கடவுளை வணங்குவதற்கு நமக்கு விருப்பமான எந்த ரூபத்தையும் நாமே தேர்ந்தெடுத்துக் கொள்ள இந்து தர்மத்தில் மட்டுமே சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறான சுதந்திரம் வேறெந்த மதத்திலும் கொடுக்கப்படவில்லை என்பதை நாம் கவனிக்க வேண்டும். இதற்கு, காரணம் என்ன? விளக்கமாக பார்க்கலாம்.
நமக்குள் இருக்கும் பல குணங்கள்
ஒரு மூளை ஒரு உடல் மட்டுமே கொண்ட நமக்கு எத்தனை குணங்கள். நாமே ஒருவருக்கு நல்லவராகவும் ஒருவருக்கு கெட்டவராகவும் தெரிகிறோம்.  நமக்குள்ளே எத்தனை உணர்வுகள் பாசம், கோபம், அமைதி, காதல் மற்றும் காமம் என்று பல ரூபங்களை எடுக்கிறோம்.  வீட்டில் உள்ளவர்களிடம் பாசத்துடன் பழகும் நாம் அலுவலகத்தில் மேலதிகாரியுடன் பழகும் போது பயத்துடன் பழகுகிறோம். இப்படி நாம் ஒருவரே வெவ்வேறான நபராக நம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் போது.  இந்த பிரபஞ்சத்தின் ஒட்டு மொத்த சக்தியான கடவுளுக்கு மட்டும் பல உருவங்கள் இருப்பதில் தப்பு இல்லை, மேலும் நாம் இந்த பல உருவ வழிபாட்டில் உள்ள மனோவியல் ரீதியான உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கடவுளை தேர்வு செய்தல்
ஒவ்வொரு மனிதரும் அவரவர் குணங்களுக்கு ஏற்பவே நண்பர்களையே தேர்ந்தெடுப்பார்கள். அப்படியிருக்க தாங்கள் வணங்கும் கடவுளும் தங்களுக்கு பிடித்த மாதிரியான குணாதிசய‌ங்களுடன் இருக்க வேண்டும் என்று விரும்புவது இயல்பானதே. தம்மை வழிநடத்தும் கடவுள் எப்படி இருக்க வேண்டும் என்ற ஒவ்வொருவரின் கற்பனையே அவன் விரும்பும் கடவுளாகவும் மாறுகிறது. எப்படி என்றால்,
  • அமைதியான, அன்பான‌ அதே நேரம் வீரமுள்ள கடவுளை வழிபட வேண்டுவோர் இராமரையும், 
  • எந்த துன்பத்திலுருந்தும் தம்மைக் காக்கும் சூத்திரதாரி வேண்டுவோர் கிருஷ்ணரையும்,
  • பயந்த சுபாவம் கொண்டவர்கள் பயங்கர ஆயுதங்கள் கொண்ட‌ கடவுளை காக்கும் தெய்வங்களாகவும், 
  • அதிக கோபம் மற்றும் சமூக அக்கிரமங்களை கொடூரமாக அழிப்பதே சரி என்று மனோவியல் ரீதியாக எண்ணுபவர்கள் பத்திரகாளி போன்ற ரத்த மயமான தெய்வங்களையும், 
  • கடவுளை தாயாக பாவிக்க நினைப்பவர்கள் மீனாட்சி , காமட்சி , மாரியம்மன் என்ற பெண் தெய்வங்களையும்
  • சிலர் இயற்கையின் மீதும் வினோத படைப்புக்கள் மீதும் ஈர்க்கப்பட்டால் அவர்கள் மனித உருவும் விலங்கு உருவும் கொண்ட வித்தியாசமான தெய்வங்களான பிள்ளையார், அனுமார் போன்ற கடவுளை தேர்ந்தெடுப்பர்.
பக்திக்கு
நாம் பக்தி செலுத்தவும் தியானிக்கவும் ஒரு உருவம் தேவை. ஒரே உருவத்தின் மீது எல்லோருக்கும் ஈர்ப்பு ஏற்படுவது நடைமுறைக்கு ஒத்து வராது. எனவே ஒரு உருவத்தை மனக்கண் முன்னே நிறுத்தி தியானிப்பதற்கும், பக்தியை மனதில் இருத்தி ஒரு நிலைப்படுத்தி அமைதிபடுத்த நமக்கு பிடித்தமான ஒரு உருவம் தேவை. அதை தேர்ந்தெடுக்கும் உரிமை இந்து தர்மத்தில் உள்ளது. மேலும்,  இந்து தர்மத்தில் உள்ள ஒருவர் ஒரு உருவ வழிபாட்டின்  மீது நம்பிக்கை போனால் கூட அவன் இன்னொரு உருவ வழிபாட்டை தேர்ந்தெடுத்துக் கொள்வான். அவனது நம்பிக்கை உருவத்தின் மீது தான் இல்லாமல் போகுமே ஒழிய அவன் பின்பற்றும் தர்மத்தின் மீது நம்பிக்கை போகாது. இதுவே இந்து தர்மத்தின் சூட்சுமம்.  இந்து தர்மம் என்பது மனோவியலும் அறிவியலும் ஆகும்.
கடவுளை உறவுமுறை, முன்னேற்றம்  மற்றும் தொழில்ரீதியாக கும்பிடும் பழக்கம் இந்து  மதத்தில் மட்டும் தான்
  • தாயாக – அம்மன்
  • தந்தையாக – சிவன்
  • நண்பனாக – பிள்ளையார், கிருஷ்ணன் 
  • குருவாக – தட்சிணாமூர்த்தி  
  • படிப்புக்காக – சரஸ்வதி
  • செல்வமகளாக – லக்ஷ்மி 
  • செல்வமகனாக – குபேரன் 
  • மழையாக – வருணன்  
  • நெருப்பாக – அக்னி 
  • அறிவுக்கு, தமிழ் மொழிக்கு – முருகன்  
  • வழிகாட்டியாக – பார்த்தசாரதி 
  • உயிர் மூச்சாக – வாயு 
  • காதலாக – மன்மதன் 
  • மருத்துவனாக – தன்வந்திரி 
  • வீரத்திற்கு – மலைமகள் 
  • ஆய கலைக்கு – மயன் 
  • கோபத்திற்கு – சிவன்
  • ஊர்க்காவலுக்கு – ஐயனார் 
  • வீட்டு காவலுக்கு – பைரவர் 
  • பாலுக்கு – காமதேனு 
  • கற்புக்கு – சீதை 
  • நன் நடத்தைகளுக்கு – ராமன் 
  • பக்திக்கு – அனுமன் 
  • குறைகளை கொட்ட – வெங்கடசலபதி
  • வாஸ்துக்கு – வாஸ்து புருஷன் 
  • கூப்பிட்ட குரலுக்கு – சக்கரத்தாழ்வார், மாயக் கிருஷ்ணன்
  • போர்ப்படைகளுக்கு – வீரபாகு 
  • பரதத்திற்கு – நடராஜன் 
  • தாய்மைக்கு – அம்பிகை 
  • அன்னத்திற்கு – அன்னபூரணி
  • மரணத்திற்கு – யமன் 
  • பிறப்பிற்கு – பிரம்மன் 
  • சுகப் பிரசவத்திற்கு – கர்ப்பரட்சாம்பிகை
இது உதாரணம் தான் இன்னும் நிறைய உள்ளது.  எனக்கு தெரிந்ததை சேர்த்து இருக்கிறேன்.