கம்ப்யூட்டருக்குப் புதியவரா? தெரிந்தே செய்திடும் தவறுகள்

CW2RQyB.jpg


தகவல் தொழில் நுட்ப சாதனங்கள் இன்று நம் வாழ்வின் ஓர் முக்கிய அங்கமாக, அடிப்படை சாதனங்களாக மாறிவிட்ட பின்னரும், பல மோசமான பழக்க வழக்கங்களை, அவை மோசம் என்று தெரிந்த பின்னரும், மாற்றிக் கொள்ளாமல் தொடர்ந்து பின்பற்றி வருகிறோம். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.1. மோசமான சூழ்நிலையில் கம்ப்யூட்டரை இயக்குதல்: 


கம்ப்யூட்டர் முன்னால், பல மணி நேரங்கள் தொடர்ந்து அமர்ந்து அதனை இயக்குவது பலருக்கு வாடிக்கையாகிவிட்டது. நம்முடைய முதுகைத் தாங்கிப் பிடிக்காத நாற்காலி, உயரத்தை அட்ஜஸ்ட் செய்ய முடியாத மேஜை மற்றும் நாற்காலிகள், உடல் வலி வந்த பின்னரும் உட்கார்ந்து பணியாற்றும் நிலையை மாற்றிக் கொள்ளாமல் தொடருதல் ஆகியவை நமக்குப் பெரிய அளவில் துன்பத்தை வரவழைக்கும் விஷயங்களாகும்.


2. ஒரே அழுக்கு: 


கம்ப்யூட்டர், கீ போர்ட், மவுஸ், சிபியு உள்ள கேபின் - இவை யாவும் மோசமான தூசு மற்றும் அழுக்கு படிந்த நிலையிலேயே இயக்கப்படுகின்றன. வெளிர் நிறங்களில் வடிவமைக்கப்பட்ட பல கீ போர்டுகள், அழுக்குப் படிந்ததனால், முற்றிலும் நிறம் மாறி, தங்கிவிட்ட அழுக்கு கறைகளுடனேயே காணப்படுகின்றன. அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வில், பொதுக் கழிப்பறைகளில் அமரும் இடத்தில் காணப்படும் கிருமிகளைக் காட்டிலும் 60 மடங்கு மேலாகக் கிருமிகள், கீ போர்டில் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு ஒருமுறை என இல்லாவிட்டாலும், வாரம் ஒருமுறையாவது, இவற்றைச் சுத்தப்படுத்தும் திரவம் கொண்டு சுத்தப்படுத்தினால், இயக்குபவரின் உடல் நலம் பாதுகாக்கப்படும் அல்லவா?


3. தொல்லை தரும் வகையில் போன் பேசுதல்:


 நம்மில் பலர், பெரும்பாலானவர்களின் வெறுப்புக்கு ஆளாவது, நாம் மொபைல் பயன்படுத்தும் முறைகளினால்தான். சாப்பிடும் மேஜைகளிலிருந்து போன்களைத் தள்ளியே வைக்கவும்; கடைகள், ஜிம், பொது அலுவலகங்கள், லிப்ட்கள், மருத்துவமனை, பஸ், ஆட்டோ, ட்ரெயின் போன்ற இடங்களில், மொபைல் போனில் உரக்கப் பேசுவதை எப்போது நிறுத்தப் போகிறோம்?


4. பேக் அப்பா? அப்படின்னா?


நம்மில் பெரும்பாலோர், கம்ப்யூட்டரில் அமைக்கப்படும் பைல்களுக்கான பேக் அப் காப்பி எடுப்பதே இல்லை. சரியான கால இடைவெளியில், கம்ப்யூட்டரில் உள்ள அனைத்து பைல்களையும், இன்னொரு எக்ஸ்டெர்னல் ஹார்ட் ட்ரைவிற்கு மாற்றி வைப்பது, நல்லதொரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகும். இதனால், நாம் அரும்பாடு பட்டு பாதுகாத்து வைத்த அந்நாள் படங்கள், போட்டோக்கள், டேட்டாக்கள், பைல்கள், கடிதங்கள், நிதி நிர்வாகத் தகவல்கள் என அனைத்துமே சில வேளைகளில் நமக்குக் கிடைக்காமல் போய்விடும். தெரிந்தும் ஏன் பேக் அப் எடுப்பதில்லை? (பல தன்னாட்சி கல்லூரிகள் கூட தங்கள் மாணவர்களின் மதிப்பெண்கள் மற்றும் முக்கிய தகவல்களுக்கு பேக் அப் எடுப்பதில்லை என்ற குற்றச் சாட்டு எழுந்து வருகிறது.)5. விட்டேனா பார் வீடியோ: 


அடுத்த அடுத்த லெவலை முடித்துத் தான் வருவேன் எனப் பலர், பல கம்ப்யூட்டர் கேம்ஸ்களை வெறியோடு தொடர்ந்து நான்கு மணி நேரத்திற்குப் பின்னர் கூட விளையாடுகிறார்கள். இடையே ஓய்வு எடுக்காமல், தண்ணீர் அருந்தாமல், கால்கள் மற்றும் உடம்பை அசைக்காமல் நாற்காலியில் அமர்ந்தே இருப்பது, உடலுக்குத் தீங்கினை விளைவிக்கும் என்பது தெரிந்தும் ஏன் பலர் இந்த பழக்கத்தினை மாற்றுவதில்லை?6.ஷட் டவுண்: 


லேப்டாப் கம்ப்யூட்டர்களை, அதில் வேலை முடிந்த பின்னர், ஜஸ்ட் அப்படியே திரை உள்ள மேல் மூடியை மூடி எடுத்துச் செல்லலாம். ஆனால், இது நல்லதல்ல; லேப்டாப் வெகுநாட்கள் உழைக்க வேண்டும் என எண்ணினால், அதனை குறிப்பிட்ட கால இடைவெளியில் ஷட் டவுண் செய்திடும் பழக்கத்தினை மேற்கொள்ள வேண்டும். 7. படுக்கையே தொழில் கூடமாக:


லேப்டாப், ஸ்மார்ட் போன், ஐபேட் என அனைத்தையும் படுக்கைக்கு உறங்கச் செல்லும் போது கொண்டு செல்வது, வெகு நேரம் விழித்திருந்து பயன்படுத்துவது, சரியான நேரத்தில் தூங்க மறுப்பது, பின்னர் தூக்கம் சரியாக வருவதே இல்லை என்று குற்றம் சாட்டுவது போன்ற செயல்கள் தவறு என்று தெரிந்த பின்னரும், தொடர்ந்து இந்தப் பழக்கத்தைப் பலரும் கடைப்பிடிப்பது ஏன்? (குறிப்பாக சில மருத்துவர்கள், இரவு நேரங்களில் கண் விழித்து லேப்டாப் கம்ப்யூட்டரில் பணியாற்றி, அதனுடனேயே உறங்குகின்றனர். மறு நாளில், நோயாளிகளைப் பார்க்கையில் எரிச்சல், கண்களிலும் மனதிலும் தோன்றாதா?)8. சிஸ்டம் அப்டேட் கேன்சல்:


பல வேளைகளில், நமக்கு நாம் பயன்படுத்தும் சிஸ்டம், அப்ளிகேஷன் சாப்ட்வேர் புரோகிராம்கள் மற்றும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் ஆகியவற்றிற்கு அப்டேட் பைல்கள் உள்ளன. அப்டேட் செய்திடலாமா? என்று கேள்வி வரும். அந்த வேலையை மேற்கொண்டு, பின்னர், கம்ப்யூட்டரை மறுபடியும் ரீஸ்டார்ட் செய்திட சோம்பேறித்தனப்பட்டு, பலர் அப்டேட் செய்வதைக் கேன்சல் செய்துவிடுகின்றனர். இது தவறு மட்டுமின்றி, தேவையற்ற அபாயத்தினையும் வரவழைக்கும். நிறுவனங்கள் அப்டேட் பைல்களை அளிக்கையில், தாங்கள் தயாரித்து வழங்கிய புரோகிராம்களில் கூடுதல் வசதிகளை மட்டும் அளிப்பதில்லை. தங்கள் புரோகிராம்களில் உள்ள எந்த பலவீனமான இடத்தைப் பயன்படுத்தி, வைரஸ்கள் நுழைகின்றனவோ, அவற்றையும் சரி செய்து அப்டேட் பைல்களை அளிக்கின்றனர். இவற்றை அப்டேட் செய்திடும் பணியை கேன்சல் செய்வதன் மூலம், நாம் வசதிகளை மட்டும் இழப்பதில்லை; வைரஸ் எதிரான பாதுகாப்பினையும் இழக்கிறோம்.9. உங்கள் பாஸ்வேர்ட்: 


ஏறத்தாழ ஐந்துக்கும் மேற்பட்ட பாஸ்வேர்ட்களை ஒருவர் ஒரு நாளில் குறைந்தது பயன்படுத்த வேண்டியதுள்ளது. உங்கள் பாஸ்வேர்ட் 1234 என உள்ளதா? உங்கள் பெயர், பிறந்த நாள், தொலைபேசி எண் என உள்ளதா? நிச்சயம் அவை பாதுகாப்பானவை இல்லை. பல ஆண்டுகளாக ஒரே பாஸ்வேர்டையே பயன்படுத்தி வருகிறேன் என்று பெருமை அடித்துக் கொள்கிறீர்களா? இதனை எச்சரிக்கும் செய்திகளை உதாசீனம் செய்கிறீர்களா? இது தவறில்லையா?10. பேட்டரி ட்யூனிங்:


 லேப்டாப் கம்ப்யூட்டரின் பவர் ப்ளக்கைச் செருகி, அதனைப் பயன்படுத்துவது மிக எளிதுதான். ஆனால் அதோடு நின்றுவிடக் கூடாது. பேட்டரிகளை அதன் திறன் முழுமையாகக் கிடைக்கும் வகையில், அதனை சார்ஜ் செய்வதுடன் ட்யூனிங் செய்திடவும் வேண்டும். சில மாத இடைவெளியில், பேட்டரிகளை முழுமையாகச் சோதனை செய்து, அவற்றின் திறனை முழுமையாகப் பயன்படுத்தும் வகையில் தயார் செய்திட வேண்டும். ஆனால், இது தெரிந்திருந்தும் ஏன் பலர் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதில்லை?

ஆண்ட்ராய்ட்போனில் தவறுகள் தவிர்க்க டிப்ஸ்...

VQat6s0.jpg?1


மொபைல் போன் பயன்பாட்டினைப் பொறுத்த வரை, பன்னாடெங்கும் மிக அதிகமாகப் பயன்படுத்தப்படுவது ஆண்ட்ராய்ட் சிஸ்டமே. அதாவது, போன் பயன்படுத்துதலில் பல்வேறு நிலைகளில் திறமை உள்ளவர்கள் இதனைக் கையாள்கின்றனர். இந்தியாவில், ஸ்மார்ட் போன் பயன்பாடு பெருகி வருவதால், ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தினைத் தொடக்க நிலையில் பயன்படுத்துபவர்கள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். இவர்களிடம் இந்த சிஸ்டம் பயன்பாட்டில் சில பொதுவான தவறுகள் காணப்படுகின்றன. சில தவறுகள் பொதுவானவை; இழப்பு எதனையும் ஏற்படுத்தாதவை. ஆனால், சில தவறுகளினால், போனில் உள்ள டேட்டாவினை இழக்க நேர்கிறது. இந்த தவறுகள் ஏற்படாமல் எப்படி செயல்பட வேண்டும் என்பதை இங்கு பார்க்கலாம்.


1. பாதுகாப்பினை உருவாக்குக: 


ஸ்மார்ட்போனில் நாம் அதிக அளவில் டேட்டாவினைச் சேர்த்து வைக்கிறோம். இந்த தகவல்கள் பெரும்பாலும் மற்றவர்களுக்குத் தெரியக் கூடாதவையே. எனவே, இவற்றை மற்றவர்கள் எளிதில் அணுகும் சூழ்நிலையில் அமைக்கக் கூடாது. மற்றவர்கள் போனைக் கையாள்வதைத் தடுக்க, பாஸ்வேர்ட், பேட்டர் அமைப்பின் வழி பாதுகாப்பு, விரல் ரேகை பாதுகாப்பு அல்லது உங்கள் ஸ்மார்ட் போன் தரக்கூடிய எந்த வகையிலாவது, பாதுகாப்பினை ஏற்படுத்த வேண்டும். கூகுள் அக்கவுண்ட்டினை இதில் பயன்படுத்தினால், இரண்டு அடுக்கு நிலை பாதுகாப்பினை உருவாக்கி வைக்கவும்.


2. பி.ஓ.பி. (POP) அஞ்சல் முறையைத் தவிர்க்கவும்: 

பொதுவாக ஆண்ட்ராய்ட் வாடிக்கையாளர்களிடமிருந்து ஒரு கேள்வியை எதிர்பார்க்கலாம். ”ஏன் என் மெயில்கள் போனிலிருந்து அல்லது டெஸ்க்டாப்பிலிருந்து மறைந்து விடுகின்றன?” இதற்கான அடிப்படை காரணம், நீங்கள் உங்கள் அஞ்சல் கணக்கினை பி.ஓ.பி. வகையில் அமைப்பதுதான். இந்த வகையில், அஞ்சல்கள் எப்போதும் அதற்கான சர்வரில் தங்கி இருக்கும்படி அமைக்க வேண்டும். அஞ்சல்களைப் படிக்க தரவிறக்கம் செய்திடுகையில், சர்வரில் இருந்து மறையும்படி அமைக்கக் கூடாது. பலவகையான வழிகளில் அஞ்சல் அக்கவுண்ட்களை அமைக்கலாம். ஆனால், கூடுமானவரை பி.ஓ.பி. வகை செட் அப்பினைத் தவிர்க்கவும். 8HojqHi.jpg


3. விட்ஜெட்டுகள் அதிகம் தேவையா? 


சில ஆண்ட்ராய்ட் ஹோம் ஸ்கிரீன் திரைகளில் எக்கச்சக்கமான விட்ஜெட்டுகள் எனப்படும் அப்ளிகேஷன்களைப் பார்க்கிறோம். விட்ஜெட்டுகள் என்பவை எப்போதும் தாமாகவே இயங்கி, தகவல்களைத் தந்து கொண்டிருப்பவை. எந்த அளவிலான எண்ணிக்கையில் இவை அதிகமாக இருக்கின்றனவோ, அந்த அளவிற்கு உங்கள் போனின் பேட்டரி மின் சக்தி வேகமாகத் தீர்ந்துவிடும். எனவே, உங்களுக்குத் தேவையான, அவசியம் தேவையான விட்ஜெட்டுகளை மட்டும் தேர்ந்தெடுத்து அமைக்கவும். அதிகமாக வேண்டாம். 4. ஜிமெயில் தவிர்க்க வேண்டாம்: 


ஆண்ட்ராய்ட் மற்றும் ஜிமெயில் பிரித்து வைத்துப் பார்க்க இயலாதவை. இவை இரண்டும் இணைந்த செயல்பாடு மிகவும் நேர்த்தியாக இருக்கும். எனவே, நீங்கள் ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட்போன் ஒன்று வாங்கிப் பயன்படுத்துவதாக இருந்தால், கட்டாயம் ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கிப் பயன்படுத்தவும். ஜிமெயில் அக்கவுண்ட் இல்லை என்றால், பல முக்கிய பயனுள்ள விஷயங்களை இழக்க நேரிடும். கூகுள் பிளே ஸ்டோர், பேக் அப் எடுப்பது எனப் பல முக்கிய செயல்பாடுகளை, ஜிமெயில் அக்கவுண்ட் வழியாகத்தான் மேற்கொள்ள முடியும். ஆண்ட்ராய்ட் போனை செட் அப் செய்வதற்கு முன்னரே, ஜிமெயில் அக்கவுண்ட் ஒன்றை உருவாக்கி, போன் செட் அப் செயல்பாட்டின் போது பயன்படுத்தவும். காலப் போக்கில் போன் பயன்பாட்டில், இதன் வசதிகளை நீங்கள் உணர்ந்து ரசிப்பீர்கள்.5. அனுமதிகளை அளந்து தரவும்: 


அப்ளிகேஷன் ஒன்றை இன்ஸ்டால் செய்கையில், அந்த அப்ளிகேஷனைப் பயன்படுத்தும்போது, சிஸ்டத்திற்கு எந்த வகை அனுமதியைத் தர இருக்கிறீர்கள் என்ற எச்சரிக்கை உங்களுக்குக் கிடைக்கும். சிஸ்டத்திற்கான அனுமதியைக் குறிப்பிட்ட அளவிலேயே இருக்க வேண்டும். சில அப்ளிகேஷன்கள் உங்களுடைய இடம் குறித்த தகவல்கள், மின் அஞ்சல் ஆகியவற்றைப் பயன்படுத்த அனுமதி கேட்கும். இவற்றைத் தர வேண்டாம். இவை இல்லாமல், இன்ஸ்டால் ஆகாது என்றால், அந்த அப்ளிகேஷனையே புறக்கணித்துவிட வேண்டும். எந்த வகை அனுமதி கொடுத்தால், நம் டேட்டா எந்த அளவில் அப்ளிகேஷன் வசப்படும் என்பதனை நன்கு அறிந்து, அதற்கேற்ப அனுமதி தரவும். 6. தேவை இல்லாமல் புளுடூத் ஏன்?


 நீங்கள் புளுடூத் பயன்படுத்தாதவராக இருந்தால், அல்லது எப்போதாவது மட்டுமே பயன்படுத்துபவராக இருந்தால், ஏன் அதன் இயக்கத்தைத் தொடர்ந்து செயல் நிலையிலேயே வைத்திருக்க வேண்டும்? இது உங்கள் பேட்டரியின் மின் சக்தியை வேகமாக இழக்கச் செய்திடும். எனவே, போன் செட் அப் செய்திடுகையில், புளுடூத் வசதியை இயங்கா நிலையில் அமைக்கவும். தேவைப்படும்போது மட்டும் பயன்படுத்தவும். இதே போல வை பி வசதியையும் பயன்படுத்தவும். 


7. அப்ளிகேஷன் தணிக்கை: 

உங்கள் போனில் எத்தனை அப்ளிகேஷன்களை அமைத்து இருக்கிறீர்கள் என மாதம் ஒருமுறையாவது தணிக்கை செய்திடவும். பயன்படுத்தாதவற்றை அன் இன்ஸ்டால் செய்திடவும். கேம்ஸ் விளையாடுவது மனதிற்கு புத்துணர்ச்சி அளிக்கும். ஆனால், அவற்றில் நாளடைவில் ஆர்வம் குறைந்துவிட்டால், அன் இன்ஸ்டால் செய்து விடலாம். பயன்படுத்தாத அப்ளிகேஷன்களும், கேம்ஸ்களும், பயன்படுத்தாத நிலையிலும் பேட்டரியின் சக்தியை இழக்க வைத்திடும்.


8. ஆண்ட்ராய்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். சிஸ்டத்திற்கும் இடையே உள்ள ஒரு முக்கிய வேறுபாடு,

ஆண்ட்ராய்ட் சிஸ்டத்தின் வளைந்து கொடுக்கும் தன்மை தான். இதனாலேயே, புதிதாய் ஆண்ட்ராய்ட் பயன்படுத்துபவர்கள், அனைத்தையும் பயன்படுத்த முயற்சிக்கிறார்கள். அனைத்தையும் பயன்படுத்த எண்ணினால், சில முக்கிய பயன்பாடுகளை இழக்க நேரிடும்.9. அப்டேட் குறித்து அலட்சியம் வேண்டாம்: 


பல வேளைகளில் நமக்கு சில அப்ளிகேஷன்களுக்கான அப்டேட் தரவிறக்கம் செய்யப்பட்டுள்ளது. அல்லது, புதிய அப்டேட் உள்ளது. தரவிறக்கம் செய்திடவா? என்ற அறிவிப்புகள் வந்து கொண்டே இருக்கும். ஒரு சிலர் இதனால் தொல்லை ஏற்படுமோ என்று எண்ணி அனுமதி மறுப்பார்கள். சிலர், அலட்சியமாக இருந்துவிடுவார்கள். அப்டேட் குறித்து அறிவிப்புகள் வருவதற்கு காரணம், பெரும்பாலும் அவை போனின் பாதுகாப்பு குறித்த பைல் அப்டேட் ஆகவே இருக்கும். பொதுவாக, ஆப்பிள் நிறுவனம், தான் பெரிய அளவில் மாற்றங்களைத் தருவதாக இருந்தால் மட்டுமே, இது போன்ற எச்சரிக்கைகளை வழங்கும்.

சில வேளைகளில், முன்பாகவே அறிவித்துவிட்டு, தானாகவே ஒரே நேரத்தில், தன் அனைத்து ஐபோன்களிலும் சிஸ்டம் அல்லது அப்ளிகேஷன்களை அப்டேட் செய்திடும். ஆண்ட்ராய்ட் அப்படி அல்ல. சின்ன விஷயங்களுக்குமான அப்டேட் குறித்தும் 
அறிவிக்கும். சில அப்டேட் பைல்களை நம் உதவியின்றி போனில் அப்டேட் செய்திட முடியாது. பொதுவாக, நாம் குறிப்பிட்ட 
கால இடைவெளியில் அப்டேட் செய்து கொண்டே இருக்க வேண்டும். அப்ளிகேஷன் மேனேஜர் பிரிவிற்குச் சென்று, அங்கு அப்டேட் செய்ய வேண்டிய பைல்கள் உள்ளனவா என்று சோதனை செய்து, பின்னர் அப்டேட் செய்திடலாம். அல்லது பிளே ஸ்டோர் சென்றும் இதனை அறியலாம். 

ஆண்ட்ராய்ட் இயங்குதளம் என்பது இப்போது உலகெங்கும் அதிக எண்ணிக்கையில் பயனாளர்களைப் பெற்றுள்ள ஒரு தளமாகும். எனவே, அதற்கு மாறிக் கொள்கையில், சிறிய அளவிலான தவறுகளை நாம் தவிர்க்க வேண்டும். அந்த வகையில் மேலே தரப்பட்டுள்ள குறிப்புகள் நிச்சயம் உங்களுக்குப் பயன்படும்.

கம்ப்யூட்டர் பைல் சிஸ்டம்: தன்மையும் வகைகளும்


Q7ueFfv.gif


கம்ப்யூட்டர்கள் இயக்கத்தைப் பொறுத்த வரை, அதன் அடிப்படைகளில் ஒன்றாக, கம்ப்யூட்டர் இயக்கும் பைல் சிஸ்டம் வகை முக்கியமான ஒன்றாகும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் ஒரு வகை பைல் சிஸ்டத்தினை சப்போர்ட் செய்கின்றன. நாம் எங்கும் எடுத்துச் சென்று பயன்படுத்தக் கூடிய போர்ட்டபிள் ட்ரைவ், அனைத்து சிஸ்டங்களுடன் இணைந்து இயங்க வேண்டும் என்றால் FAT32 வகை பைல் சிஸ்டத்தினைக் கொண்டிருந்தால் நல்லது. அந்த ட்ரைவ் மிகவும் பெரியதாக, அதிகக் கொள்ளளவு கொண்டதாக இருந்தால், அதற்கு என்.டி.எப்.எஸ். (NTFS) பைல் சிஸ்டம் தேவைப்படும். மேக் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்ட ட்ரைவ்களில் HFS+ என்ற பைல் வகை பயன் படுத்தப்படுகிறது. அவை விண்டோஸ் சிஸ்டங்களில் இயங்காது. லினக்ஸ் சிஸ்டம் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தைக் கொண்டு இயங்குகிறது. எனவே, ஒவ்வொரு கம்ப்யூட்டர் பயனாளரும், இந்த பைல் சிஸ்டம் வகைகள் குறித்து அறிந்து கொள்ள வேண்டியதுள்ளது. ஒவ்வொன்றும் வேறு எந்த வகை சிஸ்டத்துடன் இணைந்து இயங்கும் என்பதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். ஏன் இத்தனை வகை பைல் சிஸ்டங்கள் உள்ளன என அதன் அடிப்படைக் கட்டமைப்பினையும் புரிந்து கொள்ள வேண்டியதுள்ளது. இங்கு அவற்றைக் காண்போம்.

 

பலவகை பைல் சிஸ்டங்கள் ஏன் உள்ளன?


pCBTxx6.gif


ஹார்ட் ட்ரைவ், ப்ளாஷ் ட்ரை அல்லது எந்த ஸ்டோரேஜ் மீடியாவாக இருந்தாலும், அவற்றில் பல வகைகளில் பைல்கள் வகைப்படுத்தப்பட்டு ஸ்டோர் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு ஸ்டோரேஜ் மீடியாவும், ஒன்று அல்லது அதற்கும் மேற்பட்ட பிரிவுகளைக் (partitions)கொண்டுள்ளன. ஒவ்வொரு பார்ட்டிஷனும் ஒரு வகை பைல் சிஸ்டத்துடன் பார்மட் செய்யப்பட்டுள்ளன. பார்மட் செய்கையில், அச்செயல்பாடானது, அந்த வகை பைல் சிஸ்டத்தினைக் காலியான நிலையில் அமைக்கிறது. 

ஒரு பைல் சிஸ்டம், குறிப்பிட்ட ட்ரைவில் டேட்டாவினைப் பிரித்து தனித்தனி தகவல் துண்டுகளாக அமைக்க உதவுகிறது. அது மட்டுமின்றி, இந்த பைல்கள் குறித்த தகவல்களையும், பைலின் பெயர், யார், யார் அந்த பைலைப் பார்க்க அனுமதி பெற்றுள்ளனர் மற்றும் பைல் குறித்த பிற பண்புகளையும் ஸ்டோர் செய்திட ஒரு வழி தருகிறது. இதே பைல் சிஸ்டம், ட்ரைவில் ஸ்டோர் செய்யப்படும் பைல்களுக்கான அட்டவணை ஒன்றையும் தயார் செய்து வைக்கிறது. இதன் மூலமே, ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், அந்த ட்ரைவில் பைலைத் தேடுகையில், தேடல் மிக எளிதான செயலாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பிட்ட ஒரு பைல் எளிதாக இடம் அறியப்பட்டு, நமக்குக் கிடைக்கிறது.

நாம் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் இந்த பைல் சிஸ்டத்தினைப் புரிந்து கொள்ளும் வகையில் அமைக்கப் பட்டிருந்தால் தான், அது பைல் ஒன்றில் உள்ள டேட்டாவினைத் தர முடியும், பைல்களைத் திறக்க முடியும் மற்றும் அதனைத் திருத்தி மீண்டும் ட்ரைவில் பதிய முடியும். உங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டம் பைல் சிஸ்டம் ஒன்றை அறிய இயலாமல் போனால், நீங்கள் அந்த பைல் சிஸ்டத்திற்கான சப்போர்ட் தரும் ட்ரைவர் ஒன்றை இன்ஸ்டால் செய்திட வேண்டியதிருக்கும். அவ்வாறு இன்ஸ்டால் செய்யவில்லை என்றால், அந்த ஆப்பரேட்டிங் சிஸ்டத்துடன் அந்த பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்த முடியாது.

அப்படியானால், ஒரே ஒரு பைல் சிஸ்டம் இருக்கலாமே? ஏன் பல இருக்கின்றன? என்ற கேள்விகள் நம் மனதில் எழலாம். அனைத்து பைல் சிஸ்டங்களும் ஒரே தரமானவை அல்ல. வேறுபாடான இந்த பைல் இயக்க முறைகள், வேறுபாடான பல வழிகளில் டேட்டாவினை வகைப் படுத்துகின்றன. சில பைல் சிஸ்டங்கள், மற்றவற்றைக் காட்டிலும், செயல்பாட்டில் வேகத்தைக் கொண்டிருக்கும். சில கூடுதலான பாதுகாப்பினைக் கொண்டிருக்கும். சில மற்றவற்றைக் காட்டிலும் அதிக அளவில் ஸ்டோர் செய்திடக் கூடிய வசதியைப் பெற்றிருக்கும். சில சிஸ்டங்கள் பைல் கெட்டுப் போக வாய்ப்பே இல்லாமல் வடிவமைக்கப்பட்டிருக்கும். 

கம்ப்யூட்டர் பைல்களைக் கொண்டு நாம் மேற்கொள்ளும் பலவகையான செயல்பாடுகளைக் கண்டால், மிகச் சிறந்த்து என ஒரே ஒரு பைல் சிஸ்டத்தினச் சுட்டிக் காட்ட முடியாது என்றே சொல்ல வேண்டும். ஒவ்வொரு ஆப்பரேட்டிங் சிஸ்டமும் தனக்கென ஒரு பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றன. ஆப்பரேட்டிங் சிஸ்டம் வடிவமைப்பவர்களும் இதே பைல் சிஸ்டத்தினைப் பயன்படுத்துகின்றனர். மைக்ரோசாப்ட், ஆப்பிள் மற்றும் லினக்ஸ் சார்ந்த அடிப்படைக் கட்டமைப்பினை உருவாக்குபவர்கள் தங்களுக்குச் சொந்தமான பைல் சிஸ்டத்தினையே பயன்படுத்துகின்றனர். புதியதாக வரும் பைல் சிஸ்டங்கள், நிச்சயமாக, முன்னதாக இருந்த பைல் சிஸ்டங்களைக் காட்டிலும் வேகமாக, நிலைத்த தன்மை கொண்டவையாக, அதிகக் கொள்ள்ளவில் டேட்டா ஸ்டோர் செய்யக் கூடியவையாக உள்ளன. இவை கூடுதல் வசதிகளையும் கொண்டுள்ளன. பைல் சிஸ்டம் ஒன்று உருவாக்கப்படுவது எளிதான செயல் அல்ல. இந்த சிஸ்டம் எப்படி பைல்கள் அமைக்கப்பட வேண்டும், அவை எப்படி வகைப்படுத்தப்பட வேண்டும், அட்டவணைப் படுத்தப்பட வேண்டும் மற்றும் அவை சார்ந்த தகவல்கள் எப்படி, எங்கு அமைக்கப்பட வேண்டும் என்பதனைக் கொண்டிருக்கின்றன.பொதுவான சில பைல் சிஸ்டங்கள் txN2lmh.jpg1. FAT32:

 இந்த வகை பைல் சிஸ்டம் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் மிகப் பழைய வகை பைல் சிஸ்டத்தினைச் சேர்ந்ததாகும். கம்ப்யூட்டர்களில் இணைத்து பயன்படுத்திப் பின்னர் எடுத்துச் செல்லக் கூடிய சிறிய அளவிலான மீடியாக்களில், இந்த வகை பைல் சிஸ்டம் இன்னும் பயன்படுத்தப் படுகிறது. மிகப் பெரிய கொள்ள்ளவிலான, 1 TB, மீடியாக்கள் NTFS பைல் சிஸ்டத்தில் பார்மட் செய்யப்பட்டு கிடைக்கின்றன. இந்த வகை பைல் சிஸ்டத்தினை, சிறிய அளவிலான ஸ்டோரேஜ் மீடியாக்களில், அல்லது டிஜிட்டல் கேமராக்கள், செட் டாப் பாக்ஸ்கள், மற்றும் கேம் சாதனங்களில் ஒத்த வகைக்காகவும், என்.டி.எப்.எஸ். வகை சப்போர்ட் செய்யப்படாமல் உள்ள மீடியாக்களிலும்,FAT32 பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. 


2. NTFS: 

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் வரிசையில் எக்ஸ்பிக்குப் பின்னால், ட்ரைவ் பிரிப்பதற்கு NTFS பைல் சிஸ்டம் பயன்படுத்தப்படுகிறது. வெளியில் இருந்து இணைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் ட்ரைவ்கள், FAT32 அல்லது NTFS பைல் சிஸ்டத்தால், பார்மட் செய்யப்படுகின்றன. 

3. HFS+: 

ஆப்பிள் நிறுவனத்தின் மேக் கம்ப்யூட்டர்களில் உள்ளாகவும், வெளியே இணைத்துப் பயன்படுத்தும் ட்ரைவ்களை HFS+ பைல் சிஸ்டம் கொண்டு பிரிக்கின்றன. ஆனால், மேக் சிஸ்டங்கள் வழியாக, FAT32 சிஸ்டத்திலும் எழுதலாம். இதில் NTFS பைல் சிஸ்டத்தில், பைல்களில் எழுத வேண்டும் என்றால், அதற்கான தர்ட் பார்ட்டி சாப்ட்வேர் புரோகிராம்களைப் பயன்படுத்த வேண்டும்.

4. Ext2, Ext3, மற்றும் Ext4: 


லினக்ஸ் குறித்துப் பேசுகையில், Ext2, Ext3, மற்றும் Ext4 என்ற பைல் சிஸ்டங்கள் குறித்து கேட்டிருப்பீர்கள். Ext2 என்பது மிகப் பழைய பைல் சிஸ்டம். இந்த பைல் சிஸ்டத்தில் எழுதுகையில், மின் தடை ஏற்பட்டு எழுதுவது நின்று போனால், டேட்டா அனைத்தும் கெட்டுப் போய், மீட்டு எடுக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படும். இந்த பிரச்னை இல்லாத வகையில் Ext3 பைல் சிஸ்டம் உருவானது. ஆனால், இதன் செயல் வேகம் மிகவும் குறைவாக இருந்தது. Ext4 பைல் சிஸ்டம் அண்மைக் காலத்தில் உருவான நவீன பைல் சிஸ்டமாகும். விரைவாகச் செயல்படக் கூடியது. இப்போது பயன்படுத்தப்படும் அனைத்து லினக்ஸ் சிஸ்டங்களிலும், இதுவே மாறா நிலையில் உள்ள பைல் சிஸ்டமாக உள்ளது. லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் FAT32 மற்றும் NTFS பைல் சிஸ்டங்களில் எழுதவும், அதில் அமைந்த டேட்டாவினைப் படிக்கவும் திறன் கொண்டதாகும்.

5. Btrfs — “better file system”: 

லினக்ஸ் சிஸ்டத்தின் புதிய பைல் சிஸ்டமாகும். இது இன்னும் வடிவமைக்கப்படும் நிலையிலேயே உள்ளது. தற்போது பயன்படுத்தப்படும் பெரும்பாலான லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், இது மாறா நிலை பைல் சிஸ்டமாக இல்லை. ஆனால், விரைவில் Ext4 பைல் சிஸ்டம் இடத்தினை இது பிடித்துவிடும். மிக அதிக அளவில், டேட்டாவினை ஸ்டோர் செய்திட இந்த பைல் சிஸ்டம் வழி தரும்.

6. Swap: 


லினக்ஸ் சிஸ்டத்தில் இந்த ”Swap” பைல் சிஸ்டம் ஒரு பைல் சிஸ்டமே அல்ல. இதன் அடிப்படையில், ட்ரைவில் பார்ட்டிஷன் உருவாக்கிய பின்னர், இதனை ஆப்பரேட்டிங் சிஸ்டம் தனக்குத் தேவையான போது பயன்படுத்திக் கொள்ளும். இதனால், இதற்கென தனியே ஒரு பார்ட்டிஷனை, லினக்ஸ் சிஸ்டத்தில் உருவாக்க வேண்டியதுள்ளது.

இன்னும் பல பைல் சிஸ்டங்கள் இருந்தாலும், மேலே கூறப்பட்டவையே, பெரும்பாலான கம்ப்யூட்டர் பயனாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை ஆகும். அப்போதுதான், ஏன் ஒரு பைலை ஒரு குறிப்பிட்ட சிஸ்டத்தில் படிக்க முடியவில்லை போன்ற கேள்விகளுக்கு, அவர்களே விடை தெரிந்து கொள்வார்கள்
  • 0

உடல் சுத்தத்திற்கு வழிகள்

பெண்கள் பேண்ட், கோட், டை, சாக்ஸ் போன்றவைகள் அணிவதை கோடை காலம் முடியும் வரை தவிர்க்கலாம். இளம் நிறத்திலான, இறுக்கிப் பிடிக்காத ஆடைகளை அணியவேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் தலையிலும், உடலிலும் எண்ணெய் தேய்த்து குளிக்கவேண்டும். 

குளிக்கும்போது சோப் பயன்படுத்துவதற்கு பதில், பச்சை பயறு மாவை பயன்படுத்த வேண்டும். குளிக்க பயன்படுத்தும் நீரில் சிறிதளவு கல்உப்பு கலந்து குளித்தால் உடலில் வியர்வை நாற்றம் ஏற்படாது. 

சிறிதளவு பசுவின் பால் கலந்த நீரில் உடலை கழுவினால், சருமத்திற்கு மிருதுதன்மை கிடைக்கும். வியர்வை அதிகமாக வெளியேறுவதால், உடலில் உள்ள வியர்வை துவாரங்கள் அடைபடும். உடலை அவ்வப்போது நன்றாக கழுவி சுத்தம் செய்யாவிட்டால் வியர்க்குரு தோன்றிவிடும். 

வெயிலில் வெளியே போய்விட்டு வந்து குளிர்ந்த நீர் பருகுவது, ஏ.சி. அறைக்குள் புகுந்துகொள்வது போன்றவை நல்லதல்ல. வெயிலால் ஏற்படும் உடல் சீதோஷ்ண நிலை சமச்சீரான பின்பே ஏ.சி.யை பயன்படுத்தவேண்டும். 

கருமை நிறத்தை போக்கும் கடலை மாவு ஃபேஷியல்

கோடை வெயிலினாலும், தூசுக்களினாலும் சருமம் அதிகம் பாதிப்பிற்குள்ளாகிறது. இழந்த அழகை மீட்க வீட்டில் அன்றாடம் சமைக்கப் பயன்படுத்தப்படும் பொருட்களே போதுமானது. 

• இந்தியாவில் பாரம்பரியமாக பயன்படுத்தப்படும் பொருட்கள் கடலைமாவு, மஞ்சள்தூள். இரண்டுமே உடல் ஆரோக்கியத்திற்கும். சரும ஆரோக்கியத்திற்கும் நன்மை தரக்கூடியவை. ஒரு கிண்ணத்தில் கடலைமாவு ஒரு சிட்டிகை மஞ்சள்தூள் சேர்த்து அதனுடன் சிறிதளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல செய்து முகத்தில் பூசி உலர வைக்கவும். அரைமணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். சருமம் மென்மையாகும். 

• இரண்டு ஸ்பூன் கடலை மாவில் சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியாக பிசையவும். அதனை முகத்தில் நன்றாக பேக் போட்டு ஊறவிடவும். நன்றாக உலர்ந்த பின்னர் குளிர்ந்த நீரில் கழுவினால் முகம் பளிச் என்று ஆகும். அதேபோல் குளிக்கும் போது கடலைமாவு பூசி குளித்தால் சருமம் வழுவழுப்பாகும். சுருக்கமின்றி இளமையோடு காட்சியளிக்கலாம். 

• இரண்டு ஸ்பூன் கடலைமாவுடன், 4 ஸ்பூன் பால், 2 ஸ்பூன் ரோஸ் வாட்டர் சேர்த்து கலக்கவும். இந்த கலவையை நன்றாக முகத்தில் பூசவும், சருமம் கருப்பாக உள்ள இடங்களிலும் இந்த கலவையை பூசி ஊறவைக்கவும். பத்து நிமிடம் கழித்து இதனை குளிர்ந்த நீரில் கழுவ சருமம் மென்மையாகும் இளமையோடு காட்சி தரும். 

• சருமம் எண்ணெய் வழிந்து பிசுபிசுப்பாக இருந்தால் அதற்கு கடலைமாவுடன் தயிர் சேர்த்து பேஷியல் போடுவது முகத்தை பொலிவாக்கும். ஒரு கிண்ணத்தில் கடலைமாவு எடுத்து அதில் தயிர், எலுமிச்சை சாறு ஊற்றி நன்றாக கலந்து முகத்தில் அப்ளை செய்யவும். சில நிமிடங்கள் ஊறவைத்து வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இதனால் தேவையற்ற எண்ணெய் பசை காணாமல் போவதோடு முகம் புத்துணர்ச்சியாகும். 

• தோலுடன் இருக்கும் கடலைபருப்பு அரை கிலோ துளசி இலை 50 கிராம், வேப்பங்கொழுந்து 5 கிராம் இவற்றை நிழலில் உலர்த்தி. நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிண்ணத்தில் இரண்டு ஸ்பூன் போட்டு அதில் இரண்டு துளி எலுமிச்சை சாறு சேர்த்து முகத்துக்கு "பேக்" போட்டு 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான தண்ணீரால் முகத்தைக் கழுவுங்கள். வாரம் ஒரு முறை இதைச் செய்து வந்தால், பளபளவென்று முகம் பிரகாசிக்கும்.

முகப்பரு உள்ளவர்களுக்கான உணவுக்கட்டுப்பாடு

பெண்களின் அழகான கன்னங்களுக்கு அவ்வப்போது அச்சுறுத்தலாகத் தோன்றுவது முகப்பருக்கள். பருக்கள் வராமல் இருக்க வேண்டும் என்றால் மலச்சிக்கல் வராத அளவுக்கு வயிற்றைப் பராமரிக்க வேண்டும். பொடுகுத் தொல்லை,​ ஹார்மோன் பிரச்சனை,​ நகத்தினை வளர்த்தல்,​ முறையற்ற உணவுப் பழக்கம்,​ உணவில் அதிக அளவு எண்ணெய் பயன்படுத்துதல் போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். 

முகப்பருக்கள் வராமல் தடுப்பதற்கு உணவுக்கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய மென்மையான உணவுகளை உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும். 

தலையணை உறை,​ சோப்,​ டவல் போன்றவைகளை தனித்தனியாக ஒவ்வொருவரும் வைத்து தங்களுக்கு மட்டும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். முகப்பரு இருக்கும் ஒருவர் பயன்படுத்தும் இத்தகைய பொருட்களை இன்னொருவர் பயன்படுத்தும் போது அவருக்கும் இது பரவக்கூடும். குளிப்பதற்கும் சுத்தமான தண்ணீரைப் பயன்படுத்த வேண்டும். 

தண்ணீர் நிறைய பருக வேண்டும். முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவ்வப்போது வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவி சுத்தப்படுத்த வேண்டும். ​ பப்பாளிச் சாற்றினை முகத்தில் பூசி வர பருவுக்கு இயற்கையான சிகிச்சை கிடைக்கும். 

ஆப்பிள் பழத்தை நன்றாக மசித்து அதில் ஒரு டீஸ் பூன் தேன் கலந்து முகத்தில் பூசி வர பரு மறையும். வாரம் இருமுறை முகத்தில் அப்ளை செய்யவேண்டும். இப்படியெல்லாம் முன்னெச்சரிக்கையாக இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வரலாம்.