[சான்று தேவை]
5 வினாடி1 அணு[சான்று தேவை]
6 அணு1 துளி(நாழிகை வினாடி)[சான்று தேவை]
15 அணு1 நிமிடம்[சான்று தேவை]
60 அணு1 கணம்[சான்று தேவை]
6 கணம்1 நாழிகை[சான்று தேவை]
15 கணம்1 ஓரை[சான்று தேவை]
2½ நாழிகை1 ஓரை[4]60 நிமிடம்தற்கால ஒரு மணிநேரம்
3¾ நாழிகை1 முகூர்த்தம்[4]1½ ஓரை
7½ நாழிகை1 சாமம்[4]3 ஓரை, 2 முகூர்த்தம்
10 நாழிகை1 சிறும்பொழுது4 ஓரை
4 சாமம்1 பொழுது[4]30 நாழிகை
2 பொழுது1 நாள்(திகதி)[4]60 நாழிகை, 6 சிறும்பொழுதுகதிரவன் உதிக்கும் நேரம் நாளின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால 24 மணிநேர அளவு(ஒரு நாள்)
7 நாள்1 கிழமை(வாரம்)[4]கதிரவன் உதிக்கும் நேரத்தின்(ஒரு நாளின் தொடக்கம்) ஓரை(இராசி) ஞாயிறு ஓரை வரும் நாள்(ஞாயிற்றுக்கிழமை) வாரத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால ஒரு வாரம்
15 நாள்1 அழுவம்(பக்கம்)[4]
30 நாள்1 திங்கள்(மாதம்)[4]கதிரவன், ஒரு சூரிய மாதத்தின் ஓரைக்குள்(இராசி) நுழையும் நேரம் அம்மாதத்தின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டதுதற்கால ஒரு மாதம்
48 நாள்1 மண்டலம்
2 திங்கள்1 பெரும்பொழுது60 நாள்
6 திங்கள்1 அயனம்[4]
2 அயனம்1 ஆண்டு(வருடம்)[4]6 பெரும்பொழுதுகதிரவன், சூரிய மாதங்களின்(இராசிச் சக்கரத்தின்) முதல் மாதத்தில்(மேழ ஓரையில்(இராசி)) நுழையும் நாள் ஆண்டின் தொடக்கமாகக் கொள்ளப்பட்டது. இந்நாள், சந்திர மாதத்தில் சித்திரை முதல் நாள் ஆகும்.தற்கால ஒரு ஆண்டு(365 நாள், 15 நாழிகை, 31 விநாடி, 15 தற்பரை)
64(82) ஆண்டு1 வட்டம்
4096(84) ஆண்டு1 ஊழி
-உகம்(யுகம்)
17,28,000(8x2,16,000) ஆண்டுகிரேதாயுகம்[5]
12,96,000(6x2,16,000) ஆண்டுதிரேதாயுகம்[5]
8,64,000(4x2,16,000) ஆண்டுதுவாபரயுகம்[5]
4,32,000(2x2,16,000) ஆண்டுகலியுகம்[5]
4 உகங்கள்(43,20,000 ஆண்டு)1 சதுர்யுகம்(மகாயுகம்)[6]
2000 சதுர்யுகம்1 நான்முகன் பேராயுள்[6]
100 நான்முகன் பேராயுள்1 ஆதிநான்முகன் யுகம்[6]

சிறுபொழுது

  1. காலை - முதல் சிறுபொழுது - 1 சாமம் முதல் 4 சாமம் வரை ( 6 முதல் 10 மணி வரை)
  2. நண்பகல் - இரண்டாம் சிறுபொழுது - 5 சாமம் முதல் 8 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  3. எற்பாடு - மூன்றாம் சிறுபொழுது - 9 சாமம் முதல் 12 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)
  4. மாலை - நான்காம் சிறுபொழுது - 13 சாமம் முதல் 16 சாமம் வரை (6 முதல் 10 மணி வரை)
  5. யாமம் - ஐந்தாம் சிறுபொழுது - 17 சாமம் முதல் 20 சாமம் வரை (10 முதல் 2 மணி வரை)
  6. வைகறை - ஆறாம் சிறுபொழுது - 21 சாமம் முதல் 24 சாமம் வரை (2 முதல் 6 மணி வரை)

பெரும்பொழுது

  1. கார் - ஆவணி, புரட்டாசி
  2. கூதிர் - ஐப்பசி, கார்த்திகை
  3. முன்பனி - மார்கழி, தை
  4. பின்பனி - மாசி, பங்குனி
  5. இளவேனில் - சித்திரை, வைகாசி
  6. முதுவேனில் - ஆனி, ஆடி

சார்த்தல்

சுரம், ஒலி, நிறம், உரு முதலியவற்றைக் கூறி “இப்படி”, “அதைப்போல” என்று ஒப்பிட்டு அளப்பது சார்த்தல் அளவை ஆகும்.

நாணயம்

1 பல் - 0.9 உளுந்து (கிரைன்)
8 பல் - 1 செங்காணி (செப்பு) - 7.2 உளுந்து (கிரைன்)
0.25 செங்காணி - 1 கால் காணி - 1.8 உளுந்து (கிரைன்)
64 பல் - 1 காணப்பொன் (காசுப்பணம் (பொன்)) - 57.6 உளுந்து (கிரைன்)
1 இரோமானிய தினாரியம் 2 காணப்பொன்னுக்கும், 1 செங்காணிக்கு கொடுத்து வர்த்தகம் செய்யப்பட்டது - 124 உளுந்து (கிரைன்)
12 பை - 1 அணா
16 அணா - 1 ரூபாய்

பிற்கால நாணய அளவை

1 அணா - 3 துட்டு
1/4 அணா - 3/4 துட்டு
4 அணா - 25 பைசா
8 அணா - 50 பைசா பணம் - வெள்ளிக்காசு துட்டு - செப்புக்காசு